செய்து கற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்து கற்றல் (Deweyism) என்பது அமெரிக்கக் கல்வியாளரான ஜான் துவே என்பவரால் கண்டறியப்பட்ட கல்விக் கொள்கை ஆகும். அவர் கற்றல் என்பது பொருத்தமானதாகவும் பயன்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்றார். சிகாகோ பல்கலைக்கழக ஆய்வுப் பள்ளியில் துவே இதை நடைமுறைப்படுத்தினார். கல்வி முன்னேற்றத்தை ஏற்படுத்துவதில் அவருடைய கருத்துகள் மிக இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இதற்காக இவர் கல்வியும் மக்களாட்சியும், கல்வியும் சமூகமும் எனும் இருநூல்களை இயற்றினார். இவர் செய்து கற்றல் முறையை ஹன் முதல் நூலில் விரிவாக விளக்கியுள்ளார்.[1].

துவேவின் முறை[தொகு]

  1. துவே கற்றல் செயல் சார்ந்தது என்றும் செயல்முறைக் கல்வியே செயலறு நூற்கல்வியை விடச் சிறந்தது என்றும் உறுதியாகக் கூறுகிறார். எதற்கும் முன்பு செயல் முன்னாக அமையவேண்டும். நாம் மாணவரிடம் பள்ளி பற்றிய எதிர்மறை விளைவுகளையே விதைக்கிறோம். இயக்கமே எண்ணத்துக்கு வித்திடும். குறியீடுகள் துல்லியமற்ற அரைகுறையான இயற்காட்சிக்கான விளக்கங்களையே தருகின்றன. செயல்களே சிந்தனைக்கான சான்றுமிக்க தாக்கங்களை விளைவிக்கும்.
  2. தரும் செய்தி குறித்த ஆழமான காட்சிப்படுத்தலே அதை நினைவில் பசுமையாக பதியவைக்கும். ஒருவர் வாழ்க்கையை விளங்கச் செய்வது மனக் காட்சிக்கான கற்பனை ஆற்றலே ஆகும்.
  3. ஆசிரியர் மாணவரின் பூக்கும் அல்லது மலர்ந்துவரும் ஆர்வங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவற்றை விரிவாக்குதலே கற்றலின் பட்டறிவாக மிளிரும். ஆர்வமே திறன் அளிக்கும். அவற்றைத் தூண்டுதலே கற்றலில் நிறைவளிக்கும்.
  4. கற்றலில் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். அவையே கற்றலின் முதன்மையான கூறுபாடுகள் ஆகும்.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்து_கற்றல்&oldid=3734202" இலிருந்து மீள்விக்கப்பட்டது