ஓடைப்பட்டி கிராமம்
(ஓடைப்பட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஓடைப்பட்டி(Odaipatty), இந்தியா-தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தின் முக்கிய வேலையாக பெரும்பாலும் காய்கறிகளான: தக்காளி, முருங்கை, கத்தரி, வெண்டைக்காய், சிவப்பு மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சாகுபடி/வேளாண்மை செய்யப்படுகிறது. காய்கறிகள் விற்பனை செய்யப்படும் இடமான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை, தமிழ்நாட்டின் பிரபலமான சந்தையாகும் மற்றும் கேரள மாநிலத்திற்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது.