ஏ. எம். ராஜா (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எம். ராஜா (அய்யம்பாளையம் மாசாகவுண்டர் ராஜகவுண்டர்) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1928 ஆம் ஆண்டு பிறந்தார்.[சான்று தேவை] 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பவானி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் பல்கலைக் கழகத்திலிருந்து (தமிழ் வரலாறு மற்றும் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்) பட்டம் பெற்றார். இவரது குடும்பத்தில் இவரே முதல் பட்டதாரியாவார். அரசியலில் இவர் வாழ்நாள் முழுவதும் ஆர்வமுள்ளவராக இருந்தார். மாநில அளவில் அவர் முக்கியமாக கல்வி சீர்திருத்தத்துடன் அனைத்து சாதியினருக்கும் உயர்கல்வியை அணுகுவதன் மூலம் முக்கியத்துவம் அளித்தார்.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._ராஜா_(அரசியல்வாதி)&oldid=3546461" இலிருந்து மீள்விக்கப்பட்டது