விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கம்/தொகுப்பு 13

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரையை எப்படி upload செய்வது

கட்டுரை எழுதுவதும் தமிழ் விக்கிப்பிடியாவில் பங்களிப்பதும் இலகுவானது. விக்கிப்பீடியா:முதல் கட்டுரை மற்றும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல் ஆகியன உங்களுக்கு உதவக்கூடும். சந்தேகங்களை கேளுங்கள். வரிசைப்படுத்தலுக்காக ஒத்தாசைப்பக்கத்தின் கீழே கடைசியில் உங்களின் கேள்விகளைக் கேளுங்கள்.--இரா. பாலா (பேச்சு) 06:45, 25 ஏப்ரல் 2017 (UTC)

63 Nayanmar[தொகு]

Dear Sir,

I would like to know the Drama peoples who is doing 63 Nayanmar Dramas. I think some peoples called Muthu samy trust from Chennai did 63 Nayanmar Dramas. It was really very interesting and we would like to do at our "Tirupur Shaiva Siddhanda Sabai".

If you have any contact who is doing as per Peruya puranam way, pls lt me know. Thanks.

Best Regards, Subra maniam


வணக்கம் என் பெயரை Aathira mullai என்று நான் பதிவு செய்தேன். ஆனால் விக்கி தானாக Aathira-tawiki என்று பெயரை மாற்றியுள்ளது. இது ஏன்? என் பெயரை எப்படி மாற்றுவது?

என் கண்டுபிடிப்பை விக்கிபீடியாவில் நான் எப்படி பதிவு செய்வது..?[தொகு]

அய்யா வணக்கம், கடந்த 10 நாட்களுக்கு முன் என் ஊர் ஆறகளூரில் வணிக குழு கல்வெட்டை ஒன்று கண்டுபிடித்தேன்..மேலும் அக்கல்வெட்டை பூமியிலிருந்து தோண்டி மேலும் ஆய்வு செய்தபோது 12 ஆம் நூற்றாண்டில் அந்த இடத்தில் ஒரு சமணகோயில் ஜிநாலயம் இருந்ததற்கான கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்தேன்..அந்த தகவல்கள் தினமணி,தினகரன் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்தது.அந்த செய்தியை என் வலைப்பக்கத்திலும் பதிவு செய்தேன்..அதே தகவல்களை விக்கி பீடியாவிலும் பதிவு செய்தேன்...தகவலுக்கு ஆதாரமாக..தினமணியில் செய்தி வந்ததின் இணைப்பு மற்றும் என் வலைப்பூவின் தொடுப்பையும் கொடுத்தேன்...ஆனால் காப்பி பேஸ்ட் மற்றும் காப்புரிமை என சொல்லி நீக்கப்பட்டுள்ளது..

 கேள்வி 1. விக்கிபீடியாவில் என் கண்டுபிடிப்பை எழுத இங்கு முழுமையாக புதிதாக செய்தியை தட்டச்சு செய்ய வேண்டுமா..?
          2. என் பிளாக்கில் நான் எழுதியதை இங்கு காப்பி செய்ய கூடாதா..?
          3 .ஆதாரத்துக்கு பத்திரிக்கை செய்தியின் லிங்,வலைப்பூவின் லிங்கை கொடுக்கலாமா..?
           4.புகைப்படங்களை இதில் எப்படி பதிவு செய்வது..?எத்தனை புகைப்படங்கள் பதிவு செய்யலாம்..?
          5. ஆறகளூர் பற்றி ஆய்வு செய்து நிறைய தகவல்கள் வைத்துள்ளேன்..எவ்வளவு தகவல்கள் பதிவு செய்யலாம் என்பதற்கு வரையரை உள்ளதா..?
           6. நான் விக்கிபீடியாவுக்கு புதியவன்..தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறேன்
         நன்றி
                             அன்புடன்
                 ஆறகளூர் பொன்.வெங்கடேசன்
வணக்கம் பொன்.வெங்கடேசன் ! உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பை வெகுவாக வரவேற்கிறோம். இருப்பினும் விக்கிப்பீடியா சில கொள்கைகளுக்கேற்ப செயல்படுகின்றது. இவற்றை நீங்கள் உள்வாங்கிப் பங்களித்தால் இத்தகைய ஏமாற்றங்கள் நிகழாது. இதற்கு உதவியாக தமிழ் மற்றும் ஆங்கில விக்கிப்பீடியாவில் பல உதவிப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன.
  1. முதலாவதாக இது அறிமுகமில்லாத மக்களால் தொகுக்கப்படும் (crowd sourced) கலைக்களஞ்சியம். இங்கு பதிப்பாசிரியர் என்று யாரும் கிடையாது. இதனால் இங்கு முதன்முதலில் கண்டறிந்த (Original Research) ஆய்வுகளை பதிய முடியாது. உங்களைப் போன்ற பிற அறிஞர்களால் மீளாய்வு செய்யப்பட்ட (peer reviewed) இரண்டாம்நிலைத் தரவுகளைக் கொண்டே இங்கு உள்ளடக்கம் உருவாக்கப்படுகின்றது. ஆய்வு குறித்த ஐயங்களை நீக்கவே இத்தகைய கொள்கை உள்ளது.
  2. பிளாகில் எழுதியதை காப்பி செய்யக்கூடாது... வலைப்பதிவுகள் உங்களுக்கு உரிமையானவை மட்டுமின்றி அவை வலையேற்றப்படும் வலைத்தளங்களுக்கும் உரிமை உள்ளது. விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் கிரியேட்டிவ் காமன்சு என்ற உரிமையுடன் வெளியிடப்படுகின்றன. இதற்கு முரணாக அவை அமைகின்றன.
  3. நீங்கள் எழுதும், இரண்டாம் நிலைதரவு கொண்ட கட்டுரைகளுக்கு பத்திரிகை/இணைய சான்றுகள் கொடுக்கலாம்.
  4. புகைப்படங்கள் எவ்வாறு தரவேற்றுவது, கட்டுரைகளில் பயன்படுத்துவது குறித்து விக்கிப்பீடியா கட்டுரைகள் உள்ளன.
விக்கிப்பீடியா:படிமம் பயிற்சி, விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும், விக்கிப்பீடியா:படிமங்கள் தரவேற்றம், விக்கிப்பீடியா:படிமங்களை அடையாளப்படுத்தலும் வகைப்படுத்தலும்
  1. நீங்கள் உங்கள் சொந்த ஆய்வுகளை (அவை நியாயமானவையாக இருந்தாலும்) எழுத முடியாது. சுட்டுதல்களுடன் கட்டுரைகள் எழுத எல்லைகள் எதுவுமில்லை.
  2. விக்கிப்பீடியாவில் ஏற்கெனவே உள்ள கட்டுரைகளை கவனியுங்கள்..ஆலமரத்தடியிலும் பிற உரையாடல் பக்கங்களிலும் நிகழும் உரையாடல்களை உள்வாங்குங்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் வரலாற்றைக் காட்டவும் என்ற tab உள்ளது. இதில் இரு பதிப்புகளுகிடையே உள்ள வேறுபாடுகளைக் கவனியுங்கள். இதன்மூலம் கட்டுரையிலுள்ள பிழைகள் எவ்வாறு திருத்தப்படுகின்றன என்ற விவரம் தெரிய வரும்.

