ஏ. ஆர். சுரேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. ஆர். சுரேந்திரன்
சனாதிபதி வழக்கறிஞர்
இறப்பு(2016-04-11)11 ஏப்ரல் 2016
தேசியம்இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள்பிரசெல்சு பல்கலைக்கழகம்
பணிவழக்கறிஞர்
சமயம்இந்து
பெற்றோர்ஆறுமுகம் இரத்தினவடிவேல்
வாழ்க்கைத்
துணை
ரேணுகாதேவி

ஆறுமுகம் இரத்தினவடிவேல் சுரேந்திரன் (Arumugam Ratnavadivel Surendran, இறப்பு: 11 ஏப்ரல் 2016) இலங்கை தமிழ் வழக்கறிஞரும், சனாதிபதி வழக்கறிஞரும் ஆவார்.[1][2][3][4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

சுரேந்திரன் ஆறுமுகம் இரத்தினவடிவேலின் மகனாவார்.[5][6][7] இவர் 1963 முதல் 1974 முடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1963 - 1974 வரை படித்தார்.[6][8] பின்னர் அவர் பிரசெல்சு பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பு பட்டமும், ஒப்பீட்டுச் சட்டமும் படித்தார்.[6][8] அவர் மேம்பட்ட சட்ட ஆய்வுகள் நிறுவனத்தில் ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டார்.[6][8]

சுரேந்திரன் வி. முருகேசுவின் மகளான ரேணுகா-தேவியைத் திருமணம் செய்து கொண்டார்.[9][10]

தொழில்[தொகு]

சுரேந்திரன் சட்டத்தரணியாகப் பதவியேற்று கொழும்பில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[5][8] 2004 ஆம் ஆண்டில் சனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டார்.[5][8] அவர் இலங்கையின் சட்டத்தரணியின் சட்டக் குழுவின் தலைவராகவும், சட்ட கல்வி நிறுவனத்தில் இணைப்பாளராகவும் இருந்தார்.[5][8] அவர் நில மோசடிகளில் சட்ட சீர்திருத்தம் மற்றும் இந்து சமய நம்பிக்கைகள் தொடர்பான சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்தார்,[6][8] விவேகானந்த சபை கொழும்பு கிளையின் தலைவராக இருந்தார்.[11][12] அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அறங்காவலராக இருந்தார்.[8][13] அவர் ஏப்ரல் 11, 2016 இல் இறந்தார்.[5][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Onus on defendant to begin case under Debt Recovery laws". Sunday Times. 26 October 2008. http://www.sundaytimes.lk/081026/FinancialTimes/ft3034.html. 
  2. "Court inquires into Writ Petition regarding disappeared Tamil youth". தமிழ்நெட். 30 July 2011. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34240. 
  3. Selvanayagam, S. S. (7 மார்ச் 2011). "Parents complain to CA of Govt’s failure to compensate for son’s disappearance". Daily FT. http://www.ft.lk/article/21435/Parents-complain-to-CA-of-Govt-s-failure-to-compensate-for-son-s-disappearance. 
  4. "Chandrika to deliver keynote address today". The Nation. 24-07-2011 இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220212241/http://www.nation.lk/2011/07/24/news13.htm. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "President’s Counsel A.R.Surendran no more". Tamil Diplomat. 12 April 2016. http://tamildiplomat.com/presidents-counsel-a-r-surendran-no-more/. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 "Arumugam Ratnavadivel Surendhran: Obituary". OM Lanka. 11 April 2016 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170418232054/http://www.omlanka.net/obituaries/4845-a-r-surendhran-obituary.html. 
  7. "Obituaries". Daily News. 8 May 2010. http://archives.dailynews.lk/2010/05/08/main_Obituaries.asp. 
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 8.8 "President's Counsel A. R. Surendhran apssed away". Ceylon Today: p. A4. 12 April 2016 இம் மூலத்தில் இருந்து 28 April 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160428083754/http://www.ceylontoday.lk/thumb/epaper-images/60950.jpg. 
  9. "Tribute: V Murugesu". Daily News. 26 April 2010. http://archives.dailynews.lk/2010/04/26/fea31.asp. 
  10. "Obituaries". தி ஐலண்டு (இலங்கை). 21 March 2010 இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327155415/http://www.island.lk/2010/03/21/obituaries.html. 
  11. Maniccavasagar, Chelvatamby (16-08-2012). "Swamy Vivekananda A unique personality in the history of religion". Daily News. http://archives.dailynews.lk/2012/08/16/fea26.asp. 
  12. "Community". Sunday Observer. 28-12-2014 இம் மூலத்தில் இருந்து 2015-01-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150105122937/http://www.sundayobserver.lk/2014/12/28/new100.pdf. 
  13. "All Ceylon Hindu Congress Details of Office Bearers - 2015". All Ceylon Hindu Congress. Archived from the original on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._சுரேந்திரன்&oldid=3593916" இலிருந்து மீள்விக்கப்பட்டது