ஆம்லா ரூயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆம்லா ரூயா
தேசியம்இந்தியன்
பணிஇந்திய சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுசமூக சேவகி

ஆம்லா ரூயா (Amla Ruia) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகி ஆவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ஆம்லா ரூயா உத்திர பிரதேசத்தில் பிறந்தார்.[1] தற்போது அவர் மும்பை மகாராஷ்டிராவில் உள்ள மலபார் ஹில் எனுமிடத்தில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் ராஜஸ்தானை சேர்ந்தவர்.[2] இவர் கவிஞரும், பாடலாசிரியரும், கலைஞரும், ஆன்மீக ஆசிரியருமாவார்.[3]

சேவை[தொகு]

இவர் நீர் ஆதாரங்களை ஏற்படுத்தியதன் மூலம் அறியப்படுகிறார்.[4].தன்னுடைய மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சத்தை மாற்றியமைக்க வேண்டுமென்று ஆகர் தொண்டு நிறுவனத்தை நிறுவினார்.இதன் மூலம் பல கிராமங்களில் நீர் தேக்கங்களையும் அணைகளையும் ஏற்படுத்தியுள்ளனர்.

ஆகர் தொண்டு நிறுவனம்[தொகு]

அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் நீர், தாவரங்கள் மற்றும் மண் போன்ற இயற்கை ஆதாரங்களின் பாதுகாப்பினை ஏற்படுத்துதல் ஆகும்.நீர் என்பது மக்களின் சமூக அங்கீகாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இங்குள்ள மக்கள் உணர்த்தியுள்ளனர்.[3].

சாதனைகள்[தொகு]

தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 216-க்கும் மேலான நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர்.[2].இதனால் 117 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயனடகின்றனர்.[3].

விருதுகள்[தொகு]

2011 ஆம் ஆண்டில், இவருக்கு சமூக சேவை மற்றும் சமூக மேம்பாட்டின் வகைக்கான லக்ஷ்மிபத் சிங்கானியா - ஐஐஎம், லக்னோ தேசிய தலைமை விருது வழங்கப்பட்டது.[4][5].இங்கு உள்ள மக்கள் இவரைதண்ணீரின் அன்னை என்று அழைக்கின்றனர்.[2].[3].

சான்றுகள்[தொகு]

  1. "About the Trust". Aakar Charitable Trust. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.
  2. 2.0 2.1 2.2 http://www.vikatan.com/avalvikatan/2016-may-03/inspiring-stories/118268-amla-ruia-rajasthans-mother-of-water.html
  3. 3.0 3.1 3.2 3.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
  4. 4.0 4.1 "Leadership Awards". Hindustan times இம் மூலத்தில் இருந்து 18 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150118202726/http://www.hindustantimes.com/business-news/premji-nayar-win-biz-awards/article1-966634.aspx. 
  5. "LAKSHMIPAT SINGHANIA - IIM, LUCKNOW NATIONAL LEADERSHIP AWARDS - 2013". www.lpsiimlawards.in. Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்லா_ரூயா&oldid=3542708" இலிருந்து மீள்விக்கப்பட்டது