உருளை பூட்டுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டும் உருளைகளைக் கொண்டிருக்கும் வளி-இயக்க குழலாசனம்
* மஞ்சள்: பொதியுறை
* மந்த நீலம்: உந்துத் தண்டுக்குழலுடன் துமுக்கிக்குழல்
* மந்த செம்மஞ்சள்: தோட்டா
* திட செம்மஞ்சள்: வளி-உந்துத் தண்டு
* சிகப்பு: நழுவி/பின்னடைப்பு
* ஊதா: பூட்டும் உருளைகள்
* பச்சை: பூட்டும் துண்டு
* திட நீலம்: ஆணி
* கருப்பு: வாங்கி

சுடுகலன் இயக்க அமைப்புகளில், உருளை பூட்டுதல் எனும் சொல்லானது, உருளைகளைக் கொண்டு ஆணியை பூட்டுவதை குறிக்கும். இந்த முறையை பிரயோகிக்கும் சில எடுத்துக்காட்டுகள் எம்.ஜி.42, ரெயின்மெட்டல் எம்.ஜி. 3 எந்திரத் துப்பாக்கிகள், மற்றும் சி.சட். 52 கைத்துப்பாக்கி.

எச்.கே. ஜி3-யில் இருக்கும் உருளை-தாமத பின்தள்ளுதல் இயக்கத்திலும் இதே போன்ற உருளைகளை பயன்படுத்துவதால், சிலநேரம் தவறுதலாக இதையும் உருளை பூட்டுதல் என்பர், ஆனால் உருளை-தாமத பின்தள்ளுதலில் ஆணியும் பூட்டப் படுவதில்லை, குழலின் பின்னுதைப்பும் இருப்பதில்லை.

இயங்குமுறை விளக்கம்[தொகு]

பாகங்களும் இரும்பிதழும்[தொகு]

பூட்டிய நிலையில் உள்ள - குழல், நழுவி மற்றும் பூட்டும்-துண்டு

சி.சட். 52[1][2] கைத்துப்பாக்கி உருளைப் பூட்டை பிரயோகிக்கிறது[3], நழுவி, குழல், பூட்டும்-துண்டு மற்றும் உருளைகள் இங்கே காணலாம். இயல்பாக, பின்னுதைப்புச் சுருள்வில் பூட்டும்-துண்டை பின்பக்கமாக தள்ளும், இதனால் இது குழலையும் பின்தள்ளி, பூட்டும்-உருளைகளை அதன் குழிகளுக்குள்ளேயே பிடித்து வைக்கிறது. (இங்கே சில படங்களில், பின்னுதைப்புச் சுருள்வில் கழற்றப்பட்டு இருக்கும்)

துப்பாக்கி சுடப்படுகையில், குழல், நழுவி மற்றும் பூட்டும்-துண்டு (படத்தின் வலது பக்கத்தில்) ஆகியவை ஒரு சற்றே பின்பக்கமாக நகரும், அப்போது பூட்டும்-துண்டு மட்டும் சட்டத்தின்மேல் இருக்கும் ஒரு இரும்பிதழால் தடுத்து நிறுத்தப்படும். (படத்தில் இடப் பக்கத்தில் தடுக்கும் இரும்பு-இதழை ஒரு குச்சியால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது).

பூட்டு அவிழ்தல் / விடுவிப்பு[தொகு]

இரும்பிதழால் பூட்டும்-துண்டு நிறுத்தப்பட்ட பின்பு; நழுவியும் உருளைகளும், பூட்டும்-துண்டின் குழியான பகுதியை அடையும் வரை, தொடர்ந்து பின்னோக்கி நகரும். அதன்பிறகு உருளைகள் உள்பக்கமாக நகர்ந்து, நழுவியை குழலில் இருந்து  விடுவிக்கும். 

முன்நகர்வு இயக்கம்[தொகு]

அதேவேளையில், பூட்டும்-துண்டால் குழல் நிறுத்தப்படும். பின்னுதைப்புச் சுருள்வில்லின் அழுத்தத்திற்கு எதிரான உந்தம், நழுவியை முன்பக்கமாக செலுத்தும். மற்ற வடிவமைப்புகளைப் போலவே முன்னோக்கிய நகர்வின்போது, சேமகத்தில் இருந்து ஒரு புதிய வெடிபொதியை நழுவி பிரித்தெடுத்துச் செல்லும்.  

நழுவி முன்னோக்கி நகர்கையில், பூட்டும்-துண்டு வெளித்தள்ளும் அழுத்தத்தை உருளைகளின் மீது செலுத்தும். உருளைகளின் குழிகளை அடைந்தவுடன், பூட்டும்-துண்டு உருளைகளை அக் குழிகளுக்குள் தள்ளிவிட்டு, பூட்டும்-துண்டு முன்நகர்ந்து நழுவியின் குழிக்குள் பதிந்து, நழுவியை மீண்டும் குழலோடு பூட்டுகிறது. குழலும் நழுவியும் சற்று முன்நகர்ந்து நின்றபின், அடுத்த சுழற்சிக்கு தயாராகிவிடும்.  

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.makarov.com/pdf/cz52d.pdf
  2. Muramatsu, Kevin (18 July 2012). The Gun Digest Book of Automatic Pistols Assembly/Disassembly. Iola, Wisconsin: Gun Digest Books. பக். 216–225. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4402-3006-4. https://books.google.com/books?id=YAjzU4WjeLoC&pg=PA216. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2017-06-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளை_பூட்டுதல்&oldid=3661657" இலிருந்து மீள்விக்கப்பட்டது