ஏ. என். கிருஷ்ணராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ.ந.கிருஷ்ணராவ்.
பிறப்பு(1908-05-09)9 மே 1908
Kolar, Kolar district, Karnataka, India
இறப்பு8 சூலை 1971(1971-07-08) (அகவை 63)
Bangalore, Karnataka, India
புனைபெயர்A Na Kru
தொழில்Novelist, playwright, critic
தேசியம்இந்தியா
வகைFiction

ஏ. என். கிருஷ்ணராவ் என்றழைக்கப்படும் அ.ந. கிருஷ்ணராவ் (அரக்கலகுடு நரசிங்கராவ் கிருஷ்ணராவ் ; 9 மே 1908 – 8 ஜூசை 1971), அ.ந. க்ரு (Anakru) என அறியப்பட்ட இந்திய எழுத்தாளரும் இலக்கியவாதியுமாவார். குறிப்பாக கன்னட இலக்கியத்தின் சிறந்த முற்போக்கு எழுத்தாளரான இவர் அம்மொழியில் 'புதின இலக்கிய மன்னன்' எனப்பொருள்படும்'காதம்பரி சர்வபௌமா' எனச் சிறப்புப்பெயருடன் அறியப்படுபவராவார். மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டமும் கர்நாடக அரசின் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். இலக்கியத்தில் 'பிரகதிஷீலா' என்ற புதிய முறையை உருவாக்கியவர்[1].

வாழ்க்கை[தொகு]

ஏ. என். கிருஷ்ணராவ் இந்தியாவின் கர்நாடகத்தில் கோலார் நகரில் நரசிங்கராவ் அன்னப்பூரணம்மா இணையருக்கு 1908 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் பிறந்தார்.[2] to Narasinga Rao (father) and Annapoornamma (mother). இவருடைய குடும்பம் வழிவழியாக ஹசன் மாவட்டத்தில் அரக்கலகுடு என்ற நகரில் வழ்ந்துவந்தது. புத்தகம் படிப்பதிலும் எழுதுவதிலும் சிறுவயதிலேயே ஆர்வம் கொண்டிருந்த இவர் கன்னட இலக்கிய நாளிதழான 'கதா மஞ்சரி', 'விஷ்வ வாணி' ஆகிய நாளிதழ்களில் ஆசிரியராக தனது எழுத்துப்பணியைத் தொடங்கினார்[3]. கன்னட சாகித்ய பரிஷத் வெளியிட்ட கன்னட நூடி இதழிலும் ஆசிரியராகச் செயல்பட்டார்.

இவரது காலகட்டத்தில் கன்னட இலக்கியத்தில் கலை, அழகு குறித்து எழுதப்படும் 'நவோதயா' பாணியே நடைமுறையில் இருந்தது. துயரம் நிறைந்த மக்களின் வாழ்க்கையை, யதார்த்த நிலையை இந்த வகை எழுத்துகள் பிரதிபலிக்கவில்லை எனக்கருதிய அநக்ரு, இலக்கியத்தை சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகக் கருதி 'பிரகதிஷீலா' என்ற புதிய முறையை உருவாக்கினார். இவரது படைப்புகளால் கவரப்பட்ட பல எழுத்தாளர்கள் இவரது பாணியைப் பின்பற்றத் தொடங்கினர். மனிப்பாலில் நடந்த 42 ஆவது கன்னட சாகித்திய சம்மேளனத்தின் அதிபராக பரிந்துரைக்கப்பட்டார்[3]. கன்னட எழுத்துலகில் இவர் தனக்கென ஒரு தனி பாணியைப் பின்பற்றினார்.

கன்னடத்தில் மிகச்சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட மஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பவர் இவரைப்பற்றி நான் ஒரு தமிழ் கன்னடன், சர்.மிர்சா இஸ்மாயின் ஒரு முஸ்லிம் கன்னடர். ஆனால் அநக்ரு ஒரு சுத்த கன்னடர் எனக் குறிப்பிட்டார். இது போலப் பாராட்டப்பட்ட அநக்ரு கன்னடர்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்டார். கன்னடம் பேசும் மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைக்கப் பாடுபட்டார். பிரித்தானிய இந்தியாவில் கன்னடம் பேசும் மக்கள் பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தபோது இவர் கன்னட மொழியை பரப்புவதற்கும் , அதனை பிரபலப்படுத்துவதற்குமான ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். கன்னட மொழி பேசுவதற்கு தயங்கும் அல்லது வெறுக்கும் மக்கலை இவர் வெளிப்படையாகவேச் சாடிப்பேசினார். 1929 இல் கன்னட சாகித்திய சம்மேளனத்தின் தலைவராக இருந்த பொழுது பீகாரின் ஆளுநரான ஆர். டி. திவாகர் என்பவரது இந்திமொழித் தொடர்பான கொள்கையை விமரிசித்து கன்னட நூடி இதழில் ஒரு கட்டுரை எழுதினார். அதற்காக இவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனற கோரிக்கை எழுந்தபோது தனது இதழாசிரியர் பதவியைத் துறந்தார். அவர் தெற்கு பெங்களூருவில் இருந்த அன்னப்பூரனா என்றழைக்கப்படும் தனது சொந்த இல்லத்தில் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்தார். இவர் தனது 63 ஆம் அகவையில் 8, ஜூலை 1971 இல் காலமானார்.

இலக்கியப்பணி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஏ. எண். கிருஷ்ணராவ்". தி. இந்து. தி. இந்து (கோவை பதிப்பு): pp. 2. 2017, மே 9. 
  2. "Remembering ANaKru on his birth centenary". ThatsKannada.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "Remembering A na kru". டெக்கன் ஹெரால்டு. 4 November 2008. Archived from the original on 16 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 March 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._என்._கிருஷ்ணராவ்&oldid=3759133" இலிருந்து மீள்விக்கப்பட்டது