விஜய குமார் யோமகேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோ மகேஷ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்விஜய குமார் யோமகேஷ்
பிறப்பு21 திசம்பர் 1987 (1987-12-21) (அகவை 36)
சென்னை, இந்தியா
பட்டப்பெயர்யோமி
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை விரைவு வீச்சு
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2008–2010டெல்லி கேபிடல்ஸ்
2011–2012சென்னை சூப்பர் கிங்ஸ்
தமிழ்நாடு துடுப்பாட்ட அணி
2021நார்தன் வாரியர்ஸ்-அபு தாபி
இருபது20 ஓவர் போட்டிகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை மு.த.ஆ ப.அ.து இருபது20
ஆட்டங்கள் 50 61 46
ஓட்டங்கள் 1119 326 96
மட்டையாட்ட சராசரி 26.02 13.04 9.60
100கள்/50கள் 2/5 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 103ஆட்டமிழக்காதவர் 55 17*
வீசிய பந்துகள் 7132 1665 929
வீழ்த்தல்கள் 108 93 52
பந்துவீச்சு சராசரி 35.31 24.67 23.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 6/47 5/31 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/0 18/0 13/0
மூலம்: Cricinfo, 20 டிசம்பர் 2020

விஜய குமார் யோமகேஷ் (Vijaykumar Yo Mahesh) (பிறப்பு: டிசம்பர் 21, 1987), தமிழ்நாடு அணிக்காக விளையாடிய முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் 21 டிசம்பர் 1987ம் ஆண்டு பிறந்தவர். வலது மட்டைப் பந்து ஆட்டக்காரர் மற்றும் வலது கை பந்து வீசும் திறன் படைத்தவர். சென்னையில் உள்ள செயின்ட் பேட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

அறிமுகம்[தொகு]

இவர் செப்டம்பர் 2005 இல் ஆத்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒரு நாள் அணியில் நுழைந்தார். மேலும், இலங்கையில் நடந்த ஆப்ரோ-ஆசிய கோப்பை மற்றும் 2006 க்கு உட்பட்ட 19 வயதிற்குட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக் கோப்பை இரண்டிலும் அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள போதுமான அளவு விளையாடினார்.[2]

19 வயதிற்குட்பட்டோருக்கான பத்து போட்டிகளில் இவர் 15 ஆட்டக்காரர்களை வீழ்த்தினார். சராசரியாக 32 பந்துகளில் ஒரு ஆட்டக்காரரை வீழ்த்தினார். மட்டை பந்து அடிப்பதில் இவர் திறன் குறைவாக பெற்றிருந்ததால், பதினோராவது ஆட்டக்காரராக மைதானத்தில் இறக்கப்படுவார். 2008 முதல் 2010 வரையான ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக இந்தியன் பிரீமியர் லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.[3] பின்னர் 2011 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர், 2012 இந்தியன் பிரீமியர் லீக்கின் முடிவில் விடுவிக்கப்பட்டார். இந்தியாவின் உள்நாட்டு 50 ஓவர் போட்டியான 2009-10 விஜய் ஹசாரே டிராபியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் வலது-இடது என இரு திசைகளிலும் பந்தை சுழற்றும் திறன் பெற்றவர்.

ஓய்வு[தொகு]

20 டிசம்பர் 2020 அன்று, மகேஷ் அனைத்து வகையான துடுப்பாட்டங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Yo Mahesh". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
  2. "ICC Under-19 Cricket World Cup 2006 - Team Squads". Sri Lanka Sports. Archived from the original on 24 April 2016. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
  3. "Once upon an IPL". Cricket Monthly. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.
  4. "Former Tamil Nadu and CSK seamer Yo Mahesh retires from all forms of cricket". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 December 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_குமார்_யோமகேஷ்&oldid=3726896" இலிருந்து மீள்விக்கப்பட்டது