விக்கிப்பீடியா பயனர்கள் அனைவரும் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கின்றோம். உங்கள் ஐயங்களை குறிப்பிட்டுக் கேட்டால் மறுமொழி இடுவர். இங்கு பங்களிக்கும் அனைவரும் தன்னார்வலர்களே. அவ்வப்போது நடைபெறும் பயிற்சிப் பட்டறைகளும் உங்களுக்கு உதவும்.−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

சொந்த ஆய்வுகளை எழுத முடியாது என்பதெல்லாம் இல்லை. அவை Published Source ஆக்கப்பட்ட பிறகு அதை மேற்கோளாக கொண்டு தாராளமாக எழுதலாம். ஆனால் ஒரு ஆய்வின் கருப்பொருள் பற்றி பல்வேறு ஆய்வாளர்களின் கருத்துகள் ஒரே கட்டுரையில் இடம்பெறுகிற மாதிரி உங்கள் எழுத்துக்கள் திருத்தப்படும் அவ்வளவே. உங்களை முகநூலில் நான் ஏற்கனவே அறிவேன் என்பதால் உங்களுக்கு உகந்த ஒரு கட்டுரையை காட்டுகிறேன். அது அகரமேறிய மெய் முறைமை.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:06, 31 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

உதவி தேவை[தொகு]

எனக்கு இந்த எச்சரிக்கை வருகின்றது.. எவ்வாறு இதனை எதிர்கொள்வது ?

Information: You are importing User:Lupin/popups.js into your common.js or <skin>.js!

This script is unmaintained. Please remove this inclusion and enable the Navigation popups Gadget in the preferences of your account instead.

−முன்நிற்கும் கருத்து Rsmn (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஆங்கில விக்கிப்பீடியாவில் இந்தக் கருவியைத் தற்போது இற்றைப்படுத்துவதில்லை. ஆயினும், சிக்கல்களின்றி வேலை செய்கின்றது. ஆதலால், எச்சரிக்கைச் செய்தியை நீக்கியுள்ளேன். எச்சரிக்கைச் செய்தி இடைஞ்சலாகவும் இருக்கிறது. மீடியாவிக்கிப் பதிப்பு மாற்றங்களுடன் ஏதேனும் சிக்கல்கள் நேர்ந்தால் மீடியாவிக்கி:Gadget-popups.js பக்கத்தை நீக்கி விடலாம். திருத்தங்களை மேற்கொண்ட பின் மீண்டும் செயற்படுத்தலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இந்தக் கருவியை நான் தொடர்ந்து கவனிக்கிறேன். குறிப்பு: Hovercardsஐச் செயற்படுத்தியிருந்தால் இக்கருவி வேலை செய்யாது. --மதனாகரன் (பேச்சு) 15:45, 3 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
நன்றி மதனாகரன் !--மணியன் (பேச்சு) 03:15, 4 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]
சார், துத்தநாகப் புரோட்டினேட்டு என்ற கட்டுரையின் பகுப்பைச் சற்று கவனிக்கவும். --கி.மூர்த்தி 14:08, 22 அக்டோபர் 2015 (UTC)

நான் ஒரு கட்டுரையை எழுதி உள்ளேன் அதில் சில குழப்பம் சரி செய்ய உதவுங்கள்[தொகு]

நான் வேலநாட்டி சோடர்கள் என்ற கட்டுரையை தொடங்கி உள்ளேன் அதில் இந்த கட்டுரை விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. என்று கூறியுள்ளார்கள் இந்த கட்டுரையை சரியான விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள் நன்றி

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 11:13, 23 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

நான் தங்க. ஜெய்சக்திவேல் என்ற கட்டுரையை எழுதியுள்ளேன். அவர் ஒரு பல்கலைக் கழகப் பேராசிரியர் என்பதற்கும், அவரது கல்வித் தகைமை மற்றும் அவரது சிறப்பு (Specialities) என்பதற்கும் பல்கலைக்கழகத்தின் சான்றிதழை மேற்கோள் கொடுத்துள்ளேன். அவர் இரு இணைய இதழ்களை வெளியிடுகிறார். அந்த வெளியீடுகளின் இணைப்பைக் கொடுத்துள்ளதோடு அவர் அவற்றை வெளியிடுகிறார் என்பதற்குச் சான்றாக தினகரன் (இந்தியா) நாளிதழின் வசந்தம் இதழில் வெளியான கட்டுரையை மேற்கோளாகக் கொடுத்திருக்கிறேன். இந்த இதழின் அச்சுப்பிரதி பேராசிரியரிடம் கைவசம் இருக்கிறது. அப்படியிருந்தும் பயனர் AntanO4task நம்பகமற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். நீண்ட காலமாக வெளிவரும் ஒரு நாளிதழில் வந்த தகவலை நம்பகமற்றது என்றால், வேறு எந்த மேற்கோளைக் கொடுப்பது? மேலும், அவர் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்குச் சான்று கேட்டுள்ளார். இப்படியான தகவலுக்குச் சான்றுக்கு எங்கே போவது. பல்கலைக் கழக பேராசிரியர் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்த பின்னும் இவ்வாறு சின்னச் சின்ன விடயங்களுக்குச் சான்று கேட்பது வேண்டுமென்றே செய்யப்படுவதாக நான் உணர்கிறேன். மேலும் இந்தப் பயனர் வேறு ஒரு நாட்டில் இருந்து கொண்டு இங்கு வெளியாகும் நாளிதழை நம்பகமற்றது என்று குறிப்பிட்டது சரியாகப் படவில்லை. இந்தக் கட்டுரை இவ்வளவு தூரம் கேள்விக்குள்ளாக்கப்படுவது அதில் கூறப்படும் நபரின் கௌரவத்தைப் பாதிப்பதாகவே கருதுகிறேன். ஆகவே, கொடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களை ஆராய்ந்து கட்டுரையை அங்கீகரிக்கவும். அல்லது, கட்டுரையை நீக்கவும். நான் தனிப்பட ஒரு தகவலையும் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்கு வயது 72. இந்தப் பயனர் இவ்வாறு இக்கட்டுரைக்குக் குறிப்பிடுவது எனக்கு இரத்த அழுத்தத்தைக் கொடுக்கிறது. நான் முடிந்தவரை மேற்கோள்கள் காட்டி விட்டேன். இந்தக் கட்டுரை இப்படியே இருந்தால் எனக்கு அது மேலும் இரத்த அழுத்தத்தையே ஏற்படுத்தும். அல்லது நான் தமிழ் விக்கியிலிருந்து விலக வேண்டும். ஆகவே இக்கட்டுரை பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவும். - Uksharma3 04:01, 15 அக்டோபர் 2016 (UTC)

தரவு அமைத்து தாருங்கள்[தொகு]

தோழமைக்கு அடியேனின் வணக்கம்விக்கிபீடியாவின் ஆசியா மாதம் போட்டியில், அடியேன் எழுதிய, "ஹெரத்" அல்லது "ஹேரத் நகரம்" என்ற தலைப்பின் கட்டுரைக்கு விக்கித்தரவு அமைத்து தரும்படி தாழ்மையுடன் கோறுகிறேன்.அன்புமுனுசாமி (பேச்சு) 10:15, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உதவுங்கள்[தொகு]

நான் அதிகம் படிக்காதவன் புதுபயணன், நான் மணல்தொட்டியில் எழுதிவருகிறேன்,எனக்கு படிமத்தோடுகூடிய தகவல் பெட்டகம் (வார்ப்புரு) எப்படி அமைப்பதென்று தெரியவில்லை தயவுகூர்ந்து இந்த புதியவனுக்கு ஒத்தாசை ஈன்றுதுவுங்கள்.நன்றி(பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி

மொழிப்பெயர்ப்பு[தொகு]

ஆங்கிலத்தில் tiruvannamalai region என்றக் கட்டுரை உள்ளது. இதில் உள்ள region என்ற சொல்லை மண்டலம் என்று எழுதலாமா ? பகுதி எனலாமா??

