கிரீன்லாந்து பனிப்பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீன்லாந்தின் பனிப்பகுதி
Topographic map of Greenland without its ice sheet.

கிரீன்லாந்தின் பனிப்பகுதி (கிரீன்லாந்து தீவு, கிரீன்லாந்து மொழி: செர்மெர்சுயூக்) என்பது 1,710,000 சதுர கிலோமீட்டர் (660,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது, இது கிரீன்லாந்து நிலப்பரப்பில் சுமார் 80% ஆகும்.

இது, அண்டார்க்டிக்கின் பனிப்பகுதிக்குப் அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய பனி அமைப்பு ஆகும்.கிரீன்லாந்தின் பனிப்பகுதி வடக்கு-தெற்கு திசையில் சுமார் 2,400 கிலோமீட்டர் நீளமுடையதாக உள்ளது, அதன் மிகப்பெரிய அகலம் 1,100 கிலோமீட்டர் (680 மைல்) ஆகும்.இப்பகுதி 77 ° டக்கு அகலாங்கில் அதன் வடக்கு எல்லைக்கு அருகே .உள்ளது. இதன் பனி உயரம் 2,135 மீட்டர் (7,005 அடி) ஆகும். இதன் தடிமன் பொதுவாக 2 கிமீ (1.2 மைல்) க்கும் மேற்பட்டது. இதன் மிக அடர்த்தியான பகுதியில் 3 கிமீ (1.9 மைல்) அளவு தடிமனுக்குக் காணப்படுகிறது.இது கிரீன்லாந்தின் பனிப்பொழியும் சிறிய பனிச்சிகரங்களைக் கொண்டு 76,000 முதல் 100,000 சதுர கிலோமீட்டர் (29,000 முதல் 39,000 சதுர மைல்) பரப்பளவில் கிரீன்லாந்தைச் சுற்றிப் பரவலாகக் காணப்படுகிறது.

இங்குள்ள மொத்தப் பனியும் (2,850,000 கனசதுர கிலோமீட்டர்) (684,000 cu mi) உருகினால், அது உலக கடல்நீர் அளவை 7.2 மீட்டர்(24 அடி) உயரத்திற்கு அதிகரித்துவிடும்.