வெள்ளையாம்பட்டு சுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளையாம்பட்டு சுந்தரம் விழுப்புரம் மாவட்டம் வெள்ளையாம்பட்டில் பிறந்தவர் ஆவார்.

பன்முகம்[தொகு]

சிறந்த தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பேச்சாளர், பதிப்பாளர் என்ற நிலைகளில் பன்முகத் தன்மை வாய்ந்தவர். தன்னுடைய தொடர்ந்த வாசிப்பின் காரணமாக தமிழில் புலமை பெற்று விளங்கியவர். [1] இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். [2]

அறிஞர் தொடர்பு[தொகு]

க.அப்பாத்துரையார், வீ. முனிசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், ம.பொ.சிவஞானம், வாணிதாசன், சுரதா உள்ளிட்ட பலருடன் பழகும் வாய்ப்பினைப் பெற்றவர். 1946இல் பகுத்தறிவாளரான இவர் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராகவும், பல திரைப்படங்களுக்க உதவி இயக்குநராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இரா.நாகசாமி, இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, ச.கிருஷ்ணமூர்த்தி ஆகிய அறிஞர்களோடு தொடர்பு கொண்டிருந்தவர். [1]

பதிப்புப்பணி[தொகு]

1963இல் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் துவக்கிய இவர், 1,100 நூல்களைப் பதிப்புத்துள்ளார். இவர் பதிப்புத்துள்ள நூல்களில் கல்வெட்டு, செப்பேடு, கோயில்கள் மற்றும் ஊர்களைப் பற்றியவை உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. [1] ஓலைச்சுவடி, கல்வெட்டுத் துறைகளில் ஈடுபாடு உடைய இவர் பொது மக்களின் நலனுக்காகப் புதிய கருத்தினைச் சொல்லும் நூலாசிரியர்களையும், நூல்களையும் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஆவார். [3] கல் சொல்லும் கதைகள் [4], பெரியாரின் புரட்சி முகங்கள் [5], குடந்தை என்.சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள் [6] [7], சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும் [8] உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

இறப்பு[தொகு]

இவர் 31 மே 2017 அன்று சென்னையில் இயற்கை எய்தினார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 தமிழ் ஆர்வலர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மரணம், தினமலர், 1 சூன் 2017
  2. பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் காலமானார், தினமணி, 2 சூன் 2017
  3. "வீறிய மிக்க வெள்ளையாம்பட்டு", முனைவர் சாமி. ஜகத்ரட்சகன், வரலாற்று வாயில்கள், கவிமாமணி கல்லாடன், குழலி பதிப்பகம், பாண்டிச்சேரி, 2003
  4. கன்னிமாரா பொது நூலகம்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. உடுமலை, பெரியாரின் புரட்சி முகங்கள், ஆய்வுக்கட்டுரை
  6. "உடுமலை, குடந்தை என்.சேதுராமன் ஆய்வுக்கட்டுரைகள்". Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-02.
  7. ஆ.சிவசுப்பிரமணியன், திருமடைப்பள்ளியும், கருப்புக்கட்டியும், காலச்சுவடு, நவம்பர் 2014[தொடர்பிழந்த இணைப்பு]
  8. சர்.பிட்டி.தியாகராயர் வாழ்வும் வாக்கும், Tamil Bookz[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]