ரோஹித் (பேச்சு)

உதவிக்கு கீழே உள்ள தமிழ் விக்சனரி உரலியை பாருங்கள்.

எந்த வார்த்தைக்கு மொழிபெயர்ப்புத் தேவைபடுகிறதோ அதைச் சொடுக்கினால் நேரடியாக தமிழ் விக்சனரிப் பக்கத்திற்கு செல்வீர்கள்.--நந்தகுமார் (பேச்சு) 09:21, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நன்றி

ரோஹித் (பேச்சு) 12:44, 3 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க உதவுங்கள் .....[தொகு]

தமிழ் பக்கங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தேவையான வழிகாட்டுதல்களை தரவும். இதற்கு முன் நான் மொழி பெயர்த்த சில பக்கங்கள் பிற விக்கி பங்களிப்பாளர்களால் நீக்கப்பட்டதாய் செய்தி அறிந்தேன். இது போன்ற நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க நான் எவ்வாறு எனது பங்களிப்பை வழங்க வேண்டும் என வழிகாட்டவும் ....

நன்றி ......

நஞ்சராயநகர் மக்கள் வாழ்க்கை[தொகு]

இந்த கட்டுரை எவ்வறு பதிவு செய்வது

கட்டுரை அளவு[தொகு]

கட்டுரை எவ்வளவு வாக்கியங்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், கட்டுரைக்கான பிற்சோ்க்கை எழுவது எப்படி? என்பதையும் கூறுக.

படிமங்கள்[தொகு]

படிமங்களை சோ்ப்பது பற்றி கூறவும்.

விக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்ப மதிப்பீடு[தொகு]

விக்கிமேனியா உதவிக்கொடை விண்ணப்பத்திற்கான மொழிபெயர்ப்புகள் மதிப்பிடப்படாததால் அவை ஏற்றப்படாமலிருக்கின்றன. எனக்கு முதல் முறை மதிப்பிடும் உரிமை இல்லாததால் என்னால் அவற்றை மதிப்பிட இயலவில்லை. உரியவர் அதனை மதிப்பிட்டு உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். --கலைவாணன் (பேச்சு) 05:44, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

AntanO கயானாப் பூங்கா கட்டுரையில் படம் பதிவேற்ற் உதவவும் --கி.மூர்த்தி 14:10, 1 சனவரி 2016 (UTC)

தலைப்பை சரி செய்வது எப்படி[தொகு]

தலைப்பை திருத்தம் செய்வது எப்படி. உதவி தேவை. பொன்னம்பலம் முக்கப்பிள்ளை என்பது பொன்னம்பலம் மூக்கப்பிள்ளை என்று இருக்க வேண்டும்.

"மேலும்" என்ற drop down menu வில் நகர்த்தவும் ஐச் சொடுக்குங்கள்.--Kanags \உரையாடுக 07:57, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]


வருவாய்கிராமம்[தொகு]

வருவாய்கிராமங்களின் பட்டியலை தொகுக்க முயற்சித்தபோது அதே பெயரில் கிராமங்கள் அல்லது பேரூராட்சி அல்லது நகராட்சி பற்றி அதே ஊரை பற்றி கட்டுரை உள்ளது. பழைய கட்டுரையில் வருவாய்கிராமம் பற்றி தகவலை சேர்ப்பதா அல்லது (வருவாய்கிராமம்) என புதிய கட்டுரை எழுதுவதா? எது சிறந்தது? விளக்கவும்.--நிர்மல் (பேச்சு) 12:43, 28 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

வருவாய் கிராமங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு கட்டுரை எழுதப் போகிறீர்களா? அல்லது வருவாய் கிராமங்களின் பட்டியல் மட்டும் தரப் போகிறீர்களா? பட்டியல் மட்டும் என்றால் உள்ளிணைப்பு இல்லாமல் பெயரை மட்டும் தாருங்கள். தனித்தனிக் கட்டுரை எழுதுவதாக இருந்தால், ஒரு தனிக் கட்டுரை எழுதுவதற்கு ஏற்ப தகவல்கள் உள்ளனவா? இல்லாவிடில், கிராமம் பற்றிய கட்டுரையில் வருவாய் கிராமத்தின் தகவல்களையும் சேர்க்கலாம்.--Kanags \உரையாடுக 04:05, 29 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]


தமிழ் விக்கியில் கோப்பை பதிவேற்றல் குறித்து[தொகு]

நான் திரைப்பட சுவரொட்டியை பதிவேற்ற விரும்புகிறேன். இதை பொதுவகத்தில் ஏற்றமுடியாது. தமிழ் விக்கிப்பீடியாவில் தான் ஏற்ற முடியும். எல்லா வழிகாட்டிகளும் பொதுவகத்திற்கே செல்லுகின்றன. தமிழ் விக்கியில் மட்டும் பதிவேற்ற முடியுமா? முடியுமென்றால் அதற்கான சுட்டியை தரவும். (முன்பு ஏற்றியுள்ளேன் இப்போ எல்லாமும் மாறிவிட்டது) --குறும்பன் (பேச்சு) 21:48, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 07:14, 4 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மொழிபெயர்ப்பு உதவி[தொகு]

Countersteering - என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பாக, பின்வருவனவற்றுள் ஒன்றை தேர்வு செய்யவோ, அல்லது இதனினும் பொருத்தமான சொல்லை ஆக்கவோ உதவவும்.

  • எதிர்திசைசெலுத்தல்
  • எதிர்திசைமாற்றம்
  • எதிர்திசைதிருப்பம்
  • எதிர்திருப்புதல்

--கலைவாணன் (பேச்சு) 11:11, 9 சனவரி 2016 (UTC)[பதிலளி]



உதவி தேவை[தொகு]

கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு , பக்கத்தை உருவாக்கவும் என்று புதிய கட்டுரையை உருவாக்க முற்பட்டால் .......

{{New page}} என்று வருகிறது. கவனிக்கவும். எந்த தலைப்பை உள்ளிட்டாலும் இதே நிலை.--கி.மூர்த்தி 02:20, 13 சனவரி 2016 (UTC)
எனக்கு அவ்வாறு வரவில்லை. தெளிவாக குறிப்பிட முடியுமா? --AntanO 02:59, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

User:AntanO அறுகுளோரோவசிட்டோன் என்று கட்டுரைத் தலைப்பை உள்ளிட்டு , புதிய கட்டுரையை உருவாக்க முயற்சித்தேன்.:{{New page}} என்று வருகிறது. காரணம் புரியவில்லை.--கி.மூர்த்தி 05:12, 13 சனவரி 2016 (UTC)

சாளரத்தின் மேல் வலப்பக்க மூலையில் உள்ள "தேடு" என்னும் தேடல் பெட்டியினுள் "அறுகுளோரோவசிட்டோன்" என்பதை உள்ளிட்டு, "அறுகுளோரோவசிட்டோன்" பக்கத்தை இந்த விக்கியில் உருவாக்கவும்! என்பதிலுள்ள சிவப்பு இணைப்பை சொடுகி உருவாக்குங்கள். நீங்கள் முயன்றது புதுப்பயனர்களுக்கான முறை. அல்லது நீங்கள் முன்னைய முறையினை மேற்கொண்டு, அங்குள்ள உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு கட்டுரையிணை உருவாக்கலாம். --AntanO 05:49, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]
User:AntanO இதுவரை நான் இம்முறையில் தானே கட்டுரைகளை உருவாக்கி வருகிறேன்.இப்பொழுது மட்டும் ஏன் இப்படி வருகிறது? அந்த :{{New page}} வர்ப்புரு எதற்காக இடப்படுகிறது? தெளிவுபடுத்தவும். --கி.மூர்த்தி 05:57, 13 சனவரி 2016 (UTC)
விக்கிப்பீடியா:மின்னல் கருவிக்காக வார்ப்புருக்கள் இங்கு இறக்குமதி செய்து இற்றையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் மூலம் கட்டுரைகளை கவனித்தல், பராமரித்தல், மேற்பார்வை செய்தல் போன்ற பணிகள் எளிதாக இருக்கும். புதிதாக கட்டுரை உருவாக்க விரும்பும் ஒருவருக்கு உதவி செய்ய அம்முறை இலகுவானது. --AntanO 06:09, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]


