லியோ வரத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியோ வரத்கர்
தலைமை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 சூன் 2017
குடியரசுத் தலைவர்மைக்கேல் D. இக்கின்சு
TánaisteFrances Fitzgerald
Simon Coveney
முன்னையவர்என்டா கென்னி
ஃபைன் கேயல் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 சூன் 2017
Deputyசீமோன் கொவேனி
முன்னையவர்என்டா கென்னி
சமூகப் பாதுகாப்பு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 மே 2016
Taoiseachஎன்டா கென்னி
முன்னையவர்ஜோன் பர்டன்
நலவாழ்வுத் துறை அமைச்சர்
பதவியில்
11 சூலை 2014 – 6 மே 2016
Taoiseachஎன்டா கென்னி
முன்னையவர்ஜேம்ஸ் ரெய்லி
பின்னவர்சைமன் ஹாரிஸ்
போக்குவரத்து, சுற்றுலா, விளையாட்டுத் துறை அமைச்சர்
பதவியில்
9 மார்ச் 2011 – 11 சூலை 2014
Taoiseachஎன்டா கென்னி
முன்னையவர்பேட் கேரி (போக்குவரத்து)
பின்னவர்பசல் டோனோஹோ
டெச்ச்டா டாலா
பதவியில் உள்ளார்
பதவியில்
2007 சூன்
தொகுதிடப்ளின் மேற்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 சனவரி 1979 (1979-01-18) (அகவை 45)
அயர்லாந்து, டப்ளின், கோல்க்னாக்
தேசியம்ஐரிஷ்
அரசியல் கட்சிஃபைன் கேயல்
உள்ளூர்த் துணைமத்தேயு பாரெட்
பெற்றோர்(கள்)
  • அசோக் வரத்கார்
  • மிரிலியம் வரத்கார்
கல்விதி கிங்ஸ் ஹாஸ்பிடல்
முன்னாள் கல்லூரிடிரினிட்டி கல்லூரி
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

லியோ வரத்கர் (Leo Varadkar (Irish pronunciation: [ˈlʲoː ˈvˠaɾˠəd̪ˠkəɾˠ]; பிறப்பு 18 சனவரி 1979) என்பவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதியும் சூன் 2017 முதல் அயர்லாந்தின் தலைமை அமைச்சராகப் பதவியில் உள்ளவரும் ஆவார். இவர் அயர்லாந்தின் ஃபைன் கேயல் கட்சியின் தலைவராவார். என்டா கென்னியின் ஓய்வுக்குப் பின், ஜூன் 2, 2017 இல், ஃபைன் கேயல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெய்ல் எயிரான் ஒப்புதலின் பின்னர், ஜூன் மாதம் அவர் தாவோய்சாக்கை நியமிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் டப்ளினின் மேற்கு தொகுதியின் டீச்ச்த டாலாவாக (TD) உள்ளார். இவர் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக 2011 முதல் 2014 வரையும், 2014 ஆம் ஆண்டு முதல் 2016 வரையில் நலவாழ்வு அமைச்சராகவும், 2016 முதல் சமூக பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். 2015 ஐரிஷ் திருமண வாக்கெடுப்பின்போது அவர் தன்னை வெளிப்படையாக தன்பாலின உறவுப் பழக்கமுள்ளவர் என அறிவித்தார்.[1]

வரத்கர் டப்ளினில் பிறந்தவர், டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் மருத்துவம் பயின்றார். இவர் 2010 இல் பொது மருத்துவர் என தகுதிபெறுவதற்கு முன் இளநிலை மருத்துவராக பல ஆண்டுகள் கழித்தார். 2004-ம் ஆண்டு ஃபிங்கல் கவுண்டி கவுன்சில் என்னும் உள்ளாட்சி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் டெய்ல் ஈயரன்னைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு துணை மேயராக பணிபுரிந்தார்.

உள்கட்சி அழுத்தத்தால் சில மாதங்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் என்டா கென்னி தனது கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகினார். அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கான உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. லியோ மற்றொரு அமைச்சரான சைமொன் கொவ்னியைத் தோற்கடித்தார். அவர் கட்சியின் 60 சதவீத வாக்குகளைப் பெற்று மிகப் பெரிய ஆதரவுடன் தலைவராகியுள்ளார். கூடிய விரைவில் அயர்லாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ளார்.[2] ஐரிஷ் அரசியல் கட்சியின் முதல் வெளிப்படையான தன்பாலின தலைவராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவராகவும் இவர் குறிப்பிடத்தக்கவராக உள்ளார்.

