கண்ட ஆக்க நகர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ட ஆக்க நகர்வு (epirogenic movement) என்பது புவியின் மேலோட்டில் ஏற்படும் மிகப் பேரளவு குத்துநிலை நகர்வு ஆகும்.ளைதனால், பாறைப்பிளவேதும் உருவாவதில்லை; அகன்ற மேடுபள்ளங்கள் மட்டுமே உருவாகின்றன.[1]அகன்ற கண்ட நடுப்பகுதிகள் கண்டத் தட்டுப்பொறைகள் எனப்படுகின்றன; இவை கண்ட எழுச்சி,தாழ்ச்சி போன்ற குத்துநிலை நகர்வுக்கு ஆட்படுவன ஆகும்.[2]இந்த நகர்வு புவி மையத்தில் இருந்தான மேலெழுச்சியாகவோ புவி மையம் நோக்கிய அமிழ்வாகவோ இருக்கலாம்.இந்த நகர்வு, புவிக் கற்கோளத்தில் பாறைப் பிளவு நிலைகளையும் சமநிலைப்புத் தன்மையையும் உருவாக்கும் புவி ஆரத் திசையில் செயல்படும் அதே விசைகளால் ஏற்படுகிறது.

புவியின் மேலோடு நிலையானது அல்ல. தற்போதுள்ள நிலத்தோற்றங்கள் முன்னொரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்தன .தற்போதைய இமயமலை முன்னொரு காலத்தில் ஆழம் குறைந்த டெதிசு (Tethys) எனும்கடல் பகுதியாக இருந்தது.

கண்ட ஆக்க நகர்வால் ஏற்படும் பிளவுசார் நிலத்தோற்றம்

கண்ட ஆக்க நகர்வால் பிளவுகள்(faults), பிதிர்வு மலைகள் (block mountain),பிளவு பள்ளத்தாக்குப் படுகைகள் (basin of rift valley), மேட்டுச் சமவெளிகள் (plateau)போன்ற நிலத்தோற்றங்கள் உருவாகின்றன. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய பள்ளத்தாக்குப் படுகை, இந்தியாவின் நர்மதை பள்ளத்தாக்கு போன்றவை கண்ட ஆக்க நகர்வால் உருவான நிலத்தோற்றங்கள் ஆகும். [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Arthur Holmes; Doris L. Holmes (2004). Holmes principles of physical geology (4th ). Taylor & Francis. பக். 92. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7487-4381-2. https://books.google.com/books?id=E6vknq9SfIIC&pg=PT109. 
  2. Richard J. Huggett (2003). Fundamentals of geomorphology. Routledge. பக். 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-24146-4. https://books.google.com/books?id=-Y7j-trP2goC&pg=PA76. 
  3. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ,ஏழாம் வகுப்பு பாட புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ட_ஆக்க_நகர்வு&oldid=3734912" இலிருந்து மீள்விக்கப்பட்டது