AntanO படிவத்தை நிறைவு செய்து அனுப்பிவிட்டேன். படிவத்தில் அஞ்சல் முகவரி எங்கும் கேட்கப்படவில்லையே? அஞ்சல் அட்டைகள் எவ்வாறு அனுப்பப்படும்? மின்னஞ்சலிலா?

போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டனவா? --கி.மூர்த்தி 09:56, 13 சனவரி 2016 (UTC)

அஞ்சல் முகவரி கேட்கப்பட்டிருந்ததே. மீண்டும் ஒரு தடவை பார்த்துவிட்டு பதிலளிக்கிறேன். --AntanO 10:02, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

ஐயா வணக்கம் எனது kaylivi குடியரசுத் தினமாக அறிவித்து செயல்படுத்தியது 1948 இல் (ஆ) இல்லை 1950 (ஆ)?[தொகு]

1930ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை நினைவுகூர சனவரி 26 ஆம் நாள் காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

28 ஆம் நாள் ஆகஸ்து மாதம் 1947 ஆண்டு ஒரு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வரைவுக் குழு உருவாக்கி அதன் தலைவராக பி ஆர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அந்தக் குழு ஒரு வரைவு அரசியலமைப்பினை 1947 நவம்பர் 4 ஆம் நாள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

2 ஆண்டுகள், 11 மாதங்கள், 166 நாட்கள் பொது திறந்த அமர்வுகளில், சந்தித்து அரசியலமைப்பின் ஏற்புக்கு முன்னதாக பல விவாதங்கள் நடைபெற்றன. கடைசியாக '== ''''சனவரி 24 ஆம் நாள் 1950 ஆம் ஆண்டு 308 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இரண்டு கையால் எழுதப்பட்ட நிரந்தர அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது. 'அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து 1948 இல் (ஆ) இல்லை 1950 (ஆ) சுதந்திரம் பெற்ற பின் 26 சனவரி நாளை குடியரசுத் தினமாகக்'தடித்த எழுத்துக்கள்' கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது.'''' ==--−முன்நிற்கும் கருத்து அன்பரசு (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

குடியரசு நாள் (இந்தியா) கட்டுரையில் திருத்தம் வேண்டும்.--Kanags \உரையாடுக 06:31, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]
@Kanags: திருத்தியுள்ளேன். இப்போது தெளிவுள்ளதா ? மேற்கோள்கள் எந்தச் செய்திகளுக்குத் தேவைப்படுகின்றன ?--மணியன் (பேச்சு) 13:28, 26 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தமிழாக்க உதவி[தொகு]

Tórshavnஐ தமிழாக்க உதவுங்கள். டோய்சயுன் - சரியாக வருமா? -- சத்தியராஜ் (பேச்சு) 12:53, 4 பெப்ரவரி 2016 (UTC)

டோர்சான் அல்லது டோர்ஷான் --AntanO 13:25, 4 பெப்ரவரி 2016 (UTC)


மேலும் ஒரு உதவி. Ulster: தமிழில் அல்சுடர் சரியாகவருமா? --சத்தியராஜ் (பேச்சு) 13:40, 10 பெப்ரவரி 2016 (UTC)

அல்ஸ்டர் என்ற உச்சரிப்பு சரியாக வரும். கிரந்தம் நீக்கி எழுதுவதாயின் யாராவது உதவி செய்ய வேண்டும். --AntanO 19:44, 10 பெப்ரவரி 2016 (UTC)

நீக்கப்படுவதற்காக எழுதவா?[தொகு]

புதிதாக, சான்றடைவு இல்லாமல், ஒரு கட்டுரை எழுதப்பட்ட உடனே பின்வரும் வார்ப்புரு அக்கட்டுரையின் நெற்றியில் ஒட்டப்படுகிறது: {{unreferenced}} இந்த வார்ப்புரு கண்ணதாசன் நூல்கள் இரண்டினை அறிமுகம் செய்து நான் தொடங்கிய கட்டுரையிலும் இடப்பட்டு இருக்கிறது. குறிப்பிடத்தக்க நூலைப் பற்றி யாரேனும் கட்டுரைகள் எழுதியிருந்து அதனை பயனர் கண்டிருந்தால்தானே அதிலிருந்து மேற்கோள் தர இயலும். யாரும் கட்டுரை எழுதவில்லை என்றாலோ,எழுதப்பட்டிருந்து அதனை பயனர் காணவில்லை என்றாலோ கட்டுரைத் தொடங்கும் பயனரால் மேற்கோள் தர இயலாது அல்லவா? மேற்கோள் இல்லை என்றால் குறிப்பிடத்தக்க நூலைப் பற்றிய கட்டுரை நீக்கப்பட்டுவிடுமென்றால், பயனருக்கு நூல் அறிமுகக் கட்டுரையை நாம் ஏன் எழுதவேண்டும் எனத் தோன்றாதா? (எனக்கு அப்படித் தோன்றித்தான் எனது பங்களிப்பை இக்கட்டுரையோடு நிறுத்தி வைத்திருக்கிறேன்) எனவே, மேற்கோள் வேண்டும் வார்ப்புருவானது பயனர்களிடமிருந்து மேற்கோள் கோருவதாக இருக்க வேண்டுமே அன்றி, கட்டுரை நீக்கப்படும் என்பதாக இருக்கக்கூடாது அல்லவா? --அரிஅரவேலன் (பேச்சு) 16:18, 8 பெப்ரவரி 2016 (UTC)

