கைபேசிவழிக் கற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைபேசிவழிக் கற்றல் (M-Learning) என்பது பல சூழ்நிலைகளில் கற்றல், சமூக, உள்ளடக்கத் தொடர்புகளைத் தனிப்பட்ட மின்னனியல் கருவிகள் மூலம் கற்றல் ஆகும்.[1][2]

திறந்தமுறை இணையக் கல்வியின் வழிப் பயிலும் மாணவர்கள் தங்களது நேர வசதிக்காக கைபேசிக் கருவிக் கல்வித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். கைபேசிவழிக் கற்றல் தொழில்நுட்பங்களில் கையடக்கக் கணினிகள், எம்பி 3 இசையலைககள், அலைபேசிகள் மற்றும் மேசைக்கணிப்பொறி ஆகியவை அடங்கும்.[3] கைபேசிவழிக் கற்றல் கற்போரின் இயக்கத்தின் மீது கவனம் செலுத்தி, சிறிய தொழில்நுட்பங்களுடன் தொடர்பு கொள்கிறது. கைபேசிக்கருவிகளைப் பயன்படுத்திக் கற்றல் பொருள்களை உருவாக்குவது முறைசாராக் கல்வியின் ஒரு முக்கியப் பகுதியாக அமைகிறது. கைபேசிவழிக் கற்றல் கிட்டத்தட்ட எங்கு இருந்தும் அணுக முடியும் வகையில் அமைந்துள்ளது.[4] உடனடிக் கருத்துகள், உதவிக்குறிப்புகள் மூலம் அதே உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிர்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. கைபேசிவழிக் கற்றல் புத்தகங்கள், குறிப்புகளுக்கு மாற்றாக விளங்குகிறது.

Parts of Group Collaboration

கைபேசிவழிக் கற்றல் மதிப்புகள்[தொகு]

[5]

  • வகுப்பறையில் புதிய தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவது முதன்மையானது. புத்தகங்கள், கணினிகளை விடவும் பயன்படுத்தப்படும் கைபேசிகள் மிகவும் இலகுவானவை.
  • கைபேசிவழிக் கற்றல் பயிற்றுவிக்கும் செயல்முறை வகைகளை மாணவர்களிடையே ஒன்றுகலந்த கற்றல் அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம்.
  • கைபேசிவழிக் கற்றல் கற்றல் செயல்பாட்டை ஆதரித்து ஒருங்கிணைக்கிறது.
  • கைபேசிவழிக் கற்றல் சிறப்பு தேவைகளுடன் கூடிய மாணவர்களுக்கான பயனுள்ள கூடுதல் கருவியாகும். இருப்பினும், குறுஞ்செய்தி, பல்லூடக குறுஞ்செய்தி ஆகியவை மாணவர்களிடம் குறிப்பிட்ட குறைபாடுகள், சிரமங்களைப் பெற்று இருக்கும்.
  • கைபேசிவழிக் கற்றல் இளைஞர்களைக் கற்றலில் மீண்டும் ஈடுபடுத்த ஒரு கொக்கி போலப் பயன்படுத்தப்படுகிறது.[6][7]

கைபேசிவழிக் கற்றல் நன்மைகள்[தொகு]

  • ஒப்பீட்டளவில் மலிவான விலையில் கிடைக்கின்றன. கைபேசிகள் தனிக்கணினி, மடிக்கணினிகளைக் காட்டிலும் விலை குறைவாக இருக்கும்.
  • பல்லூடக உள்ளடக்க, உருவாக்க ஏந்துகளைக் கொண்டிருக்கும்.
  • தொடர்ச்சியான கற்றலும் கற்றலில் ஆதரவும்.
  • பயிற்சி செலவு குறைவு.
  • இன்னும் கூடுதலான கற்றல் பட்டறிவு பெறுதல்.
  • மரபான கல்வி நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள்.
  • எளிதில் கிடைக்கும் வகையில் உள்ளது.
  • ஒத்திசைவுக் கற்றல் பட்டறிவு.[8]

அறைகூவல்கள்[தொகு]

  • இணைப்பும் மின்கல ஆயுளும்.
  • திரை அளவு.[8]
  • இடைநில்லாத வேக இணைப்பு.
  • ஒரு குறிப்பிட்ட கருவி ஏற்கும் கோப்பு / இயல்பு வடிவமைப்புகளின் எண்ணிக்கை.
  • படைப்பாக்க குழுவில் இருந்து உள்ளடக்கப் பாதுகாப்பும் பதிப்புரிமைச் சிக்கலும்.
  • பல தரநிலைகள், பல திரை அளவுகள், பல இயக்க முறைமைகள்.
  • கைபேசித் தளங்களில் இருக்கும் மின்-கற்றல் பொருட்கள் மறுபடி எடுப்பது.
  • வரையறுக்கப்பட்ட நினைவகம்.[9]

[10]

  • பாதுகாப்பு.
  • வேலை வாழ்க்கைச் சமனிலை.
  • முதலீட்டுச் செலவு.[11]

வளர்ச்சி[தொகு]

  • செய்முறைகள், ஆய்வுகள், வேலைகளில் பயன்படுதல்.
  • இடம் சார்ந்த, சூழ்நிலைக் கற்றல்.
  • சமூக வலைப்பின்னலைக் கைபேசிவழிக் கற்றல்.
  • கைபேசி விளையாட்டுகள்.<ref name="Singh 2010 65–72">Singh, Mandeep (2010). "M-learning: A New Approach to Learn Better". International Journal of Education and Allied Sciences 2 (2): 65–72. 

தகவல் வாயில்கள்[தொகு]

 இந்தக் கட்டுரை கட்டற்ற ஆக்கம் ஒன்றின் உரைக் பகுதியைக் கொண்டுள்ளது. Licensed under CC-BY-SA IGO 3.0 License statement: Digital Services for Education in Africa, UNESCO, UNESCO. UNESCO.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபேசிவழிக்_கற்றல்&oldid=3871998" இலிருந்து மீள்விக்கப்பட்டது