சின்னக்கொத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சின்னகொத்தூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சின்னக்கொத்தூர்
குந்தாணி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN635115

சின்னக்கொத்தூர் (Chinnakothur) என்பது கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இதன் பழைய பெயர் குந்தாணி ஆகும். [1]

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 76, மொத்த மக்கள் தொகை 387, இதில் 186 ஆண்களும், 201 பெண்களும் அடங்குவர். கிராம மக்களின் கல்வியறிவு விகிதம் 59.17% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

குந்தாணி பெயராய்வு[தொகு]

இப்பகுதியில் உள்ள மலையானது நெல் குத்தும் குந்தாணி போல காட்சியளிப்பதால் இதற்கு குந்தாணி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.[3]

குந்தாணி வரலாறு[தொகு]

குந்தாணியாது ஒரு காலத்தில் போசளப் பேரரசின் தலைநகராக இருந்தது. 800 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட சோழப் பேரரசு வலுவிழந்த நிலையில் இருந்தபோது, கர்நாடகத்தில் ஆண்டுவந்த போசளர்களுடன் மண உறவு கொண்டிருந்தனர். சோழப் பேரரசுக்கு உதவுவதற்காக தமிழகத்தில் பெரும்படையுடன் போசளர்கள் நுழைந்தனர். சோழ மன்னன் மூன்றாம் இராசராசனுக்கு உதவியாக வந்தவர்கள் பாண்டியனையும் அவனுக்கு துணையாக வந்த சிற்றரசர்களையும் விரட்டினர். இன்றைய சமயபுரமும் அன்றைய கண்ணணூர் கொப்பத்தில் சோழன் தன் தலை நகரை மாற்றினான். இந்நிலையில் சோழனுக்கு உதவ வந்த போசளர்கள் சமயபுரத்தையே தங்களின் இன்னொரு தலைநகராக ஆக்கிக்கொண்டு தங்கினர்.

போசள மன்னன் வீர சோமேசுவரனுக்குப் பிறகு நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு தமிழகப் பகுதி வீரராமநாதனின் வசமும் கர்நாகடப் பகுதி மூன்றாம் நரசிம்மன் வசமும் சென்றன. இதன் பிறகு பாண்டியன் மாறவர்மனிடம் தன் பகுதிகளை இழந்த வீரராமநாதன் சமயபுரத்தைக் கைவிட்டு குந்தாணியை தன் தலைநகராக ஆக்கிக்கொண்டு ஆண்டான். அதன்பிறகு அவன் மகன் வீர விசுவநாதன் ஐம்பது ஆண்டுகள் இங்கிருந்து ஆண்டான். இந்த ஊரில் போசளர்களின் கோட்டை, அவர்கள் கட்டிய கோயில்கள் போன்றவற்றின் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன.[4] குந்தாணியின் பெருங்கோயில் குஞ்சம்மாள கோயில் ஆகும். இக்கோயிலிருந்து 14 கல்வெட்டுகள் படியெடுக்கபட்டுள்ளன. இங்கு ஏராளமான நடுகற்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஒசூர் அருகே 13-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு". செய்தி. தினமணி. 27 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
  2. "Chinnakothur Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
  3. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 122. 
  4. "அழிவின் விளிம்பில் ஒய்சாள அரண்மனை மண்டபம்: சீரமைத்து பாதுகாக்க கோரிக்கை". செய்தி. தினமலர். 17 சனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2017.
  5. சின்னக்கொத்தூரில் சிதைந்து வரும் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க நடவடிக்கை, இந்து தமிழ் (நாளிதழ்), 2021 சனவரி 30
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னக்கொத்தூர்&oldid=3658213" இலிருந்து மீள்விக்கப்பட்டது