புதிய, பழைய கட்டுரை என்ற பகுபாடின்றி ஒரு கட்டுரையைப் பற்றிய கேள்வியை எழுப்பலாம். மேலும் குறித்த கட்டுரைக்கு இன்று வரை உசாத்துணை சேர்க்கபப்டவில்லை. கட்டுரைகள் யாவும் உசாத்துணையைக் கொண்டிருக்க வேண்டும். இதில் மாற்றம் இல்லை. கட்டுரையை நீக்க வேண்டுமா இல்லையா என்பது விக்கி சமூகம் முடிவெடுக்கும். ஒரு பிழையான நடைமுறையை உருவாக்க முயல்வதால் விக்கிப்பீடியா என்பதே நம்பகத்த தன்மை அற்றது எனும் நிலைக்கு இட்டுச் செல்லும். மேலே குறிப்பிட்ட ஏரணம் பல நடைமுறைச் சிக்கல்களையும் உருவாக்கும் என்பதையும் கவனிக்க வேண்டும். --AntanO 17:38, 8 பெப்ரவரி 2016 (UTC)
நீக்கப்படுவதற்காகவே கட்டுரை எழுத நான் விரும்பவில்லை.. விலகுகிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 09:43, 10 பெப்ரவரி 2016 (UTC)
அரிஅரவேலன், சான்றில்லை என்று முழு கட்டுரையே நீக்கப்படுவது அரிது. இது ஒரு பராமரிப்பு வார்ப்புருவே. இத்தகைய வார்ப்புருக்கள் உள்ள கட்டுரைகளை மற்றவர்கள் இனங்கண்டு சான்று சேர்க்க இத்தகைய வார்ப்புருக்கள் உதவும். எனவே, தனிப்பட எடுத்துக்கொள்ளாமல், தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 10:54, 10 பெப்ரவரி 2016 (UTC)
வணக்கம் அரிஅரவேலன்! பராமரிப்பு வார்ப்புருவில் உள்ள வாசகங்களை வைத்து உங்களின் பங்களிப்பினை நிறுத்தாமல் தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:16, 10 பெப்ரவரி 2016 (UTC)
இரவி, நந்தகுமார் ஆகியோர் சரியாகக் கூறியுள்ளனர். கட்டுரைகளின் தரத்தை உயர்த்துவதே பராமரிப்பு வார்ப்புருக்களின் நோக்கம். அனைவரும் இணைந்து பணியாற்றுவோமாக. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:08, 10 பெப்ரவரி 2016 (UTC)
இந்தப் பராமரிப்பு வார்ப்புரு புதிதல்லவே. மேலும், இவ் அண்மைய பங்களிப்பில் நான் உருவாக்கிய 4 கட்டுரைகளுக்கு குறித்த பராமரிப்பு வார்ப்புரு இடப்பட்டது (இரண்டு கட்டுரைகளுக்கு உசாத்துணை இருந்தும் இடப்பட்டது). நானும் பதிலுக்கு உசாத்துணைச் சேர்த்துள்ளேன். அப்பயனர் பராமரிப்பில் ஈடுபட்டதற்காகப் பாராட்டுகிறேன். --AntanO 19:40, 10 பெப்ரவரி 2016 (UTC)

உதவி[தொகு]

வாழைப்பழம் (Banana), வாழை (Musa acuminata) அப்படியென்றால் Musa × paradisiaca என்ற அறிவியல் வார்த்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.--Muthuppandy pandian (பேச்சு) 06:07, 2 சனவரி 2016 (UTC)[பதிலளி]

  1. வாழை (முசா × பாரடைசியாக) என்று கட்டுரைக்கு தலைப்பு இடுங்கள். பின்பு கட்டுரையைத் தொடங்கும் போது, வழமையாக நாம் தொடங்குவது போல, பின்வருமாறு கட்டுரையைத் தொடங்கவும். முசா × பாரடைசியாக (தாவரவியல் பெயர்: Musa × paradisiaca) என்பது வாழையின் கலப்பினங்களில் ஒன்று. இது Musa acuminata என்ற நாட்டு இனச் சிற்றனத்தையும், Musa paradisiaca என்ற காட்டு இன வாழையினத்தையும் கொண்டு கலப்பின முறையில் உருவாக்கப்பட்ட வாழை மரமாகும். இந்த காட்டு இனத்தின் தாவரவியல் பெயர், Musa balbisiana, என தாவரவியல் சமூகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய வகைப்பாட்டியல் முறையை, விக்கியினங்களில், இங்கு உள்ளது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ளது பழைய தாவரவியல் வகைப்பாட்டு முறை.இதுபோன்ற தாவரவியல் கட்டுரையை தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள். en:APG III system என்பதை மொழிபெயரப்பு செய்யுங்கள். பல இலட்சகணக்கான தாவரங்களுக்கு அதுவே தற்போதுள்ள நடைமுறை தாவரவியல் வகைப்பாடு ஆகும்.கூகுளின் ஒலிபெயர்ப்பை விட, இத்தளத்தின் ஒலிப்பெயர்ப்பு 90%சரியாக இருக்கும். மீதமுள்ள10% ஒலிபெயர்ப்பை நாம்தான் சரிசெய்யணும். வணக்கம். --உழவன் (உரை) 01:41, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]
  2. முசா × பாரடைசியாக்கா என்று தலைப்பிடுவது சரியாக இருக்கும். --கி.மூர்த்தி 01:52, 3 சனவரி 2016 (UTC)
    நானும் உங்களைப் போன்றே, முதலில் எண்ணினேன். ஆனால், வாழையில் பல சிற்றினங்கள் உள்ளன. நாம் தேடுசாளரத்தில் தேடும் போது, வாழை என்று அடித்தால், அதன் கீழே இதுவும் தோன்ற வாய்ப்புண்டு. தாவரவியல் பெயரில் தேடுபவர் குறைவே, அப்படியே தேடினாலும், மற்ற சிற்றனங்களை, தேடு சாளரத்திலேயே காண இயலாது போகிவிடும் என்பதால் மேற்கண்ட பெயரை பரிந்துரைத்தேன். ஒரு கட்டுரயைத் தேடி வருபவர், அவர் தேடும் போது, நமது கட்டுரை வளத்தையும் காண வைக்க வேண்டியது, நமது கடமையாக எண்ணுகிறேன். --உழவன் (உரை) 02:00, 3 சனவரி 2016 (UTC)[பதிலளி]

இணைப்பு பற்றி[தொகு]

(Abelmoschus) என்றும் (Okra) என்றும் ஆங்கிலத்தில் இரண்டு இடத்தில் உள்ளது. ஆனால் இரண்டிற்கும் வெண்டி என்ற ஒரே தமிழ் வார்த்தைதான் உள்ளது. இதில் ஆங்கிலம் இரண்டையும் இணைக்க பரிந்துரைக்கலாமே.--Muthuppandy pandian (பேச்சு) 10:49, 15 பெப்ரவரி 2016 (UTC)
முன்னது பொதுவான இனம் குறித்தது; பின்னது இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் குறிப்பான இனத்தைக் குறித்தது.--மணியன் (பேச்சு) 13:03, 15 பெப்ரவரி 2016 (UTC)
(Abelmoschus) என்பது பொதுவானது என்றால் இந்த காட்டுரைக்கு தமிழ் பக்கம் உருவாக்கலாமா? வேண்டாமா? அப்படி உருவாக்கினால் என்ன தமிழ் பெயர் வைக்கலாம்?--Muthuppandy pandian (பேச்சு) 04:58, 16 பெப்ரவரி 2016 (UTC)
(Abies grandis), (Abies spectabilis), (Fir) இந்த மூன்று பக்கங்களும் ஒரே இனத்தைத்தான் குறிக்கிறது. இதில் எந்த பக்கத்திற்க்கு தமிழ் மொழியர்ப்பைக் கொடுக்கலாம்?--Muthuppandy pandian (பேச்சு) 05:49, 16 பெப்ரவரி 2016 (UTC)

தாவரவியல் அல்லது விலங்கியற் பெயர்கள் ஆங்கிலத்தில் இருசொற் பெயரீட்டு முறையில் எழுதப்படுகின்றன. ஆங்கிலத்திலும் சிலவற்றுக்குப் பொதுவான பெயர்கள் இருக்கின்றன. அத்தகைய பெயர்களுக்காக உள்ள கட்டுரைகள் குறிப்பான தாவரத்துக்கு அல்லது விலங்குக்கு மட்டுமானவையன்று. ஆங்கிலத்தில் தாவர,விலங்கினங்களைக் குறிக்க இருசொற் பெயரீட்டு முறையும், அவ்வவற்றின் துணையினங்களைக் குறிக்க முச்சொற்பெயரீட்டு முறையும் பயன்படுத்தப்படக் காரணம் அவற்றுக்கிடையிலான வேறுபாட்டைச் சரியாகக் குறித்துக் காட்டுதவற்கே. தமிழில் அத்தகையவற்றை வேறு விதமாகவே குறிக்க வேண்டியுள்ளது. அவற்றுக்குப் பொதுவான பெயரையும் குறிப்பான ஒரு பெயரையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய முறையையே நான் சந்திரவாசிப் பறவையினங்களுக்குக் குறித்திருக்கிறேன். அதைத் தவிர வேறு தரப்படுத்தப்பட்ட முறையெதுவும் கிடையாத அதே வேளை, அவ்வாறு தரப்படுத்துவதற்கு சற்று ஆழமாக ஆராய்ந்தே பெயரிட வேண்டும். நாங்கள் ஆங்கிலப் பெயர்களை அப்படியே ஒலிபெயர்த்துப் பயன்படுத்த முடியாது.--பாஹிம் (பேச்சு) 07:28, 16 பெப்ரவரி 2016 (UTC)

