பயனர் பேச்சு:TNSE raguraman vlr/மணல்தொட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராபின்ஷர்மா
பிறப்புராபின்ஷர்மா
கனடா
தொழில்வழக்கறிஞர்;எழுத்தாளர்
தேசியம்வார்ப்புரு:கனடியன்
குடியுரிமைகனடா
கல்விசட்டம்
வகைஆளுமைஜஜடத்திறைன்
கருப்பொருள்தலைமைப் பண்பு
பிள்ளைகள்2

ராபின் ஷர்மா[தொகு]

ராபின் ஷர்மா ராபின் ஷர்மா கனேடிய எழுத்தாளர் மற்றும் தலைமைப் பேச்சாளர் ஆவார். அவரது ""பொக்கிஷத்தை இழந்த துறவி"" தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

வாழ்க்கை[தொகு]

முன்னர் ஒரு வழக்குரைஞர் வழக்கறிஞர், தனது வாழ்நாள் முழுவதும் அதிருப்தியுற்றதன் காரணமாக 25 வயதில் தனது சட்டப்பூர்வ வாழ்க்கையில் இருந்து விலகி, [3] சுய-வெளியிடப்பட்ட பெரு வாழ்வில், மேற்கு மற்றும் கிழக்கு ஆன்மீக நுட்பங்களை உள்ளடக்கிய மன அழுத்த நிர்வகிப்பிற்கு வழிகாட்டினார். [4] அவர் ஆரம்பத்தில் தனது ""பொக்கிஷத்தை இழந்த துறவி"" என்ற சுய-பதிப்பையும் வெளியிட்டார், பின்னர் அது ஹார்ப்பர் கோலினின் [2] பரந்த விநியோகத்திற்காக எடுத்தது மற்றும் கனடிய மற்றும் சர்வதேச சிறந்த விற்பனையாளர் ஆனது. [5]

20 வருடங்களுக்கும் மேலாக அவரது அனுபவத்தில், ஷிமா நைக், மைக்ரோசாப்ட், பிவிசி மற்றும் ஹெச்பி போன்ற அமைப்புகளுக்காக பேசினார். [6] அவருடைய விளக்கக்காட்சிகள் அவரது புத்தகமான ""தலைப்பில்லாத தலைவர்"" அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன, இதில் எந்தவொரு பாத்திரத்திலும் யாரும் ஒரு தலைவராக இருக்கக்கூடாது என்ற செய்தியை வழங்க முயற்சிக்கிறார். [7] ஷர்மாவின் பேச்சு பேச்சுவார்த்தைகள் ஹாரி வாக்கர் ஏஜென்சி மூலம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. [8]

இவர் 11 புத்தகங்களை வெளியிட்டார், மேலும் அவர் தலைமைத்துவ பயிற்சி நிறுவனமான ஷர்மா லீடர்ஷிப் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிறுவினார். [9] 2007 ஆம் ஆண்டில், தொழிலதிபர்களின் ஒரு சுயாதீனமான ஆய்வு, ஷர்மாவை உலகின் மிக செல்வாக்குமிக்க தலைமை குருக்கள் என்றே பெயரிட்டது. [10]

உமா மகேஸ்வரன்[தொகு]

""உமா மகேஸ்வரன்"" தஞ்சாவூர் மாவட்டம் கருந்திட்டைக்குடியில் 1883 உமாமகேஸ்வரன்பிறந்தார். வல்லம் கும்பகோணத்தில்ஆரம்பக் கல்வி பயின்றார்.தமிழ் ,ஆங்கிலத்தில்அதிகஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிநேரம் தவிர எஞ்சிய நேரத்தில் எதாவது படித்துக்கொண்டேஇருப்பார், தஞ்சைகல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றபிறகு , மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் . சிறந்த வழக்கறிஞராக புகழ்பெற்றார், ஏழைகளுக்கு இலவசமாக வாதாடினார். பள்ளிக்கூடம் கட்டுவது , சாலைகள், ஆற்றுப் பாலங்கள் அமைப்பது என பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டார். மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட கூட்டுறவு நிலவள வங்கி தொடங்க உதவினார் .கூட்டுறவு அச்சகம் ,கூட்டுறவு பால்உற்பத்தி விற்பனைக் கழகத்தை தொடங்கினார். 1911 ல் கரந்தை தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்துஅதன் முதல்தலைவராகப் பணியாற்றினார். 30 ஆண்டுகள்அதைகட்டிக்காத்தார்.அங்கு ஆயிரக்கணக்காண நூல் கள் கொண்ட தமிழ்ச் சங்க நூல் நிலையம் இவரது முயற்சியால் உருவானது. தமிழ்ப்பொழில் என்ற மாத இதழையும் தொடங்கினார்.அதில்ஆராய்ச்சிக் கட்டுரைகள் , மொழிபெயர்ப்புகள், கவிதைகள், தமிழ்க் கலைச் சொல்லாக்கம், வரலாற்றுப் படைப்புகள் ஆகியவை இடம்பெற்றன. பல அரிய தமிழ்நூல்களை வெளியிட்டார். இலவசநூலகம் அமைத்தார். மணோன்மணீயம் சுந்தரனாரின் நீராரும் கடலுடுத்த பாடலை தமிழ்த்தாய்வாழ்த்தாக அறிமுகம் செய்தது இவர்தான்.

