திருவண்ணாமலை கால்நடைச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாட்டுச் சந்தை
மாட்டுச் சந்தை
குதிரைச் சந்தை
குதிரைச் சந்தை

திருவண்ணாமலை கால்நடைச் சந்தை

சந்தையின் தொன்மை[தொகு]

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் கார்த்திகைத் தீபத்திருவிழாவினை ஒட்டி மாடு, குதிரை சந்தை நடைபெறும். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக இச் சந்தை நடைபெறுவதாக இலக்கியப் பதிவு்கள் மூலம் அறிய முடிகிறது.

பல்வேறு வகைகளைச் சார்ந்த மாடு, குதிரைகள் இச்சந்தைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இன்றைக்கு மாடு, குதிரைகளை வெளியூர்களிளருந்து கொண்டு வருவதற்கு மோட்டார் வாகனங்கள் ( லாரி, டெம்போ , ட்ராக்டர்,) போன்றவற்றைப் பயன்பபடுத்துகின்றனர். மோட்டார் வாகனங்களின் வருகைக்கு முன்பு பல்வேறு ஊர்களிலிருந்து தங்கள் கால்நடைகளை பல மாதங்கள் கால்நடையாகவே கொண்டு வந்து விற்பனை செய்திருப்பதை அறிய முடிகிறது

பயண வழி[தொகு]

நடு கல்
நடு கல்

பெரும்பாலும் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் காட்டுமன்னார்குடி - கம்மாபுரம் - எலவனாசுர்பேட்டை புகைப் பட்டி - திருக்கோயிலூர் - மாத்தூர் வழியாக திருவண்ணாமலையை வந்தடைந்தார்கள்.

சந்தை வியாபாரிகளின் வழக்கம்[தொகு]

இவர்களின் பயணத்தின் பொழுது அவர்களுடன் குதிரையினை அலங்காரம் செய்வதற்குரிய பொருட்கள், மாற்று உடை, சமையல் பாத்திரங்கள், அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அனைத்தையும் ரேக்ளா வண்டியின் அடியில் வைத்துக் கொண்டு வருகின்றனர். வழியில் ஓய்வெடுக்கும் இடங்களிலேயே உணவு சமைத்து உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மாற்று வேலை[தொகு]

மாடு, குதிரை விற்பனை இல்லாத நாட்களில் செம்பு, பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசுதல் ( முலாம் பூசுதல்) வேலையும் செய்வார்கள். செம்பு, பித்தளைப் பாத்திரங்களின் பயன்பாடு குறைந்ததால் தற்காலத்தில் மாற்று வேலைக்குச் செல்கின்றனர்.