ஈங்கை - இண்டு - காட்டுச்சிகை[தொகு]

ஈங்கை - இண்டு - காட்டுச்சிகை என்பவற்றுக்கு இடையிலான குழப்பம் உள்ளது. காண்க: பேச்சு:ஈங்கை --AntanO 04:55, 17 மார்ச் 2016 (UTC)

திருத்தம்[தொகு]

என் பெயர் துரை.தனபாலன். இப்போதுதான் எனக்கான பக்கத்தை நான் உருவாக்கி அதனை சேமித்தேன். அதில் ஒரு சிறு திருத்தம் செய்ய மறுபடியும் அப்பக்கத்தைத் திறந்தால், பக்கம் வருகிறது ஆனால் நான் எழுதியவை அதில் இல்லை. பின் எப்படி நான் அதில் திருத்துவது? உதவி தேவை.

@துரை.தனபாலன்:, உங்கள் பக்கம் இங்கு உள்ளது. அப்பக்கத்தில் மேலே தொகு என்பதைத் திறந்து நீங்கள் திருத்தம் செய்து சேமிக்கலாம்.--Kanags \உரையாடுக 06:58, 1 ஏப்ரல் 2016 (UTC)

ஒரு புதுக்கட்டுரை எழுதுவது தொடா்பாக[தொகு]

நான் எப்படி ஒரு புதுக்கட்டுரை எழுவது மற்றும் முந்தைய கட்டுரையை தொகுப்பது தயவு செய்து எனக்கு உதவுங்கள்

தமிழ் விக்கிப்பீடியாவுக்கு எனது வணக்கம். ஒருசில சந்தேகங்கள் எனக்கு தமிழ் விக்கிப்பீடியா பற்றி உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளில் புகைப்படங்களை பதிவேற்றி அதில் கட்டுரைகளில் இடம்பெறச்செய்வது எப்படி? தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கான விதிமுறைகள் யாவை?--−முன்நிற்கும் கருத்து Vignesh Pathi (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இந்த பகுதி உங்களுக்கு உதவலாம்: விக்கிப்பீடியா:முதல் கட்டுரை, விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்.--−முன்நிற்கும் கருத்து R.mahendran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

jEdit என்பதற்கு தமிழில் கட்டுரைத்தலைப்பு எப்படி வைப்பது?[தொகு]

jEdit என்ற கட்டுரையை உருவாக்க எண்ணுகிறேன். ஜேஎடிட் என கிரந்த எழுத்துடன் தலைப்பிட விரும்பவில்லை. எப்படி தலைப்பிடுவது?--உழவன் (உரை) 02:31, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]

வேறு வழியில்லை.--Kanags \உரையாடுக 02:35, 20 சூன் 2016 (UTC)[பதிலளி]

வட்டார வழக்குச் சொற்களை தொகுக்கும் முயற்சிக்கான ஆலோசனை வேண்டியும், விருப்பமுடையோரை அறியவும்[தொகு]

அனைவருக்கும் வணக்கம், எனது முதல் முயற்சியாக / பங்களிப்பாக வட்டார வழக்குச் சொற்களை தொகுக்கும் பணியை செய்யலாம் என்றிருக்கிறேன். இது குறித்து விக்கிப்பீடியாவில் தேடிய பின்பு உங்களின் ஆலோசனையும், இணைந்து செயலாற்ற விருப்பமுடையவர்களையும் அறிந்து கொள்ள உங்களை தொடர்பு கொள்கிறேன். இது எனது முதல் முயற்சி என்பதனால் பங்களிப்பாளர்களின் ஆலோசனை மிகவும் உதவிகரமாக இருக்கும். இதற்கான கூகுள் படிவம் (Google Forms) ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளேன்.

இம்முயற்சியின் முக்கிய நோக்கம் 1.வழக்கத்திலிருந்த / வழக்கத்திலிருக்கும் வட்டாரச் சொற்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளுதல் 2.அவற்றை ஒன்று சேர்த்து அகராதி போல் வரும் புதிய தலைமுறைக்காக பாதுகாத்தல் (விக்கிபீடியாவில்) 3.அச்சொற்களை பலரும் அறிந்து பயன்படுத்த வழிவகை செய்தல்

மேலும் தொடர்புக்கு karuveli.mahendran@gmail.com

அன்புடன் ரா.மகேந்திரன் --R.mahendran (பேச்சு) 11:28, 26 சூன் 2016 (UTC)[பதிலளி]

அறிவிப்பு வெளியிட உதவி[தொகு]

சூலை 1 முதல் சூலை 7 வரை பஞ்சாப் தொடர்பான தொடர்தொகுப்பு நிகழ்வு நடைபெறுகிறது என்ற அறிவிப்பை அனைத்துப்பக்கங்களின் மேற்பகுதியில் தோன்றுமாறு நிர்வாகிகள் யாராவது செய்யமுடியுமா? --சிவகோசரன் (பேச்சு) 16:50, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]

ஆயிற்று. இப்போது இதனை மாதம் முழுவதற்குமாக அறிவித்திருக்கிறோம். --இரவி (பேச்சு) 22:53, 1 சூலை 2016 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி இரவி! --சிவகோசரன் (பேச்சு) 16:43, 2 சூலை 2016 (UTC)[பதிலளி]

எனது பயனர் பெயர் மாற்றம் என்னவாயிற்று[தொகு]

எனது பயனர் பெயர் மாற்றம் கோரிக்கை என்னவாயிற்று?

உங்களின் கொள்கை, மற்றும் கட்டுப்பாடுகள் தெரியாமல் பழைய பயனர் பெயரை மாற்ற[தொகு]

உங்களின் கொள்கை, மற்றும் கோட்பாடுகள் தெரியாமல் பழைய பயனர் பெயரை மாற்ற, புதிய பயனர் கணக்கு ஒன்று துவங்கி விட்டேன். இப்போது நான் என்ன செய்ய. நான் இப்போது அந்த புதிய பயனர் கணக்கை பயன்படுத்துவதில்லை... அதை அழிக்க இயலுமா..? தற்போது நான் என்னுடைய பழைய பயனர் கணக்கினை மட்டுமே பயன்படுத்துகிறேன். பழைய பயனர் பெயரை மாற்ற கோரிக்கை வைத்திருந்தேன். அதை பற்றிய எந்த தகவலும் இல்லை?

கட்டுரையின் தலைப்பை மாற்ற என்ன செய்யவேண்டும்...[தொகு]

இந்த தலைப்பு முன் அவருடைய முன்னெழுத்துக்களை சேர்த்தால் தான் சரியாக இருக்கு. என் எனில் இவர்குறித்த நூல்கள் எல்லாம் இவர் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்றே அறியப்படுகிறார். [1].

