கியான் சந்த் குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கியான் சந்த் குப்தா
Gian Chand Gupta
அரியானா சட்டமன்றம் அவைத்தலைவர்
பதவியில்
4 நவம்பர் 2019
தொகுதிபஞ்சகுலா
MLA, அரியானா சட்டமன்றம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 மே 1948 (1948-05-25) (அகவை 75)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

கியான் சந்த் குப்தா (Gian Chand Gupta) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 1948 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா சட்டமன்றத்தின் அவைத்தலைவராக பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அரியானாவில் பஞ்ச்குலா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]

4 நவம்பர் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இவர்ர் அரியானா சட்டமன்றத்தின் அவைத்தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

  • 1991-92, 1993-95, 1995-97 காலத்தில் கட்சியின் மாநிலத் தலைவர்
  • 23.12.1997 முதல் 23.12.1998 வரை நகரத்தந்தை , நகராட்சி ஆணையம், சண்டிகர்
  • 2002-2005, 2009-2012 காலகட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொருளாளர், அரியானா பிரதேசம்.
  • மாநில துணைத் தலைவர், பாரதியா ஜனதா கட்சி 2006-2008, அரியானா மாநிலம்.
  • 24.04.2015 முதல் 26.10.2019 வரை. தலைவர், பொதுக் கணக்குக் குழு, அரியானா 2
  • அரசு தலைமைக் கொறடா, அரியானா 08.03.2016 முதல் 26.10.2019 வரை.
  • சபாநாயகர், அரியானா சட்டப் பேரவை 4 நவம்பர் 2019 முதல்
  • பஞ்ச்குலா நகரத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
  2. BJP's Gian Chand Gupta unanimously elected Speaker of Haryana assembly.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியான்_சந்த்_குப்தா&oldid=3451864" இலிருந்து மீள்விக்கப்பட்டது