முப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பரிமாண அச்சாக்கக் கட்டுமானம் (Construction 3D printing) என்பது கட்டடங்கள் அல்லது கட்டுமானப் பொருள்களை உருவாக்குவதற்கு ஒரு அடிப்படை வழிமுறையாக முப்பரிமான அச்சிடுதலைப் பயன்படுத்தும் பல்வேறு தொழில்நுட்பங்களை குறிக்கிறது. 2011 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பி கார்டினரால் இந்த சொல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. [1]

கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு முப்பரிமாண அச்சிடும் முறைகள் உள்ளன, இவை பின்வரும் முக்கிய முறைகள்: வெளிப்புறம் (கான்கிரீட் / சிமெண்ட், மெழுகு, நுரை, பாலிமர்ஸ்), தூள் பிணைப்பு (பாலிமர் பிணைப்பு, ரிக்ராடிக் பிணைப்பு, வெப்பமாக்கல்) மற்றும் சேர்க்கை பற்றவைப்பு பொன்றவை ஆகும். கட்டுமான அளவிலான முப்பரிமாண அச்சாக்கம் தனியார், வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் துறைகளில் உள்ள பலவிதமான பனிகளைக் கொண்டிருக்கின்றன. இதில் உள்ள சிறப்பு கூறுகள் என்றால் விரைவான கட்டுமானம், குறைந்த தொழிலாளர் தேவை, மிகவும் சிக்கலான மற்றும் / அல்லது துல்லியமான பணி, மிகுந்த ஒருங்கிணைந்த செயல்பாடு மற்றும் மூலப்பொருள் வீணாகாத சிக்கன முறை ஆகியவை இந்த தொழில்நுட்பங்களின் சிறந்த நன்மைகள்.

சீன நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள முப்பரிமாண அச்சு, கோப்புகளை அச்சிடுவதைப் போல வீடுகளை உருவாக்கித் தருகிறது. கடைகால் அமைத்த பிறகு, என்ன அளவில், என்ன வடிவத்தில், என்ன உயரத்தில் வீடு வேண்டும் என்பதை ஆட்டோ கேட் (Auto CAD) மென்பொருள் மூலம் வடிவமைத்த பிறகு, அந்த வடிவமைப்புக்கு ஏற்ற வடிவத்தில் முப்பரிமாண அச்சு இயந்திரம் சுவர்களை அமைக்கிறது. உயரமான சுவர்கள், வீடுகளுக்குத் தேவையான மின்சார இணைப்புக்கான வழித்தடங்கள், குடிநீர்க் குழாய்களுக்கான வழித்தடங்கள், நீர் செல்வதற்கான வழித்தடங்கள் போன்ற பயன்பாட்டு சாதனங்களை கட்டுமானத்தின் போதே ஆட்டோ கேட் முறையில் திட்டமிட்டு விடுவதால் சுவர்களை உருவாக்கும்போதே அவை வடிவம் பெற்று விடுகின்றன. இந்த முப்பரிமாண அச்சில் இருந்து வரும் சிமெண்ட் கலவையால், விரைவில் சுவரை கட்டி ஒரே நாளில் கட்டுமானத்தை முடித்துவிடும். இதில் குறிப்பிடும்படியான அம்சம் அச்சிலிருந்து வெளியாகும் சிமெண்ட் கலவையானது, அதற்காக தயாரிக்கப்பட்ட சிமெண்ட் ஆகும் இது சில நிமிடங்களிலேயே உலர்ந்து, உறுதியான சுவர்களாகி விடும். இதைப் பயன்படுத்தும்போது, நீண்ட நாட்களுக்கு கட்டடங்களைக் கட்ட ஆகும் செலவைவிடக் குறைவான செலவிலேயே கட்டி முடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. J.B.Gardiner [1] PhD Thesis - Exploring the Emerging Design Territory of Construction 3D Printing (p42), 2011
  2. உமா (24 சூன் 2017). "வீட்டைக் கட்ட வேண்டாம்; பிரிண்ட் பண்ணலாம்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 24 சூன் 2017.