இவ்வாறான கேள்வியை அந்தக் கட்டுரையின் உரையாடல் பக்கத்தில் கேளுங்கள். மேலும், உங்கள் உரையாடலின் கீழ் உங்கள் கையொப்பத்தையும் தவறாமல் சேருங்கள். உங்கள் கையொப்பத்தை திகதி-நேர முத்திரையுடன் பதிப்பதற்கு ~ என்பதை நான்கு தடவை அடுத்தடுத்து தட்டச்சி செய்து சேமியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 07:52, 9 சூலை 2016 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியில் படிமப் பதிவேற்றம் குறித்தான ஐயங்கள்.[தொகு]

வணக்கம், சிலகாலம் தமிழ் விக்கியில் பணியாற்றியிருந்தாலும் படிம பதிவேற்றம் குறித்தான சில ஐயங்கள் உள்ளன. பிற விக்கிப்பீடியர்கள் இந்த ஐயங்களை களைய உதவுங்கள். நன்றி. 1. தமிழ்விக்கியில் கற்றற்ற உரிமத்தில் பகிரப்படும் படிமங்களை கண்டிப்பாக காமென்சுக்கு நகர்த்த வேண்டுமா?. அல்லது காமென்சில்தான் பதிவேற்றம் செய்ய வேண்டுமா? 2. தமிழ் விக்கியில் பதிவேற்றும் போதே இங்கு மட்டும் பயன்படுத்த, \\ If you do not want your file to be copied to Commons and deleted locally, consider adding {{Keep local}}.\\ என கூறப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் மட்டுமே இருக்கும்படியான படிமங்களுக்கு {{Keep local}} என்ற வார்ப்புருவினை இட்டால் போதுமானதா? 3. கட்டுரைகளில் மிகக் குறைந்த அளவுகளிலேயே படிமங்கள் காட்சிபடுத்தப்படுகின்றன. அதனால் மூலப் படிமங்களை அப்படியே தரவேற்றாமல் அளவு குறைக்கப்பட்டு பகிர்தல் அனுமதிக்கப்பட்டுள்ளதா 4.சில படிமங்களில் குறிப்பிட்ட ஒரு பொருளை மட்டும் கட்டுரையில் காட்டுவதற்கு, மூலப்படிமங்களை வெட்டி (crop) செய்து பதிவேற்றலாமா? --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 20:05, 13 சூலை 2016 (UTC)[பதிலளி]

தமிழ்ப் பெயர்கள்[தொகு]

என்பவற்றுக்கு சரியான தமிழ்ப்பதங்கள் தேவை. --AntanO 01:33, 3 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

திருவொற்றியூர் - சந்தேகம்[தொகு]

திருவொற்றியூர்[தொகு]

திருவொற்றியூர் சென்னை மாவட்ட பகுதியா? அல்லது திருவள்ளூர் மாவட்டமா? இது சென்னை நகரில் அமைந்துள்ளது. Aadhitharajan (பேச்சு) 01:03, 5 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

திருவள்ளூர் மாவட்டம். https://www.google.co.in/maps/place/Tiruvallur,+Tamil+Nadu/@13.193931,80.1410805,12.08z/data=!4m5!3m4!1s0x3a529010cc790c75:0x8dd46f4b2c67bff8!8m2!3d13.2544335!4d80.0087746

விண்டோசு 10[தொகு]

விண்டோசு 10 பற்றிய கட்டுரை அதன் தற்போதைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. சிறிது கவனிக்கவும். Aadhitharajan (பேச்சு) 04:06, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

குறித்த பக்கத்தின் பேச்சுப்பக்கத்தில் விபரமாகத் தெரிவிக்கவும். --AntanO 04:23, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@Aadhitharajan: உங்களால் முடிந்தால் கட்டுரையை இற்றைப்படுத்துங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 06:13, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
AntanO அந்த பக்கத்தின் பேச்சுபக்கம் ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளது. மீண்டும் உருவாக்கலாமா என தெரியவில்லை. எனவே தான் இங்கு குறிப்பிட்டேன் Aadhitharajan (பேச்சு) 16:51, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
Kanags அந்த கட்டுரையை தொகுக்க எனக்கு அனுமதியில்லை என அறிவிப்பு வருகிறது. புதியதாக பேச்சுப்பக்கத்தில் அதன் தற்போதைய மாறுதல்களை குரிப்பிடவா? Aadhitharajan (பேச்சு) 16:55, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@Aadhitharajan: இப்போது நீங்கள் கட்டுரையைத் திருத்தக்கூடியதாக இருக்கும். தகுந்த மேற்கோள்கள் தாருங்கள்.--Kanags \உரையாடுக 22:09, 6 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@Kanags: நன்றி Aadhitharajan (பேச்சு) 01:44, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
நான் அப்பக்கத்தை பகுதி பகுதியாக இற்றைப்படுத்துகிறேன். என்னுடைய இற்றைகளில் குறை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும். நன்றி Aadhitharajan (பேச்சு) 02:49, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

UY Scuti விண்மீன் பற்றி கட்டுரை[தொகு]

வணக்கம், UY Scuti தற்போது அறியப்படும் விண்மீன்களுள் மிகப்பெரியது ஆகும். அதை பற்றிய கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் இல்லை. எனவே அதை உருவாக்க உள்ளேன். தமிழில் எவ்வாறு தலைப்பு வைப்பது என்று கருத்துதெரிவித்து உதவுங்கள். Aadhitharajan (பேச்சு) 09:52, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

en:UY Scuti. யூ.ஒய் கேடயம் (விண்மீன்) எனத் தலைப்பிடலாம். இச்சொல்லில் UY என்பது ஆங்கில எழுத்துக்களைக் குறிக்கிறது. பார்க்க: en:Variable star designation. எனவே UY ஐ நாம் மாற்றாமல் யூ.ஒய் என எழுதலாம். Scuti என்பது இலத்தீனில் Scutum (கேடயம்) என்பதைக் குறிக்கிறது.--Kanags \உரையாடுக 10:55, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
பதில் அளித்தமைக்கு நன்றி Kanags விரைவில் இத்தலைப்பில் எழுதுகிறேன். Aadhitharajan (பேச்சு) 12:33, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

கையொப்பம் இல்லாத பேச்சுக்கள்[தொகு]

ஆங்கில விக்கிபீடியாவில் கையொப்பமிடாமல் பயனர்கள் பதியும் பேச்சுகளுக்கு Sinebot மூலம் தானாக அந்த பதிவை யார் இணைத்தார் என பதியப்படுகிறது. இதனை தமிழ் விக்கிபீடியாவிலும் செயல்படுத்த முடியுமா? Aadhitharajan (பேச்சு) 09:59, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நமது நீச்சல்காரனால் முடியாதது எதுவுமில்லை. @Neechalkaran:--Kanags \உரையாடுக 10:57, 7 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
முயற்சி செய்கிறேன் −முன்நிற்கும் கருத்து Neechalkaran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

முதற்பக்க கட்டுரை[தொகு]

பயனர்:Aadhitharajan/மணல்தொட்டி இது தகுதி உடயதாய் இருப்பின் இற்றை படுத்தி முதற்பக்க கட்டுரைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள் Aadhitharajan (பேச்சு) 02:27, 14 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

@Aadhitharajan: இப்பக்கத்தில் தங்கள் பரிந்துரைகளை பதிவு செய்யலாம். முதற்பக்கத்தை இற்றை செய்வோர் அதனைக் கவனித்து உரைத்திருத்த வேண்டுமாயின் உரைத்திருத்தி, இற்றை செய்வார்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 16:22, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]
@Maathavan: நன்றி. அப்படியே செய்கிறேன். Aadhitharajan (பேச்சு) 16:30, 15 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விளையாட்டுக்கு தமிழ் பெயர் உதவி[தொகு]