மேற்கோள் தி இந்து தமிழ் நாள் 6.05.2017 பக்கம் 2

குருவராஜபேட்டை (மையம்) தொடக்கப் பள்ளி[தொகு]

""குருவராஜபேட்டை (மையம்) தொடக்கப் பள்ளி""

அமைவிடம்[தொகு]

குருவராஜபேட்டைஊராட்சிஒன்றியதொடக்கப்பள்ளி (மையம்) காவேரிப்பாக்கம் ஒன்றியம் வேலூர்மாவட்டத்திற்குட்பட்டஅரக்கோணம் தாலூக்காவிலுள்ளது. அரக்கோணம் சோளிங்கர் மாநிலநெடுஞ்சாலையில்அமைந்துள்ளசாலைஎன்றஊரிலிருந்துதிருத்தணிமார்க்த்தில் 3 கிலோமீட்டர்தொலைவில்உள்ளது.

பள்ளியின்வரலாறு[தொகு]

குருவராஜபேட்டைதொடக்கப் பள்ளி 1908 ஆம் ஆண்டு பிள்ளையார் கோவிலில்துவங்கப்பட்டுள்ளுது. அதற்குமுன்தாகவேதிண்ணைப் பள்ளியாகசெயல்பட்டு வந்துள்ளது.1934 ஆம் ஆண்டு மாவட்டதொடக்கக் கல்விஅலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934 அனுமதியின்படிகுருவராஜபேட்டைதொடகக்ப் பள்ளிசெயல்பட்டுவருகின்றது. 1961 ல் உயர் நிலைப் பள்ளியாகதரம் உயர்த்தப்பட்டுள்ளது.அவ்வமயம் ஒன்றாம் வகுப்புமுதல்எட்டாம் வகுப்புவரைஇருந்துள்ளன, அந்நேரத்தில்1000 மாணவர்களும் 23 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். உயர் நிலைப் பள்ளியாகதரம் உயத்தப்பட்டதால்போதியஇடவசதிஇன்மையினால்இப்பள்ளிகுருவராஜபேட்டைமையம் எனவும், குருவராஜபேட்டைகிழக்கு , மேற்கு, வடக்குஎன மூன்று பள்ளிகளாகபிரிக்கப்பட்டுதற்பொழுதுசெயல்பட்டுவருகின்றது.

பள்ளியின் சிறப்புகள்[தொகு]

1998 ல் கற்றலில்மாதிரிபள்ளியாகபொலிவு பெற்றுள்ளது.9 நபர்கள்கொண்டகல்வி குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு 2000 ஆம் ஆண்டு நடைபெற்றகல்விசீரமைப்புமாநாட்டிற்கு ரூ 26000 வழங்கி பள்ளிமுன்னேற்றத்தில்பங்கேற்றுள்ளது. இப்பள்ளிதுவங்கப்பட்டதால் 2007 வரை 90.1 சதவீதமக்கள்எழுத்தறிஹவுபெற்றுள்ளனர்.இப்பள்ளியில்பயின்றவர்களில் 2007நிலவரப்படி75 மருத்துவர்களும் , எண்ணற்றபிறதுறைவல்லுநர்களும் உருவாகியுள்ளனர். நூற்றாண்டுகண்டபிறகும் தற்போது 200 க்கும் மேற்பட்டமாணவர்கள்பயின்றுவருகின்றனர்.இப்பள்ளியில்பயின்றமாணவர் திரு .குப்புசாமிஅவர்கள்கல்வித் துறையில்இணைஇயக்குனராகபணியாற்றி வருகின்றார்.

முன்னோடிகள்[தொகு]

தமிழ்வளர்த்த சான்றோரானதமிழறிஞர் மங்கலங்கிழார் அப்பகுதிமக்களுக்குகல்விஅறிவுஅளிப்பதில்பெரும் பங்காற்றியுள்ளார்.பலதமிழ்அறிஞர்கள்அவரின்வழித்தோன்றர்களே. அவரின் நினைவாக அப்பகுதியில் அமைந்துள்ள மேனிலைப் பள்ளிக்கு மங்கலங்கிழார் மேனிலைப் பள்ளி என பெயரிடப்பட்டுள்ளது,

நூற்றாண்டுவிழா[தொகு]

பள்ளிதுவங்கப்பட்டு 100 ஆண்டுகள்கடந்ததையடுத்து 2008 ஆம் வருடம் நூற்றாண்டுவிழாசிறப்பாககொண்டாடப்பட்டுள்ளது. அவ்விழாவிற்குஇணைஇயக்குனர் திரு. குப்புசாமிஅவர்கள்தலைமைதாங்கியுள்ளார். மேற்கோள் வேலூர்மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலரின் அங்கீகார எண் 2634 நாள் 14.10.1934 நூற்றாண்டுவிழா அறிக்கை நாள் 08.12.2008