ஆகோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இலக்கணத்தில் புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வெட்சித் திணை தொடர்பில் ஆகோள் என்பது அத்திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். ஆகோள் என்னும் சொல் "ஆவினைக் கொள்ளுதல்". என்னும் பொருளைக் கொடுக்கும். வெட்சித் திணையில், பகைவருடைய பசுக் கூட்டங்களை, அவற்றின் கன்றுகளுடன் கவர்வதற்காகச் செல்லும் செயலைப் பொருளாகக் கொள்ளும் துறை ஆகோள் எனப்படுகிறது. ஆகோள் என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது

விதி[தொகு]

வென் றார்த்து விறன் மறவர் கன்றோடும் ஆதழீஇ யன்று

சான்று[தொகு]

கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தால் நெடுவரை நீள்வேய் நரலும் – நடுவூர்க் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை.

பொருள்[தொகு]

குருதியைக் கோர்த்த வேலியினை உடைய வெட்சி மறவர்கள், உயர்ந்த மலையில், நீண்ட மூங்கில்கள் ஒலிக்கும் ஊரின் நடுவில் இருந்த பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிக்கொண்டு அவ்விடத்திலிருந்து நீங்காதவர்களாய் இருப்பது என்பது, புலிகள் ஒன்றுகூடித் திரண்டு நிற்பதைப் போன்றது என இவ்வெண்பாவில் கூறப்பட்டுள்ளது. அதனால் இவ்வெண்பா ஆகோள் என்ற துறைக்குச் சான்றாகிறது.[1]

சான்றாதாரம்[தொகு]
  1. முனைவர் கு.முத்துராசன், எளிய உரையில் புறப்பொருள் வெண்பாமாலை, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, சூலை 2004, பக்.18-19.
வெளி இணைப்பு[தொகு]

https://ta.wiktionary.org/wiki/ஆகோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகோள்&oldid=2373859" இலிருந்து மீள்விக்கப்பட்டது