மரப்பட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதிர்ந்த மாமரத்தின் (மாஞ்சிபெரா இண்டிகா) மரப்பட்டை
ஜப்பானிய மேப்பிள் மரப்பட்டை

மரப்பட்டை (Bark) என்பது மரவகைத் தாவரங்களின் தண்டு மற்றும் வேரைச் சுற்றிக் காணப்படும் வெளி அடுக்காகும். மரங்கள், மரக்கொடிகள் மற்றும் புதர்செடிகள் (குறுமரம்) ஆகியவை மரப்பட்டைகளை கொண்டிருக்கும். சாற்றுக்குழலிடைச் சோற்றுத்திசுவுக்கு வெளியே காணப்படும் அனைத்து பகுதிகளும் மரப்பட்டை என அழைக்கப்படுகிறது.[1] மரப்பட்டை என்ற சொல்லானது அறிவியல் அடிப்படையிலான பெயரல்ல. மரத்தண்டை மூடியுள்ள மரப்பட்டையானது உள் பட்டை மற்றும் வெளிப்புற பட்டை என இரு வகையான பட்டைகளைக் கொண்டுள்ளது. பழைய தண்டுகளில் உயிருடன் உள்ள வாழும் திசுக்கள் உள்ள உள் பட்டை மற்றும் சுற்றுப்பட்டையின் உட்பகுதி (பெரிடெர்ம்) உள்ளார்ந்த பகுதியில் அடங்கியுள்ளன.பழைய தண்டுகளில் உள்ள வெளிப்புற மரப்பட்டை, தண்டுகளின் மேற்பரப்பில் உள்ள இறந்த திசுக்களை உள்ளடக்கியது,இதில் சுற்றுப்பட்டையின் வெளிப்பகுதி அடங்கியுள்ளது. கடைசியாக உருவாக்கப்பட்ட சுற்றுப்பட்டைக்கு வெளிப்புறமாக இருக்கும் மரங்களின் வெளிப்புற மரப்பட்டை ரைட்டிடோம் என்றும் அழைக்கப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

பட்டை சுவர் மற்றும் சுவர் உறைகள், மசாலா பொருட்கள் மற்றும் பிற சுவையூட்டிகள், டானின்,குங்கிலியம் (ரெசின்),மரப்பால், மருந்துகள், நச்சுப்பொருட்கள்,போதை அல்லது உணர்வுநீக்க வேதியப் பொருட்கள், மற்றும் தக்கை போன்ற எண்ணற்ற பொருட்கள் மரப்பட்டைகளிலிருந்து நமக்கு கிடைக்கிறது.துணி, பற்பசை மற்றும் கயிறுகளை தயாரிக்கவும் மரப்பட்டைகள் பயன்படுகிறது. ஓவியங்கள் மற்றும் வரைபடங்களுக்கான வரைதல்பரப்பாகப் பயன்படுத்தப்படுகிறது [2]. பல மரங்கள் அவற்றின் கவர்ச்சிகரமான மற்றும் விரும்பத்தக்க வண்ணகலப்புகளுடன் கூடிய தரைத்தளப் பயன்பாடுகளுக்காக வளர்க்கப்படுகின்றன[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Raven, Peter H.; Evert, Ray F.; Curtis, Helena (1981), Biology of Plants, New York, N.Y.: Worth Publishers, p. 641, ISBN 0-87901-132-7, OCLC 222047616
  2. Taylor, Luke. 1996. Seeing the Inside: Bark Painting in Western Arnhem Land. Oxford Studies in Social and Cultural Anthropology. Oxford: Clarendon Press.
  3. Sandved, Kjell Bloch, Ghillean T. Prance, and Anne E. Prance. 1993. Bark: the Formation, Characteristics, and Uses of Bark around the World. Portland, Or: Timber Press.
  4. Vaucher, Hugues, and James E. Eckenwalder. 2003. Tree Bark: a Color Guide. Portland: Timber
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரப்பட்டை&oldid=3701689" இலிருந்து மீள்விக்கப்பட்டது