பிஹு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிஹு
பிஹு, அசாம்
அதிகாரப்பூர்வ பெயர்பிஹு
பிற பெயர்(கள்)ரங்காலீ பிஹு (ஏப்ரல்) • காதி பிஹு (அக்டோபர்) • போகாலீ பிஹு (ஜனவரி)
கடைபிடிப்போர்அசாமிய மக்கள்
வகைமண்டல மக்கள்
முடிவுமாறுபட்ட நாட்களில்
நாள்பகாக, காதி மற்றும் மாக மாதங்கள்
நிகழ்வுஆண்டுதோறும் மூன்றுமுறை

பிஹு (ஆங்கிலம்: Bihu; (அசாமிய மொழி: বিহু) இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் தலைமை விழாவாகும். இது மூன்று வெவ்வேறு திருவிழாக்களின் தொகுப்பை குறிக்கிறது: ஏப்ரல் மாதத்தில் ரங்காலீ அல்லது பஹாக பிஹு அனுசரிக்கப்படுகிறது; ஜனவரி மாதத்தில் போகாலீ அல்லது மாக பிஹு அனுசரிக்கப்படுகிறது; அக்டாேபர் கங்காலீ அல்லது காதி பிஹு அனுசரிக்கப்படுகிறது. அசாமில் கொண்டாப்படும் புத்தாண்டு மற்றும் வசந்தத் திருவிழாவில் ரங்காலீ பிஹு மிகவும் முக்கியமான ஒன்றாகும். போகாலீ பிஹு அல்லது மாக பிஹு உணவுத் திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது[1]. மதம், சாதி ஆகியவற்றைத் கடந்து அனைத்து அசாமிய மக்களால் பிஹு கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வாழும் அசாமிய மக்களால் இது கொண்டாடப்படுகிறது. பிஹு என்ற வார்த்தையிலிருந்து பிஹு நாஸ் என்றழைக்கபடும் பிஹு நடனம், மற்றும் பிஹு கீத் என்று அழைக்கப்படும் பிஹு நாட்டுப்புறப் பாடல்கள் என்று பெயரிடப் பயன்படுகிறது.

மூன்று பிஹூ திருவிழாக்கள்[தொகு]

பஹாக பிஹு[தொகு]

இது மிகவும் பிரபலமான பிஹு திருவிழா[2]. இது அசாமிய புத்தாண்டின் துவக்கம் (ஏப்ரல் 14-15 வரை) மற்றும் வசந்த காலமாக கொண்டாடப்படுகிறது. இது இந்து சூரிய நாட்காட்டியின் முதல் நாளாகும். வங்காளம், மணிப்பூர், மிதிலா, நேபாளம், ஒரிசா, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பிஹு திருவிழா வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. நெல் பயிரிடுவதற்காக விவசாயிகள் வயல்களைத் தயார் செய்கின்றனர், மேலும் மகிழ்ச்சியான அனுபவங்களைக் காெண்டது. பெண்கள் பீடா, லாரஸ் (அரிசி மற்றும் தேங்காய்களால் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உணவு) மற்றும் பருவத்தின் உண்மையான சாரம் கொடுக்கும் ஜால்பன் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். பிஹுவின் முதல் நாள், கோரு பிஹு அல்லது மாடு பிஹு என்று அழைக்கப்படுகிறது, இந்நாளில் பசுக்கள் கழுவப்பட்டு வணங்கப்படுகிறது. இந்த திருவிழா ஏப்ரல் 14 அன்று வழக்கமாக முந்தைய ஆண்டின் கடைசி நாளில் வரும். இந்நாளில் புதிய துணிகளை அணிந்து, புதிய துணிச்சலுடன் புதிய ஆண்டை வெற்றிகரமாகத் தாெடங்க கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாவது நாள் கோசாய் (கடவுள்களின்) பிஹூ; கடவுள்களின் சிலைகள் அனைத்து வீடுகளிலும் வணங்கி, ஒரு மென்மையான புத்தாண்டை வரவேற்கக் கடைபிடிக்கப்படுகிறது.

கங்காலீ பிஹு[தொகு]

அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்படும் இது காதி-பிஹு என்றும் அழைக்கப்படுகிறது)[3]. இந்த காலத்தின் போது, வயல்களில் நெல் வளர்ந்து வரும் நிலையில் உள்ளது. இந்த நாளில், மண் விளக்குகளை (சக்கி) வீட்டு துளசி ஆலை, களஞ்சியம், தோட்டம் (பாரி) மற்றும் நெல் வயல்களின் அடிவாரத்தில் ஏற்றப்படுகிறது. மாலை வேளையில், விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட அரிசி பொருட்கள் (பத்தா) கால்நடைகளுக்கு வழங்கப்படுகிறது.

போகாலீ பிஹு[தொகு]

போகாலி பிஹூ ஜனவரி மாதத்தின் மத்தியில் கொண்டாடப்படுகிறது. இது மாக பிஹு என்றும் அழைக்கப்படுகிறது. போக் என்ற வார்த்தையிலிருந்து வருகிறது[4]. இது ஒரு அறுவடைத் திருவிழா; அறுவடை பருவத்தின் முடிவை குறிக்கிறது. தானியங்கள் முழுமையடைந்ததால், இந்த காலப்பகுதியில் நிறைய விருந்துகளும் உணவுகளும் வழங்கப்படுகிறது. முழு இரவும் மக்கள் மௌஜியைச் சுற்றி பிஹு பாடல்களைப் பாடியும், டோல் (ஒரு பொதுவான வகையான டிரம்ஸ்) அடித்தும் விளையாடி தங்கள் திருவிழாவை மகிழ்ச்சியாேடு கழிப்பர்.

பிஹுவில் பயன்படுத்தப்படும் கருவிகள்[தொகு]

  • டோல் (டிரம்)
  • தால்
  • பெபா (எருமை கொம்பால் செய்யப்பட்ட ஒரு கருவி)
  • பானி (புல்லாங்குழல்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஹு&oldid=3221518" இலிருந்து மீள்விக்கப்பட்டது