குட்டியாரி லால் துவேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குட்டியாரி லால் துவேஷ்
உத்தரப் பிரதேசத்தின் 16வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2012 – 2017
முன்னையவர்ஜுல்பிகர் அகமது பூட்டோ
பின்னவர்கிரிராஜ் சிங் தர்மேஷ்
தொகுதிஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேசத்தின் 15வது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
மே 2007 – மார்ச் 2012
முன்னையவர்ராம் பாபு ஹரித்
தொகுதிஆக்ரா மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1970 (1970-02-12) (அகவை 54)
பரத்பூர்
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபகுஜன் சமாஜ் கட்சி
துணைவர்முன்னி தேவி துவேஷ்
பெற்றோர்அகாலி ராம் (தந்தை)
வாழிடம்(s)ஆக்ரா, (உத்தரப் பிரதேசம்)
தொழில்தொழிலதிபர் & அரசியல்வாதி

குட்டியாரி லால் துவேஷ் (Gutiyari Lal Duwesh) ஒரு இந்திய அரசியல்வாதியாவார். உத்தரப் பிரதேசத்தின் 15, 16 ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தார். இவர், ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். உத்தரபிரதேசத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அரசியல் கட்சி உறுப்பினராக இருந்த இவர், 12 மார்ச் 2019 அன்று, பகுஜன் சமாஜ் கட்சியை விட்டு வெளியேறி லக்னோவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [1][2][3]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

1970 ஆம் ஆண்டு இராசத்தான் மாநிலத்தில் பரத்பூரில் உள்ள பர்தாய் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் (ஜாதவ்) சார்ந்தவர். உயர்நிலை பள்ளிக் கல்வி வரையே பயின்றார். அரசியலில் சேரும் முன், ஒரு தொழிலதிபராக இருந்தார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

குட்டியாரி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினராக இரண்டு முறை (2007 & 2012) சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது இரண்டு பதவிக் காலங்களிலும், ஆக்ரா மேற்கு ("பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் ஆணை, 2008"க்கு பிறகு அது இல்லாமல் போனது) மற்றும் ஆக்ரா கன்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][4]

இடுகைகள்[தொகு]

# முதல் முடிய பதவி குறிப்பு
01 2007 2012 உறுப்பினர், 15வது சட்டமன்றம்
02 2012 2017 உறுப்பினர், 16வது சட்டமன்றம்

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டியாரி_லால்_துவேஷ்&oldid=3743690" இலிருந்து மீள்விக்கப்பட்டது