லைலாபதி பட்டாசார்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லைலாபதி பட்டாச்சார்ஜி
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்இந்திய புவியியல் ஆய்வு மையம்
கல்வி கற்ற இடங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
Academic advisorsசத்தியேந்திர நாத் போசு
அறியப்படுவதுபடிக அமைப்பாய்வு
துணைவர்சிவா பிரத பட்டாசார்ஜி
பிள்ளைகள்2

லைலாபதி பட்டாச்சார்ஜி (பெண்ணின் பிறப்பிடு பெயர் ரே) ஒரு கனிமவியலாளர் (mineralogist), படிக அமைப்பாய்வியலர் (crystallographer) மற்றும் இயற்பியலாளர். இவர் பிரபல விஞ்ஞானி சத்யேந்திர நாத் போசுடன் பயின்றவா். இவர் இயற்பியலில் முதுகலை பட்டத்தினை 1951 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைகழகத்தில் நிறைவு செய்தார்.

கட்டமைப்பு படிகவியல், ஒளியியல் மாற்ற முறைகள், கணினி நிரலாக்கம், தறுவாய் மாற்றம், படிக வளர்ச்சி, இடகிடப்பியல், கருவிமயமாக்கல் போன்ற துறைகளில் முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.[1][2][3] இவர் இந்திய புவியியல் ஆய்வு மையம் நிறுவனத்தில் மூத்த கனிமவியலாளராக (Mineralogist) பணியாற்றி பின்னர் (கனிம இயற்பியல்) என்ற அமைப்பின் இயக்குனரானார். இவர் இயற்பியல் பேராசிரியர் சிவா பிரத பட்டாசார்ஜி, என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது மகன் சுப்ரத பட்டார்ஜி மற்றும் மகள் சோனாலி கா்மகார் உடன் வசித்து வருகிறார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லைலாபதி_பட்டாசார்ஜி&oldid=3725222" இலிருந்து மீள்விக்கப்பட்டது