முன் வாழ்க்கை[தொகு]

இவர் 1979 சனவரி 18 இல் டர்பனில் உள்ள ரோட்டந்தா மருத்துவமனையில் பிறந்தார். இவர் அசோக் வரத்கார் மற்றும் மிரிலியம் வரத்கார் ஆகியோரின் ஒரே மகன் ஆவார். இவரது தந்தை இந்தியாவின் பம்பாயில் பிறந்தவர், 1960 களில் மருத்துவராக பணியாற்ற இங்கிலாந்துக்கு வந்தார்.[3] துங்காரில் பிறந்த இவரது தாயார், தனது எதிர்கால கணவரை செவிலியாக பணியாற்றிக் கொண்டிருந்தபொழுது சந்தித்தார். அவர்கள் லீசெஸ்டரில், ஒன்றாக வாழ்ந்தனர், அங்கு அவர்களின் மூன்று குழந்தைகளில் மூத்தவரான, சோஃபி பிறந்தார். 1973 இல் இவர்கள் டப்ளினில் குடியேறுவதற்கு முன்பு, முதலில் இந்தியாவுக்கு குடும்பம் இடம் பெயர்ந்தது, அங்கு அவர்களின் இரண்டாவது குழந்தையான சோனியா பிறந்தார். பின் மீண்டும் அயர்லாந்து திரும்பிய இந்தத் தம்பதியருக்கு 1979 ஆம் ஆண்டு பிறந்தார் லியோ. இந்து தந்தைக்குப் பிறந்த அவர் கத்தோலிக்க முறைப்படியே வாழ்ந்தார். அவர்களது ஒரே ஆண் மகனான லியோவை அவரது விருப்பத்தின் அடிப்படையில் வாழ அனுமதித்தனர்.[4]

லியோ பிளான்சார்ஸ்டவுனில் உள்ள, செயின்ட் பிரான்சிஸ் சேவியர் நேஷனல் பள்ளியில் படித்தார். அவருடைய இரண்டாம் நிலைக் கல்வியானது பால்கர்ஸ்டவுனில் தி கிங்ஸ் ஹாஸ்பிடலில் தொடர்ந்தது, இது சர்ச் ஆப் அயர்லாந்தின் ஒழுங்கின் கீழ் இயங்கும் கட்டணம் செலுத்தும் பள்ளி ஆகும். அவரது இரண்டாம்நிலைப் பள்ளிக்கு அவர் ஃபைன் கேல்லில் சேர்ந்தார். அவர் டப்ளின் டிரினிட்டி கல்லூரியில் (டி.சி.டி.) , அவர் சட்டப்படிப்பை மேற்கொண்டார். பின்னர் அவர் மருந்துவப் படிப்புக்கு மாறினார். இந்தக் காலகட்டத்தில்தான் லியோவுக்கு அரசியல் ஆர்வம் துளிர்த்தது. அயர்லாந்தின் பெரிய அரசியல் கட்சியான ஃபைன் கேயல் கட்சியின் இளைஞர் அமைப்பில் சேர்ந்து செயலாற்றத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஸ்வீடன் பிரதமராக இருந்த ஃபிரெட்ரிக் ரெய்ன்ஃபெல்ட் தொடங்கிய ஐரோப்பிய மக்கள் கட்சியின் இளைஞர் அமைப்பின் அயர்லாந்து துணைத் தலைவராகவும் செயலாற்றி வந்தார்.[5]

அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்கும் பொருட்டு நடத்தப்படும் ‘வாஷிங்டன் அயர்லாந்து திட்ட’த்துக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அயர்லாந்திலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை வாஷிங்டன் நகருக்கு உட்பட்ட இடங்களில் அரசுப் பணிகளில் நியமித்து அவர்களுக்குத் தலைமைப் பண்பை உருவாக்குவதுதான் இதன் நோக்கம். இந்தத் திட்டத்தில் ஆறு மாத காலம் செயலாற்றியுள்ளார் லியோ. இவர் 2003 ஆம் ஆண்டில் மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். 2010 ஆம் ஆண்டில் பொது மருத்துவராக நியமிக்கப்பட்டதற்கு முன்னர், செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனை மற்றும் கொன்னோலி மருத்துவமனையில் ஒரு இளநிலை மருத்துவராக பணிபுரிந்தார்.

அரசியல் வாழ்வு[தொகு]

ஃபிங்கல் கவுண்டி கவுன்சில்: 2003–2007[தொகு]

1999-ல் மருத்துவம் இரண்டாமாண்டு படிக்கும்போது தனது 20 வயதில் உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 380 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். ஷாலி டெர்ரிக்கு மாற்றாக கோட்ஸ்கோனிக் பகுதிக்காக 2003 இல் ஃபிங்கல் கவுண்டி கவுன்சிலுக்கு வராட்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு ஃபிங்கல் கவுண்டி கவுன்சில் என்னும் உள்ளாட்சி சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6]

டெய்ல் எயிரான்: 2007–தற்போதுவரை[தொகு]

