இராஜாத்தி குஞ்சிதபாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராசாத்தி குஞ்சிதபாதம்  (Rajathi Kunchithapatham) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

இவர் 1957 மற்றும் 1962 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 1957 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் வெற்றிபெற்ற இரு சட்டமன்ற உறுப்பினர்களில் இவர் ஒருவரும், மற்றொருவர் சோமசுந்தரம் என்பவரும் ஆவார்.

பின்னர் 1971 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு பி. பத்மனாபன் என்பவரிடம் 16,952 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[3] 

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
  3. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜாத்தி_குஞ்சிதபாதம்&oldid=3544242" இலிருந்து மீள்விக்கப்பட்டது