கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கலேரி உயர்நிலைப்பள்ளி என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணகிரி வட்டத்தில், கிருஷ்ணகிரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கங்கலேரி கிராமத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி ஆகும்.[1] [2] இப்பள்ளி 1978 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு உயர்நிலைப் பள்ளியாக தற்போது செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியர், 12 பட்டதாரி ஆசிரியர்கள், 3 இடைநிலை ஆசிரியர்கள், 1 ஓவிய ஆசிரியர், 1 தையல் ஆசிரியர், 1 உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கங்கலேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்றம் தொடக்கம்". செய்தி. தினகரன். 10 சூலை 2017. Archived from the original on 2017-07-12. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2017.
  2. "அரசு பள்ளியில் இலக்கிய மன்றம் துவக்க விழா". செய்தி. தினமலர். 10 சூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2017.