அனைத்து நாட்டு மதமற்றோர் மற்றும் நாத்திகர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டு மதமற்றோர் மற்றும் நாத்திகர் சங்கம் (ஆங்கிலம்: International League of non-religious and atheists, ஜெர்மன் மொழி: Internationaler Bund der Konfessionslosen und Atheisten, IBKA ) என்பது 1976 ஆம் ஆண்டு செர்மனி பெர்லின் நகரில் பன்னாட்டு மதமற்றோர் சங்கம் ("International League of Non-religious" (IBDK)) என்ற பெயரில் தோற்றுவிக்கப்பட்ட சங்கமாகும். இச்சங்கம், மிச் என்ற இதழ் மற்றும் 1972 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெர்லின் மதசார்பற்றோர் ஒன்றியத்திலிருந்து உருவானது. 1982ல் பன்னாட்டு மதமற்றோர் மற்றும் நாத்திகர் சங்கம் என்ற பெயரைப் பெற்றது[1]. இச்சங்கம் ஏறக்குறைய 1000 உறுப்பினர்களையும் 13 கூட்டுஉறுப்பினர்களையும் ஒரு அறிவியல் கழகத்தையும் கொண்டுள்ளது.[2][3]

இதன் குறிக்கோள்கள் பகுத்தறிவை வளர்த்தல், மனித உரிமைகளை நிலைநாட்டுதல், அறிவியல் சுதந்திரத்தை வளர்த்தல் ஆகியனவாகும். மத நடவடிக்கைகளை அரசு நிர்வாகத்திலிருந்து பிரித்தல் இதன் முக்கிய நோக்கமாகும். இச்சங்கம் 2014 ஆம் ஆண்டு செர்மனியில் பல மதசார்பற்றோர் இயக்கங்களை ஒன்றிணைத்து கருணைக்கொலை சம்பந்தமாக மாநாடு ஒன்றை நடத்தியது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About us". IBKA website. Archived from the original on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. http://www.deutschlandradiokultur.de/ketzer-ohne-kaefig.1278.de.html?dram:article_id=207014
  3. http://www.ibka.org/infos/korporative
  4. Matthias Kamann (13 March 2014). "Zehn-Punkte-Papier gegen neues Suizid-Strafgesetz" (in de). Die Welt. https://www.welt.de/politik/deutschland/article125740335/Zehn-Punkte-Papier-gegen-neues-Suizid-Strafgesetz.html. பார்த்த நாள்: 14 August 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]