முதலாம் பவவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பீமவர்மன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
முதலாம் பவவர்மன்
Bhavavarman I
சென்லா மன்னர்
ஆட்சி550-590
முன்னிருந்தவர்உருத்திரவர்மன்
பின்வந்தவர்மகேந்திரவர்மன்
அரசிகம்போஜலட்சுமி
முழுப்பெயர்
பவவர்மன்
தந்தைவிராகசர்மன்
இறப்பு600 (2024-04-09UTC19:25:43)
பவபோரா, சென்லா
சமயம்சைவ சமயம்

பீமவர்மன் அல்லது பவவர்மன் என அழைக்கப்படும் முதலாம் பவவர்மன் (Bhavavarman I; கெமர்: ភវវរ្ម័នទី១) என்பவர் பின்னாளில் கெமர் பேரரசாக மாறிய சென்லா இராச்சியத்தின் மன்னர் ஆவார். இவரது ஆட்சிக்காலம் முழுமையாகத் தெரியாது விடினும், இவர் கிபி 550-590-களில் ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது.

இவர் பல்லவ அரச பரம்பரையைச் சார்ந்தவர். மூன்றாம் சிம்மவர்மனின் இளைய மகனாவர். இவரின் அண்ணன் களப்பிரரைத் தமிழகத்தில் வென்று பல்லவரை வலுப்பெறச் செய்த சிம்மவிட்டுணு ஆவார்.

பொது[தொகு]

சியார்ச் சியோடசு (George Coedès) என்பவர் தா புரோம் (Ta Prohm) கோவில் பற்றிய அவரது வாசிப்பிலிருந்து, கம்பூஜ-ராஜ-இலட்சுமி (Kambujarajalakshmi) என்ற இளவரசி பவவர்மனின் இராணியாக இருந்ததையும், அவர் மூலமாகவே அவர் அரச பரம்பரையைப் பெற்றார் என்றும் கூறியுள்ளார். அத்துடன் பவவர்மன் அண்டையில் இருந்த மிகவும் சக்திவாய்ந்த கம்போடிய இராச்சியமான பூனான் (Funan) இராச்சியத்தின் மன்னரின் பேரனாகவும் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.[1]:66–67

எவ்வாறாயினும், கிளாட் சாக் (Claude Jacques) என்ற கல்வெட்டு அறிஞரின் அடுத்தடுத்த ஆய்வுகளில், கம்பூஜ-ராஜ-லட்சுமி மற்றொரு மன்னரான முதலாம் கர்சவர்மனின் (Harshavarman I) (ஆட்சி: கிபி 910-923) இராணி என்றும், இதனால் கம்புஜ-ராஜ-லட்சுமி மூலம் பவவர்மன் அரச வம்சத்தைப் பெற்றிருக்க முடியாது எனவும் வாதிடுகிறார்.

கடற்பயணம்[தொகு]

சிம்மவிட்ணு பல்லவ அரசனாக இருந்த காலத்தில் பல்லவரே அனைவரை விடவும் வலுவாக இருந்தனர் ஆகையால் அவர்களே குணகடலான வங்க கடலுக்கு அதிபதியாகத் திகழ்ந்தனர். அதனால் கீழை நாடுகளுடன் வாணிபம் செய்தனர். மேலும் அரசியல் அதிகாரம் செலுத்தினர்.

இலங்கையின் வடக்கு பகுதியில் பல்லவ ஆதிக்கம் இருந்தது. மேலும் கீழை நாடான பண்ணையத்தில் (சுமத்திரா கிழக்கு கடற்கறை) சைலேந்திர வம்சத்தவரான சீறி ஜெய சேனா என்பவரை அரசராக்க பல்லவ கடற்படை உதவியது. மேலும் சோனகம்/மாப்பாளம் என்ற தாய்லாந்தில் சூரியவிக்ரமன் துவாரவதி அரசை நிறுவ உதவியது.

சென்லா அரசர் (கம்போடியா)[தொகு]

இந்த படையெடுப்புக்கு சிம்மவிட்ணுவின் தம்பி பீமவர்மன் தலைமை கொண்டார். ஆதலால் கம்போசம் சென்ற பொழுது அங்கு சென்லா அரசை இந்திரபுரியைத் தலைநகராகக் கொண்டு நிறுவிய உருத்திரவர்மனின் மகளை மணந்து அந்த நாட்டின் அரசரானார். அதன் பின் அவர் வழியினரே அரசாண்டனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. George Coedès (1968). Walter F. Vella. ed. The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-0368-1. 
  • George Coedès, "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd, 1962.
  • George Coedès, "La Stèle de Ta-Prohm", Bulletin de l'École française d'Extrême-Orient (BEFEO), Hanoi, VI, 1906, pp. 44–81.
  • Claude Jacques, “'Funan', 'Zhenla'. The reality concealed by these Chinese views of Indochina”, in R. B. Smith and W. Watson (eds.), Early South East Asia: Essays in Archaeology, History, and Historical Geography, New York, Oxford University Press, 1979, pp. 371–9, p. 373.
  • Ha Van Tan, "Óc Eo: Endogenous and Exogenous Elements", Viet Nam Social Sciences, 1-2 (7-8), 1986, pp. 91–101, pp. 91–92.
முன்னர்
உருத்திரவர்மன்
சென்லா மன்னர்
550-600
பின்னர்
மகேந்திரவர்மன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_பவவர்மன்&oldid=3681044" இலிருந்து மீள்விக்கப்பட்டது