பிரதிபலிப்பு ஒட்டுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Car with reflective stickers. Flash photo.

பிரதிபலிப்பு ஒட்டுகையானது ஒரு நெகிழ்வுத்தன்மையானது. வாகனங்களிலும், போக்குவரத்து குறியீடுகளிலும் சாலையின் இருபுறங்களிலும்  ஒட்டப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்கிலிருந்து வருகின்ற ஒளியினால் பிரதிபலிக்கப்படுகிறது.[1]  எனவே ஒட்டப்பட்ட இடமானது இருட்டிலும் தெளிவாக காணமுடிகிறது. தொழிற்சாலைகளில் பார்கோடுகளின் ஸ்கேனிங் வரம்பை அதிகரிக்க இவை பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடித்துகள்களும், நுண்ணிய லென்சுகளும் ஒளிரக்கூடிய நெகிழித்துகள்களும் இந்த ஒட்டுகையில் மூலக்கூறாக பயன்படுத்தப்படுகின்றன. பல வண்ணங்களில் பிரதிபலிப்பின் தன்மையை பொருத்து பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது.[2] 1960 களிலிருந்து இந்த பிரதிபலிப்பு ஒட்டுகை பல வகையில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபலிப்பு_ஒட்டுகை&oldid=3531332" இலிருந்து மீள்விக்கப்பட்டது