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதன் முறையாக டெய்ல் எயிரான் என்னும் ஆட்சி மன்றத்துக்குள் உறுப்பினராக நுழைந்தார்,[7] 2007 முதல் 2010 வரை நிறுவன, வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு பிரிவுக்கான கட்சியின் செய்தித் தொடர்பாளராக ஆனார்.[8] 2011 பொதுத் தேர்தலில், லியோ 8,359 முதல் முன்னுரிமை வாக்குகள் (4 தொகுதியில் உள்ள வாக்கெடுப்பில் 19.7% வாக்குகள்) பெற்று டெய்ல் எயிரனுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் விளையாட்டு அமைச்சர்: 2011-2014[தொகு]

2011 ஆம் ஆண்டு தேர்தலில் ஃபைன் கேயல் கட்சி தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்தபோது முதன்முறையாக லியோ போக்குவரத்துத் துறை அமைச்சராக 2011 மார்ச் 9 அன்று நியமிக்கப்பட்டார்.[9]

நலவாழ்வு அமைச்சர்: 2014-2016[தொகு]

2014 சூலையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, லியோ நலவாழ்வுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.[10][11]

2016 பிப்ரவரி பொதுத் தேர்தலில் மீண்டும் டெய்லிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் நலவாழ்வு அமைசர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். நலவாழ்வு அமைச்சராக அவரது இறுதி செயல்களில் ஒன்றாக, மனநல சுகாதாரத்திற்கான வருடாந்திர வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுவந்த 35 மில்லியன் யூரோக்களில் இருந்து 12 கோடி யூரோவாக லியோவால் குறைக்கப்பட்டது. வெட்டப்பட்ட தொகை வேறு எங்காவது அவசியமான தேவைக்கு பயன்படுத்தப்படலாம் என்றார்."[12]

சமூக பாதுகாப்பு அமைச்சர்: 2016-தற்போது வரை[தொகு]

2016 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாளன்று, சமூக பாதுகாப்பு அமைச்சராக லோயோ நியமிக்கப்பட்டார்.[13]

ஃபைன் கேயல் கட்சித் தலைவர்[தொகு]

2017 சூன் 2 அன்று, லியோ ஃபைன் கேயல் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Armstrong, Kelly."'
  2. ஜெய் (9 சூன் 2017). "வாங்'கே' பி.எம்..!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2017.
  3. Varad village in Maharashtra rejoices as Leo Varadkar is set to be Irish PM The Indian Express
  4. Bielenberg, Kim (4 June 2011). "Why Leo, the petulant political puppy, is still happily wagging his tail". Irish Independent. http://www.independent.ie/lifestyle/why-leo-the-petulant-political-puppy-is-still-happily-wagging-his-tail-26739416.html. பார்த்த நாள்: 3 June 2017. "His father is Hindu and his mother Catholic. When they got married in church they had to get special permission and agree to bring up the children as Catholic. Varadkar once said: "They deliberately decided that if we were to be brought up in a Western country that we would be brought up in the culture of our country. I think it's a sensible thing."" 
  5. "The Saturday Interview". The Irish Times. 20 November 2010 இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022153536/http://www.irishtimes.com/newspaper/weekend/2010/1120/1224283746408.html. 
  6. "Leo Varadkar". ElectionsIreland.org. பார்க்கப்பட்ட நாள் 8 September 2009.
  7. "Mr. Leo Varadkar". Oireachtas Members Database. பார்க்கப்பட்ட நாள் 8 September 2009.
  8. Bardon, Sarah (3 June 2017). "Profile: Leo Varadkar (FG)". The Irish Times. http://www.irishtimes.com/news/politics/oireachtas/profile-leo-varadkar-fg-1.2552227. பார்த்த நாள்: 3 June 2017. 
  9. "Noonan named as new Finance Minister". RTÉ News. 9 March 2011. http://www.rte.ie/news/2011/0309/finance-business.html. 
  10. "Taoiseach announces new Cabinet". RTÉ News. 11 July 2014. http://www.rte.ie/news/2014/0711/629951-cabinet/. பார்த்த நாள்: 11 July 2014. 
  11. Kelly, Fiach (11 July 2014). "Leo Varadkar to replace Reilly as Minister for Health". The Irish Times. http://www.irishtimes.com/news/politics/leo-varadkar-to-replace-reilly-as-minister-for-health-1.1862975. பார்த்த நாள்: 11 July 2014. 
  12. McKeowen, Michael (27 April 2016). "Varadkar: 'Mental health funding cuts were not supposed to happen but they are necessary as the funding could be better used elsewhere'" இம் மூலத்தில் இருந்து 7 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160507001534/http://theliberal.ie/varadkar-mental-health-funding-cuts-were-not-supposed-to-happen-but-they-are-necessary-as-the-funding-could-be-better-used-elsewhere/. 
  13. Leo Varadkar insists new ministry is not a demotion பரணிடப்பட்டது 8 மே 2016 at the வந்தவழி இயந்திரம், Irish Mirror, 7 May 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியோ_வரத்கர்&oldid=3578580" இலிருந்து மீள்விக்கப்பட்டது