எஸ். தட்சிணாமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். தட்சிணாமூர்த்தி
இயற்பெயர்சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி ஜூனியர்
பிறப்பு(1921-11-11)நவம்பர் 11, 1921
பெதகல்லேபள்ளி, கிருஷ்ணா மாவட்டம், ஆந்திர மாநிலம், இந்தியா
இறப்புபெப்ரவரி 9, 2012(2012-02-09) (அகவை 90)
சென்னை, தமிழ் நாடு, இந்தியா
தொழில்(கள்)
  • பாடகர்
  • கவிஞர்
  • மெட்டமைப்பாளர்
  • இசைத்தட்டுத் தயாரிப்பாளர்
  • இசையமைப்பாளர்
  • ஏற்பாட்டாளர்
  • நிகழ்ச்சி நடத்துநர்
இசைத்துறையில்1946–1984
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)
வெளியீட்டு நிறுவனங்கள்
  • ஹெச். எம். வி.
  • கொலம்பியா
இணைந்த செயற்பாடுகள்

எஸ். தட்சிணாமூர்த்தி (சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி, இளையவர், நவம்பர் 11, 1921 - பெப்ரவரி 9, 2012) ஓர் இந்திய இசைக் கலைஞர் ஆவார். திரைப்பட இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக சங்கீத வித்துவான், வயலின் வாத்தியக் கலைஞர், இசைத்தட்டுத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்.[1] தமிழ், தெலுங்கு, இந்தி, சிங்களம் மொழித் திரைப்படங்களுடன் ஹாலிவூட் திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.[1][2]

இவரது தாத்தாவான சுசர்லா தட்சிணாமூர்த்தி சாஸ்திரி சீனியர் கருநாடக மும்மூர்த்திகளுள் ஒருவரான தியாகப்பிரம்மம் தியாகராஜர் சுவாமிகளின் நேரடி சிஷ்ய பரம்பரையில் வந்தவராவார்.[2]

இளமைக்காலம்[தொகு]

எஸ். தட்சிணாமூர்த்தி 1921 நவம்பர் 11-ஆம் நாள் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பெதகல்லேபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை சுசர்லா கிருஷ்ணபிரம்ம சாஸ்திரி ஒரு சங்கீத ஆசிரியராவார். தாயார் அன்னபூரணம்மா. ஆந்திரா பல்கலைக் கழகத்தில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1]

தொழில் வாழ்க்கை[தொகு]

1938 ஆம் ஆண்டில் ஹெச். எம். வி. இசைத்தட்டுக் கம்பெனியில் ஆர்மோனியம் வாசிக்கும் கலைஞராக பணியில் அமர்ந்தார். பின்னர் அனைத்திந்திய வானொலி நிலையத்தில் 'ஏ' தர இசை வித்துவானாக பணியாற்றினார். பின்னர் தென்னிந்திய பகுதிக்கான இயக்குநராகப் பதவியுயர்வு பெற்றார்.

பின்னர் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி தெலுங்கு, தமிழ், கன்னடம், சிங்களம் ஆகிய மொழிப் படங்களுக்கு இசையமைத்தார். ஹாலிவூட்டில் ஜங்கிள் மூன் மென் (1955) உட்பட பல திரைப்படங்களுக்கு ரீரிக்கார்டிங் எனப்படும் பின்னணி இசை வழங்கினார்.[1]

இறப்பு[தொகு]

நீரிழிவு நோய் காரணமாக 1972 ஆம் ஆண்டில் ஒரு கண்ணில் பார்வையை இழந்தார். பின் 1987 ஆம் ஆண்டில் மறு கண்ணிலும் பார்வையை இழந்தார். 2012 பெப்ரவரி 9-ஆம் நாள் மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னையிலிருந்த அவரது இல்லத்தில் காலமானார்.[3]

பணியாற்றிய தமிழ்த் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குநர் தயாரிப்பு
நிறுவனம்
1951 சர்வாதிகாரி டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
1952 வளையாபதி
1952 கல்யாணி ஆச்சார்யா
1953 வேலைக்காரி மகள் எல். வி. பிரசாத் ராஜ்யம் பிக்சர்ஸ்
1955 மங்கையர் திலகம் வைத்யா பிலிம்ஸ்
1956 அலிபாபாவும் நாற்பது திருடர்களும் டி. ஆர். சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ்
1957 யார் பையன் டி. ஆர். ரகுநாத் விஜயா பிலிம்ஸ்
1957 பாக்யவதி எல். வி. பிரசாத் ரவி புரொடக்சன்ஸ்
1958 அதிசய திருடன் பி. புல்லையா ஸாகினி ஆர்ட் புரொடக்சன்ஸ்
1959 உலகம் சிரிக்கிறது கே. இராமமூர்த்தி பிரபு பிலிம்ஸ்
1961 பங்காளிகள் ஜி. இராமகிருஷ்ணன் ஐரிஸ் மூவீஸ்

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Ilavelpu in Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006, pp: 129-31.
  2. 2.0 2.1 "Melodious Tribute" (in ஆங்கிலம்).
  3. "Susarla Dakshina Murthy Passed Away". Archived from the original on 2017-05-21. பார்க்கப்பட்ட நாள் 21-05-2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தட்சிணாமூர்த்தி&oldid=3751649" இலிருந்து மீள்விக்கப்பட்டது