அனைத்துலக அருங்காட்சியகங்கள் மன்றத்தின் கருத்துரு குறிப்பு மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்துலக அருங்காட்சியகங்கள் மன்றத்தின் கருத்துரு குறிப்பு மாதிரி (CIDOC Conceptual Reference Model - சீ.ஆர்.எம்) என்பது பண்பாட்டு மரபுரிமை மற்றும் அருங்காட்சியகவியலில் பயன்படுத்தப்படும் கருத்துருக்களுக்கான (Concepts) ஒரு மெய்ப்பொருளியம் ஆகும். இது பண்பாட்டு மரபுரிமை தொடர்பான தகவல்களை கட்டுப்பாடான வழியில் உருவாக்குவதற்கும், பகிர்வதற்கும் பயன்படும் ஒர் அனைத்துலகச் சீர்தரம் (ISO 21127:2014) ஆகும். காட்சிக்கூடங்கள், நூலகங்கள், ஆவணகங்கள், அருங்காட்சியகங்கள் (Galleries, libraries, archives, museums (GLAMs)) மற்றும் இதர பண்பாட்டு நிறுவனங்கள் இந்த குறிப்பு மாதிரியைப் பயன்படுத்த ஊக்கிவிக்கப்படுகின்றன.

சீர்.ஆர்.எம் குறிப்பு மாதிரி உருபொருள்-உறவு மாதிரி வகையைச் சார்ந்தது ஆகும். அது உருபொருள் வகைகளையும் (Entity Types) அவற்று இடையேயான உறவுகளையும் (Relationship or Properties) வரையறை செய்கிறது. அனைத்து சீர்.ஆர்.எம் உருபொருட்களும் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன: நிலையானவை (Persistent), காலச்சார்புடையவை (Temporal). பொருட்கள், கருத்துருக்கள், நபர்கள், அமைப்புகள் நிலையானவை. நிகழ்வுகளும் செயற்பாடுகளும் காலச்சார்புடையவை.

சீ.ஆர்.எம் நிகழ்வுகளை (Temporal Entities) அடிப்படையாகக் கொண்டது.[1] இந்த நிகழ்வுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கின்றன (occur at). குறிப்பிட்ட கால ஓட்டத்தில் நிகழ்கின்றன (within). நிகழ்வுகளை பெளதீகப் பொருட்களும் (Physical Entities) கருத்துருப் பொருட்களும் (Conceptual Objects) பாதிக்கின்றன (affect). நபர்கள் (Actors) நிகழ்வுகளில் பங்குபெறுகிறார்கள் (participate in). மேலும் எல்லாக் கருத்துருக்களும், உண்மையான உலகின் எல்லாப் பொருட்களும் "appellations" எனப்படும் பெயர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றன. வகைகளை (Types) ஐ பயன்படுத்தி தகவல்களை வகைப்படுத்த (classify) அல்லது ஒழுங்குபடுத்த (structure) முடியும்.

மென்பொருட்கள்[தொகு]

ஆர்ச்சசு (Arches) என்ற கட்டற்ற மென்பொருள் இந்தக் குறிப்பு மாதிரியை அடிப்படையாக் கொண்டு, இதற்கு ஆதரவு தரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The CIDOC Conceptual Reference Model (CIDOC - CRM) : PRIMER" (PDF). cidoc-crm.org. July 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மே 2017.

வெளி இணைப்புகள்[தொகு]