பேச்சு:மின்காந்தக் கதிர்வீச்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சில கருத்துக்கள்[தொகு]

இக்கட்டுரை மிகப் பயனுள்ளதாய் இருப்பினும் சில முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன.

  • பொதுவான அலைகள் பற்றிய தகவல்கள் அலை கட்டுரையில் இடம்பெற வேண்டும்
  • கலைகளஞ்சியத்தில் பாடப்புத்தகத்தின் நடையில் கட்டுரையைப் புரிந்து கொள்ளத் தேவைப்படும் அனைத்து விவரங்களையும் முன்னரே தர வேண்டியதில்லை. அலை கட்டுரைக்கு இணைப்பு மட்டும் தந்தால் படிப்பவர்களுக்குப் போதுமானது.
  • நடைக்கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி கட்டுரையின் முதல் வரியில் கட்டுரையின் தலைப்பு வர வேண்டும். அதிலும் குறிப்பாக தலைப்பின் வரைவிலக்கணம் வர வேண்டும். இக்காரணத்தால் இக்கட்டுரையின் தலைப்பை மின்காந்த அலைகள் என்று மாற்றலாம் என்று எண்ணுகிறேன்.
  • பொதுவான நடையும் ஒரு கையேட்டைப் போலன்றி ஒரு ஆய்வுக் கட்டுரை போல் இருத்தல் நலம்.

நற்கீரன், உங்கள் பங்களிப்பு விக்கிபீடியாவிற்கு மதிப்பு கூட்டும் வகையில் உள்ளது. எனது மேற்கூறப்பட்ட கருத்துக்களை பரிசீலித்து தேவையான மாற்றங்களை செய்யவும். -- Sundar \பேச்சு 06:18, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

சுந்தர் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
நான் முழுமையாக மின்காந்த அலைகள் பற்றிய ஒரு பதிவை மேற்கொண்டுவிட்டு, பின்னர் அதை விக்கிபீடியாவிற்ற்க்கு ஏற்ற படி ஒழுங்கு படுத்தலாம் என்று இருக்கின்றேன். எழுதும் பொழுது முழு சிந்தனை ஓட்டமும் ஒருங்கே அமைந்தால் இலகுவாக இருக்கின்றது. இது எழுத்தில் இருக்கும் ஒரு கட்டுரை, சற்று விரிந்த ஒரு கட்டுரை அல்லது கருத்துக்களின் தொகுப்பை பதியலாம் என்று இருக்கின்றேன். (இக் கட்டுரையை நான் மட்டுமே சில காலங்களுக்கு தொகுக்க ஏலுமாதிரிக்கு பூட்டு அல்லது அறிவுறுத்தல் செய்யலாமா?)
கையேடு நடை என்பது சரிதான். காரணம் குறைந்தபட்ச புரிதலையாவது வேண்டி நிற்பதுதான். நான் சொல்ல முனையும் சில விதயங்கள் ஆங்கித்திலேயே என்னை மீறி நிற்பன. தமிழில் நான் சொல்லும் பொழுது அடிப்படை புரிதல் ஆவது இருக்க வேண்டும் (எனக்கு!) என்று நினைக்கின்றேன். எழுதிய பின் சீரமைக்க முடியுமா என்று பார்க்கலாம்.

--Natkeeran 12:51, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

உங்கள் சிக்கல்கள் புரிந்தன. படிப்படியாக மேம்படுத்திக் கொள்ளலாம். உங்கள் விருப்பம் போல செய்யுங்கள்.
நீங்கள் மட்டும் தொகுக்க வேண்டுமெனில் பயனர்:Natkeeran/மின்காந்த அலை என்ற கட்டுரையை ஏற்படுத்தி தொகுக்கலாம். பிறரும் தொகுக்கலாம் என்ற நிலை வரும்போது மின்காந்த அலை கட்டுரைக்கு நகர்த்திக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 12:59, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
Natkeeran u can include the template Template:தொகுக்கப்படுகிறது at the top of ur article if u want to inform others that u r currently editing or intend to improve the article soon. but as such u cannot lock the page. sundars idea is also good.--ரவி (பேச்சு) 13:12, 10 ஆகஸ்ட் 2005 (UTC)
நன்றி சுந்தர், ரவி.

இக் கட்டுரை எழுதும் பொழுது எழும் சில சிக்கல்கள்:- என் குறிப்புக்கள்[தொகு]

1. இக் கட்டுரைக்கான கணித பின்னணி இன்னும் எழுதப்படவில்லை
2. இக் கட்டுரையில் பாவிக்கப்படும் "கலை" சொற்கள் பொதுவாக பாவிக்கப்படுகின்றனவா என்பது தெரியவில்லை
3. இக் கட்டுரையில் உபயோகிக்கப்படும் குறீயீட்டு முறைகள் குழப்பங்கள் விளைவிக்கலாம்.
4. இக் கட்டுரையின் இறுதி இலக்கு எது?
--Natkeeran 23:39, 10 ஆகஸ்ட் 2005 (UTC)

Natkeeran, my kudos for initiating such a good article on electro magnetic waves. Even though I have been educated in english medium, I can understand or guess the technical terms u have used. Thats good. If u have any doubt regarding the use of technical words u can consult the glossary in http://www.tamilvu.org/coresite/html/cwhomepg.htm . If there is a difference between words used in TN and Lanka, u may mention either of the words in brackets. Or you can give a அருஞ்சொற்பொருள் பட்டியல் as found in the நகர்பேசி article. I guess u r comfortable with an explanatory or text book style of writing. No probs :) u can save this style of article and start a e-book on electromagnetic waves in http://ta.wikibooks.org . there u will not be strained to follow the encyclopedia style of writing. Where ever u feel that further explanation of the term is needed u can give an internal link for that try writing separate article on that later. We assume that our reader has background basic knowledge about the article he reads. so it is not necessary that we explain everything in one article.it is not possible also..what we can do is to give internal links which will help him undrestand the article better. The final goal of the article may be to define EM waves, explain its properties and mention prominent researches associated with the development of this field and u may mention where EM wavesdfinds use in modern technology--ரவி (பேச்சு) 12:17, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

You can also see http://www.thozhilnutpam.com/. -- Sundar \பேச்சு 13:36, 11 ஆகஸ்ட் 2005 (UTC)

தலைப்பு மாற்றம்[தொகு]

ஆங்கில விக்கிப்பீடியாவில் Electromagnetic wave கட்டுரை Electromagnetic radiation கட்டுரைக்கு வழிமாறுகிறது. நாம் ஆக்க வேண்டிய கட்டுரைகளில் மின்காந்தக் கதிர்வீச்சு என்பதும் ஒன்று. இக்கட்டுரையின் தலைப்பை மின்காந்தக் கதிர்வீச்சு என மாற்றலாமா--இரவி (பேச்சு) 08:25, 13 மார்ச் 2012 (UTC)