பீகார் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீகார் தினம்
𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮
பிற பெயர்(கள்)பீகார் தினம், பீகார் நிறுவிய தினம்
கடைபிடிப்போர்பீகார், இந்தியா
வகைState
தொடக்கம்22 மார்ச், 1912
நாள்22 மார்ச்
நிகழ்வுஆண்டுதோறும்

பீகார் தினம் (𑂥𑂱𑂯𑂰𑂩 𑂠𑂱𑂫𑂮)[1] என்பது பீகார் மாநிலம் உருவானதை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் ஒரு நாளாகும். 1912 ஆம் ஆண்டு இதே நாளில் வங்காள மாகாணத்திலிருந்து இந்த மாநிலத்தை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.[2][3] இந்த நாள் பீகாரில் பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[4]  நிதிஷ்குமார் ஆட்சிக்காலத்தில் பீகார் தினம் பீகார் அரசாங்கத்தால் துவங்கப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவைத் தவிர அமெரிக்க ஐக்கிய நாடு , ஐக்கிய இராச்சியம், ஜெர்மனி[5], இசுக்கொட்லாந்து[6], ஆத்திரேலியா, கனடா, பகுரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், டிரினிடாட் மற்றும் டொபாகோ, மற்றும் மொரிசியசு  போன்ற நாடுகளிலும் பீகார் தினம் கொண்டாடப்படுகின்றது]].[7]

கடைபிடித்தல்[தொகு]

பீகார்அரசு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் நாளை பீகார் தினமாக கொண்டாடுவதற்கான அறிவிப்பினை வெளியிடுகிறது. இந்த விடுமுறை மத்திய மற்றும் மாநில அரசு அதிகார வரம்பில் வரும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதே போல் பள்ளிகளில் இந்த நாளை மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடுகின்றனா்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "बिहार दिवस विशेष: ऐसे अस्तित्व में आया अपना बिहार, ...जानें". MPost (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-03-22. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Stage set for 105th Bihar Diwas".
  3. "Bihar Diwas: Sunidhi Chauhan to perform at Gandhi Maidan on Mar 22".
  4. "Bihar Diwas marks public Holiday in Bihar". news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
  5. "26 मई को जर्मनी में मनेगा बिहार दिवस, ...जानिए". Live Bihar News | लाइव बिहार न्यूज़ (in இந்தி). 2018-03-30. Archived from the original on 2019-09-22. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  6. "सात समंदर पार स्कॉटलैंड के पटना में कुछ इस तरह मनाया गया बिहार दिवस", Live Bihar News | लाइव बिहार न्यूज़ (in இந்தி), 2018-03-21, archived from the original on 2018-03-21, பார்க்கப்பட்ட நாள் 2018-03-21
  7. "Bihar Day to be celebrated in seven countries". news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_நாள்&oldid=3822998" இலிருந்து மீள்விக்கப்பட்டது