மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம்

ஆள்கூறுகள்: 24°33′0″N 72°38′0″E / 24.55000°N 72.63333°E / 24.55000; 72.63333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுமலை வனவிலங்குச் சரணாலயம்
Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
இந்தியாவில் அமைவிடம்
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
Map showing the location of அபுமலை வனவிலங்குச் சரணாலயம் Mount Abu Wildlife Sanctuary
மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம் (இந்தியா)
அமைவிடம்ராஜஸ்தான், இந்தியா
அருகாமை நகரம்அபு மலை
ஆள்கூறுகள்24°33′0″N 72°38′0″E / 24.55000°N 72.63333°E / 24.55000; 72.63333
பரப்பளவு288 சதுர கிலோமீட்டர்.
நிறுவப்பட்டது1960
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இந்திய அரசு

அபு மலை வனவிலங்கு சரணாலயம் (Mount Abu Wildlife Sanctuary) இந்தியாவின் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. 1980 ஆம் ஆண்டு இது ஒரு வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.[1] 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று சரணாலயத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலம் என அறிவிக்கப்பட்டது.[2]

நிலவியல்[தொகு]

அபு மலை வனவிலங்கு சரணாலயம் சுமார் 19 கிலோமீட்டர் அளவுக்கு நீளமும் 6 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு பீடபூமியாக பரவியுள்ளது. இராசத்தானின் உயரமான சிகரமாகக் கருதப்படும் குரு சிகரத்தில் இது 300 முதல் 1,722 மீட்டர் (984 முதல் 5,650 அடி) வரை உயரமாக இருக்கும்.[1]பாறைகள் அக்னிப் பாறை வகையாக உள்ளன. காற்று மற்றும் நீரின் வானிலை விளைவு காரணமாக, பெரிய துவாரங்கள் அவற்றில் பொதுவாக காணப்படுகின்றன.

தாவரங்கள்[தொகு]

மலையடிவாரத்தில் உள்ள துணை வெப்பமண்டல முள் காடுகள் தொடங்கி நீர்நிலைகள் மற்றும் உயரமான பள்ளத்தாக்குகளில் துணை வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் வரை மலர் உயிரியல் பன்முகத்தன்மையில் மிகவும் வளமாக உள்ளது. சுமார் 112 தாவர குடும்பங்கள் 449 பேரினங்களாகவும் 820 இனங்களாகவும் இங்கு பரவியுள்ளன. இவற்றில், 663 இனங்கள் இருவித்திலை தாவரங்களாகவும் 157 இனங்கள் ஒரு வித்திலைத் தாவரங்களாகவும் உள்ளன. மேலும் இந்த சரணாலயத்தில் சுமார் 81 வகையான மரங்கள், 89 வகையான புதர்கள், 28 வகையான கொடிகள் ள் மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த 17 வகையான கிழங்கு தாவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[3]இவை தவிர அரிய மற்றும் அழிந்துவரும் இன தாவரங்கள் சிலவும் இங்கு நிறைந்துள்ளன.[4]

அபு மலை வனவிலங்கு சரணாலயம் காதியர்-கிர் உலர் இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழலில் உள்ளது. இராசத்தானில் உள்ள அபு மலையில் மட்டுமே பலவிதமான மந்தாரை வகைகளை பார்க்க முடியும். இந்த இடத்தில் பிரையோபைட்டுகள் மற்றும் பாசிகள் நிறைந்துள்ளன. மூன்று வகையான காட்டு ரோசாக்கள் மற்றும் 16 வகையான பெரணிகள் காணப்படுகின்ற்றன. அவற்றில் சில மிகவும் அரிதானவை. சரணாலயத்தின் தென்மேற்கு பகுதியில் மூங்கில் காடுகள் நிறைந்துள்ளன.

விலங்கினங்கள்[தொகு]

அபு மலை வனவிலங்கு சரணாலயத்தில் இந்திய சிறுத்தை, சோம்பல் கரடி, சாம்பார் மான், காட்டுப்பன்றி மற்றும் சிங்காரா போன்ற விலங்கினங்கள் வாழ்கின்றன.[1]காட்டுப்பூனை, சிறு இந்தியப் புனுகுப்பூனை, இந்திய ஓநாய், வரிக் கழுதைப்புலி, பொன்னிறக் குள்ளநரி, வங்காள நரி, நெடுவாற் குரங்கு, இந்திய எறும்புண்ணி, இந்திய சாம்பல்நிற கீரி, இந்திய குழிமுயல், இந்திய கொண்டை முள்ளம்பன்றி, இந்திய வெளிர் முள்ளெலி போன்ற விலங்குகளும் இங்கு வாழ்கின்றன. ஆசியச் சிங்கம் கடைசியாக 1872 ஆம் ஆண்டிலும் வங்காளப் புலி 1970 ஆம் ஆண்டிலும் காணப்பட்டுள்ளன.[5]

சாம்பல் காட்டுக் கோழி உட்பட 250 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.[6][7]அரிதான பச்சை நிற தினைக்குருவி இங்கு பொதுவாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Negi, S. S. (2002). "Mount Abu Wildlife Sanctuary". Handbook of National Parks, Wildlife Sanctuaries and Biosphere Reserves in India (3rd ). Indus Publishing. பக். 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7387-128-3. https://books.google.com/books?id=JYFmoOWfmX8C&pg=PA151. 
  2. Govt of India. "ESZ Notification" (PDF). www.egazette.nic.in. Govt. of India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2022.
  3. Mount Abu Wildlife Sanctuary, p. 2. Retrieved 2 January 2013.
  4. Expert Committee members NGT (December 2020). REPORT BY THE EXPERT COMMITTEE ON The Directions of Hon'ble NGT Order Dated 07.11.2019 in OA No. 312/2016 (MA no. 2012/2019 & MA no. 227/2019) For ECO‐SENSITIVE ZONE. NGT. பக். 59. https://greentribunal.gov.in/sites/default/files/news_updates/Joint%20Committee%20Report%20in%20O.A.%20No.%20312%20of%202016%20(MA%20no.%20212%20of%202019%20&%20227%20of%202018)%20(Dr.%20Arun%20Kumar%20Sharma%20vs%20MoEF&CC%20&%20Anr.).pdf. பார்த்த நாள்: 8 June 2021. 
  5. Sharma, B. K.; Kulshreshtha, S.; Sharma, S.; Singh, S.; Jain, A.; Kulshreshtha, M. (2013). "In situ and ex situ conservation: Protected Area Network and zoos in Rajasthan". in Sharma, B. K.; Kulshreshtha, S.; Rahmani, A. R.. Faunal Heritage of Rajasthan, India: Conservation and Management of Vertebrates. Heidelberg, New York, Dordrecht, London: Springer Science & Business Media. பக். 3–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783319013459. https://books.google.com/books?id=UDS5BAAAQBAJ&pg=PA32. 
  6. Storer, R. W. (1988). Type Specimens of Birds in the Collections of the University of Michigan Museum of Zoology. University of Michigan, Miscellaneous publications No. 174. http://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/56418/1/MP174.pdf. 
  7. Ali, S.; Ripley, S. D.. Handbook of the birds of India and Pakistan. 2 (Second ). Oxford University Press. பக். 106–109.