பேச்சு:ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாஸ்தா, சுந்தரேஸ்வரர்[தொகு]

கடந்த வாரம் இப்பதிவை மேம்படுத்த முனைந்தபோது இக்கோயில் பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் என்று பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இக்கோயிலின் மூலவராக சாஸ்தா உள்ளாரா, மீனாட்சிசுந்தரேஸ்வரர் (அதாவது சிவபெருமான் லிங்கத்திருமேனியாக) உள்ளாரா என்பதை அறியமுடியவில்லை. தவிரவும் கட்டுரையின் தலைப்பு ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோயில் என்றிருப்பதைக் காணமுடிந்தது. நாளிதழ் செய்திகளை நோக்கும்போது அவற்றில் சில இடங்களில் சாஸ்தா மேஷ வாகனத்தில், அம்பாள் அன்ன வாகனத்தில் உலா வருவர் என்றும், சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் வருவர் என்றும் கூறப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இது முறையே சுந்தரேசுவரர் மற்றும் மீனாட்சி என்ற வகையில் கொள்ளவேண்டுமா என்று புரிந்து கொள்ள இயலா நிலையில் இப்பதிவினை மேம்படுத்துவது பற்றி சற்று யோசித்தேன். தற்போது மா. செல்வசிவகுருநாதன் இப்பதிவினை மேம்படுத்தும்படி கூறியிருந்த நிலையில், உரிய மேற்கோள்களுடன் மேம்படுத்தியுள்ளேன். நேரில் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்போது பதிவினை இன்னும் மேம்படுத்துவேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:11, 19 சூன் 2017 (UTC)[பதிலளி]

ஆரல்வாய்மொழி மீனாட்சி அம்மன் திருக்கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.