பாண்டுரங் மட்கைகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பண்டரங் மட்கைகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாண்டுரங் அர்ஜுன் மட்கைகர் (Pandurang Arjun Madkaikar) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் கோவா அரசின் முன்னாள் அமைச்சரும் ஆவார்[1] பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] வடக்கு கோவாவின் கம்பர்ஜுவா தொகுதியிலிருந்து கோவா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார்.[3][4][5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார்.[6] இவரது மனைவி ஜனிதா பழைய கோவா கிராம ஊராட்சியின் தலைவராக இருந்தார். [7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மட்கைகர் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு மகாராட்டிரவாதி கோமந்த கட்சி சார்பாக போட்டியிட்டு கம்பர்ஜுவா தொகுதியில் போட்டியிட்டு கோவாவின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [8] மேலும், மனோகர் பாரிக்கர் தலைமையிலான கூட்டணி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரானார். [9]2003 ஆம் ஆண்டு இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[10] 2005 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில்,[11] மட்கைகருக்கு வருவாய் மற்றும் எழுதுபொருள்கள் & அச்சுத்துறை போன்றவையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

29 சனவரி 2005 அன்று தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதோடு அல்லாமல் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேரும் பொருட்டு பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். [12][13][14]இதன் காரணமாக மனோகர் பாரிக்கர் அமைச்சகம் சீர்குலைந்தது.[15]2005 ஆம் ஆண்டு கம்பர்ஜுவா தொகுதிக்கான இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் கோவா சட்டமன்றத்தின் உறுப்பினரானார்.[16] இவர் பிரதாப் சிங் ரானே அமைச்சரவையில் போக்குவரத்து, நீர்வழிப் பயணம் மற்றும் இளைஞர் விவகாரம் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 26 July 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "BJP: Madkaikar joins BJP, calls it 'corruption-free' | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. Pandurang Madkaikar joined the Bharatiya Janata Party
  4. "Madkaikar to join BJP on Dec 22"
  5. Madkaikar joins BJP
  6. "Archived copy" (PDF). www.goavidhansabha.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. "Madkaikar's wife is Old Goa sarpanch | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
  8. "Archived copy". www.eci.nic.in. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  10. "Pandurang Madkaikar: Madkaikar's 'land deal' draws CM's ire | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
  11. "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  12. "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. "'10 Janpath conspiracy' rocks Goa govt".
  14. "Pandurang Madkaikar: Madkaikar's 'land deal' draws CM's ire | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
  15. "Is Madkaikar likely to quit Congress for greener pastures? | Goa News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 September 2018.
  16. "Archived copy". www.thehindu.com. Archived from the original on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. "Archived copy" (PDF). goaprintingpress.gov.in. Archived from the original (PDF) on 24 September 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டுரங்_மட்கைகர்&oldid=3457532" இலிருந்து மீள்விக்கப்பட்டது