சிம்னிவிளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்னிவிளக்கு மண்ணெண்ணெயில் எரியும் விளக்கு வகையைச் சார்ந்தது. இது சிறிய வடிவத்தில் காணப்படும். கையடக்கப்பயன்பாட்டிற்கு உகந்தாக முற்காலங்களில் மக்களால் பெரிதும் பயன்பாட்டில் வைத்திருந்த விளக்கு வகையாகும்.

சொல் விளக்கம்[தொகு]

சிம்னிவிளக்கு

Ta-சிம்னி விளக்கு
செல் விளக்கம்
சிம்னி புகைபோக்கி
விளக்கு விளக்கிக் காட்டுவது( காண்களுக்குப் புலனாகும் படி )

மண்ணெண்ணெய் விளக்கு; மேற்பகுதியில் சிறிய ஓட்டையை உடைய நீண்டவடிவம் கொண்ட கண்ணாடிக் கூண்டு ஒன்று திரியைச் சுற்றி பொருத்தப்பட்டிருக்கும்.

விளக்கின் பொதுத் தன்மைகள்[தொகு]

  1. தனது ஒளியால் பொருட்களை விளக்குவது
  2. காண்பவர்களுக்குக் காட்சிப்பொருளின் உறுதித்தன்மையை விளக்குவது
  3. காட்சிப் பொருளை ஐயமற அறிவிப்பது
  4. விளக்கப்பொருளை தெளிவுடன் புரியவைப்பது.

விளக்கின் தொன்மம்[தொகு]

முற்காலத்தில் மக்கள் இரவுநேர இருள் காரணமாக ஏற்படுகின்ற பன்முகப் பாதிப்புகளுக்குச் சரியான அதேசமயத்தின் நீண்ட நெடிய காலத்துக்குமான தீர்வு ஒன்றினை உருவாக்க எண்ணினார்கள். அவ்வாறு காணமுற்பட்டதன் விளைவே இன்று வெளிச்சம் என்ற பயனைத் தருகின்ற விளக்கு எனும் அம்சத்தை உருவாக்கத் தூண்டியது.

தீப்பந்தம்[தொகு]

burning torch - ஆங்கிலம்

  • நீண்ட கழியின் ஒரு முனையில் திரி, துணி, எண்ணெய் போன்றவை இடப்பட்டு பற்றவைக்கப்படும். இவை எரிவதால் வெளிச்சம் உண்டாகி விளக்காகப் பயன்படுத்தப்படும்

விளக்கம்[தொகு]

குச்சி ஒன்றில் துணியைச் சுற்றி அவற்றின்மேல் விலங்குகளின் கொழுப்புகளைத் தடவி அவற்றின் மூலமாக சிறிது நேரம் வரை எரியும் வகையில் இன்றைக்கு வெளிச்சத்திற்ககாக நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கின்ற விளக்கு என்ற ஒன்றின் முன்வடிவத்தினை நமது முன்னோர்கள் தீப்பந்தம் ( தீவட்டி ) எனும் பொருளாகக் கண்டுபிடித்தனர். இருளை நீக்கும் வெளிச்சப் பாதையை முதன்முதலில் தொடங்கி வைத்தனர்.

பயன்பாட்டுக் குறைபாடு[தொகு]

தீப்பந்தங்கள் காற்றுவெளியில் எரிவதால் அளவிற்கதிகமான காற்று வீசுகின்றபோது அணைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அணையா விளக்கு[தொகு]

இக்கால கட்டத்தில் அணையாத விளக்கினை உருவாக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் வடிவமைக்கப்பட்டது சிம்னிவிளக்காகும் [1]

சிம்னிவிளக்கின் அமைப்பு[தொகு]

இவ்விளக்கினை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்

  1. எண்ணெய் ஊற்றும் பகுதி
  2. திரி ஏற்றும் பகுதி
  3. திரியைச் சுற்றிய கண்ணாடிக் குடுவைப் பகுதி ( புகை போக்கும் பகுதி )

சிறப்பம்சங்கள்[தொகு]

  • தேவைக்கு ஏற்ப எண்ணெயை நிரப்பிக்கொள்ளலாம்
  • வெளிச்சத் தேவைக்கேற்ப திரியை ஏற்றிக்கொள்ளமுடியும்
  • திரியைச் சுற்றி கண்ணாடிக் குடுவை உள்ளதால் காற்றில் அணைந்துவிடும் வாய்ப்புக் குறைவு

விடிவிளக்கு[தொகு]

மின்சாரம் இல்லாத காலகட்டங்களி்ல் மக்கள் இந்த விளக்கினைத்தான் இரவு நேரங்களில் வெளிச்சத்தைக் குறைத்து விடிவிளக்காகப் பயன்படுத்தி வந்தனர். குறைந்த வெளிச்சத் தேவைக்கு சிம்னிவிளக்கு பெரிதும் பலரால் பயன்படுத்தப்பட்டது.

வேறுபெயர்[தொகு]

இந்த சிம்னிவிளக்கிற்கு முட்டைக்கிளாஸ் விளக்கு என்ற மற்றுமொரு பெயருமுண்டு.

தற்காலப் பயன்பாட்டுநிலை[தொகு]

200 மில்லி மண்ணெண்ணெயில் இரவு முழுதும் எரியும் தன்மை கொண்ட சிம்னிவிளக்குகள் தற்போதைய காலங்களில் அதிகம் பயன்பாட்டில் இல்லை. மின்சாரயுகமான இக்காலத்தில் எங்கும் இரவைப் பகலாக்கும் பல்வகை மற்றும் பலவடிவ விளக்குகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். [2] எரிபொருள் தட்டுப்பாடும் இந்த விளக்கு மக்களின் புழக்கத்திலிருந்து விலகிப்போனதற்கு மற்றுமொரு காரணமாகும்.

அடுத்த பரிணாமம்[தொகு]

  • ஒன்று பிறிதொன்றாகப் படிப்படியாக மாறுகை
  ஆங்கிலம் - evolution, transformation,modification

சிம்னிவிளக்கின் பயன்பாட்டுக் குறைபாடுகளை அதாவது குறைந்த வெளிச்சம் புகையின் அளவு இவற்றை மாற்றி புதிய பயன்பாட்டு வசதிகளோடு உருவாக்கப்பட்ட மற்றுமொரு வெளிச்சச் சாதனமே அரிக்கேன் விளக்காகும். இவ்வகை விளக்கும் மக்கள் பயன்பாட்டில் அரிதாகவே காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்னிவிளக்கு&oldid=3728247" இலிருந்து மீள்விக்கப்பட்டது