Team Pursuit,  Team Sprint ( இரண்டும் மிதிவண்டி விளையாட்டு) air rifle, air pistol,  Rifle Prone, Rifle 3 Positions, (துப்பாக்கி சுடுதல்) Clean & Jerk, Snatch, Total, (பளு தூக்குதல்) pentathlon போன்றவற்றுக்கு பெயர் என்ன? ஒலிம்பிக் சாதனைகள் கட்டுரை எழுத முயன்ற போது இவ்வயங்கள் தோன்றின.--குறும்பன் (பேச்சு) 12:09, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

விளக்கம் கூரவும்[தொகு]

ஐயா வணக்கம் எனது பெயர் செல்வகனி நான் புதிதாக கட்டுரை பதிவிட்டிருக்கிறேன் அதன் பெயர் சாப்டூர் அழகாபுரி,இதில் அந்த அப்பகுதியின் பூகோல வரைபடமும் மற்றும் அந்த பகுதியின் புகைப்படத்தையும் நான் சேர்க்க வேண்டும் அதை எப்படி செய்வது கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்

நன்றி வணக்கம் செல்வகனி.த

== சொந்த படங்களை copy right பிரச்னை இல்லாமல் பதிவேற்றம் செய்வது எப்படி? ==எ வணக்கம் நான்:Durai.velumani நான் பதிவேற்றிய படங்களில் எவை எவை copy right பிரச்சனையில் உள்ளது. எந்த படம் சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது... copy ரைட் பிரச்னை உள்ள படங்களை சரி செய்வது எப்படி?

நீங்களே எடுத்த படங்களை பொதுவகத்தில் தரவேற்றுங்கள். பதிப்புரிமை உள்ள அல்லது வேறொருவருடைய படங்களை நீங்கள் தரவேற்ற முடியாது.--Kanags \உரையாடுக 06:31, 27 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

வார்ப்புருவில் உள்ள ஒரு வார்த்தையை தெரிய வைப்பது எப்படி?[தொகு]

வணக்கம் நான்:mereraj வார்ப்புரு:Infobox pigeon breed இல் உள்ள notes என்ற வார்த்தை பக்கங்களில் தெரிவதில்லை. இதனை தெரிய வைப்பது எப்படி? உதாரணம்: காலர் (புறா)

Y ஆயிற்று--Kanags \உரையாடுக 04:43, 29 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நான் ஒரு எழுத்தாளர் எனது தகவல்களை இங்கே எவ்வாறு பதிய வேண்டும்[தொகு]

வணக்கம் அய்யா, ஒரு தனிநபர் குறித்த குறிப்புகளை எவ்வாறு பதிவது, அவ்வாறு ஒருவர் தன்னைப் பற்றி இங்கே பதிந்து கொள்வது தவறா?

உங்களைப் பற்றி உங்கள் பயனர் பக்கத்தில் எழுதலாம்.--Kanags \உரையாடுக 10:23, 31 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

இரு கட்டுரைகளை இணைக்கவும்[தொகு]

இந்திய சட்டமன்றத் தேர்தல்கள், 2016 கட்டுரை உள்ளது தெரியாமல் 2016 ஆறு மாநில இடைத்தேர்தல் என்ற கட்டுரையை உருவாக்கி விட்டேன் இது தேர்தல் முடிவுகள் உடையது. எனக்கு கட்டுரைகளை இணைக்கத் தெரியாது என்பதால் உதவி வேண்டும்--குறும்பன் (பேச்சு) 19:03, 22 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

மன்னிக்க அது வேறு இது வேறு, இது இடைத்தேர்தல் பற்றியது.--குறும்பன் (பேச்சு) 19:06, 22 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

பகுப்பிலுள்ள மொத்தக் கட்டுரைகளின் எண்ணிக்கை அறிய[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் ஒரு பகுப்பின் கீழ் உள்ள அனைத்து கட்டுரைகளின் எண்ணிக்கையையும் அறிந்து கொள்ள இயலுமா. அந்தப் பகுப்பிற்குள் இருக்கும் துணைபகுப்புக் கட்டுரைகளையும் சேர்த்து அறிய வேண்டும். சைவ சமயம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள மொத்தக் கட்டுரையை எண்ணிக்கையும் அறிந்து கொள்ள உதவுங்கள். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:25, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

மலையாள விக்கிப்பயனர் சுனைது மீடியாவிக்கி மென்னணுக்கவசதியைப்பயன்பபடுத்தி இதற்காகவொரு நிரலெழுதிக்காட்டியிருக்கிறார். அதைத்தமிழ் விக்கி எடுத்துக்காட்டுடன் நான் மாற்றியுள்ள நிரலை இங்கே பெறலாம். இதை இயக்குவதற்ககு பைத்தானும், விக்கிப்பீடியா மென்பபொருள் பொட்டலமும், பைவிக்கிபாட்டு பொட்டலமும் உங்கள் கணினியில் நிறுவியிருத்தல் வேண்டும். -- சுந்தர் \பேச்சு 14:37, 27 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]
நன்றிங்க. நான் விண்டோசு இயங்குதளத்தினைப் பயன்படுத்துகிறேன். இவற்றிலேயே இந்த பைத்தான் போன்றவற்றை நிறுவிக்கொள்ளலாமா? அவற்றை எங்கு தரவிரக்கம் செய்வது என்ற சுட்டிகள் இருந்தால் கொடுங்கள். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:27, 28 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

Signature[தொகு]

@Anbumunusamy, AntanO, Arulghsr, Dineshkumar Ponnusamy, Jagadeeswarann99, Info-farmer, and Jayarathina: @Kanags, Kurumban, Maathavan, Nan, Natkeeran, Neechalkaran, and Raj.sathiya: @Ravidreams, Selvasivagurunathan m, Semmal50, Sengai Podhuvan, Shriheeran, Sundar, and Surya Prakash.S.A.: @Thamizhpparithi Maari, Uksharma3, உலோ.செந்தமிழ்க்கோதை, எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி, கி.மூர்த்தி, தமிழ்க்குரிசில், and தென்காசி சுப்பிரமணியன்: @பா.ஜம்புலிங்கம்:
Namaste Contributors,
Please leave your signature here. Regards !JuniorX2 ChatHello! 06:35, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

Yes. but i want to know what is the purpose & need, kindly convey--உழவன் (உரை) 06
53, 10 திசம்பர் 2016 (UTC)
it's 4 collecting signature of worldwide users for future need and support. —JuniorX2 ChatHello!
I think that this is not a proper way. So, kindly stop this kind of posting and never post in another page --உழவன் (உரை) 15:43, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
இப்பயனரைத் தடை செய்திருக்கத் தேவையில்லை. --AntanO 16:19, 10 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
ஒரு நாள் தடை. தவறில்லை. அவர் நினைவில் நிற்க இது அவசியம்.--உழவன் (உரை) 12:22, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
நல்லது. இக்குறிப்பு பின்பு எனக்கு உதவலாம். --AntanO 12:32, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

பதிவை நீக்கியது எந்த விதியின் படி[தொகு]

திரு ஸ்ரீதரன் மற்றும் அன்டனோ , நான் பதிவிட்ட பதிப்பு எந்த ஒரு மதத்தையோ, சமூக நீதிக்கு விரோதமாகவோ அல்லது உங்களைப் போன்று தங்கள் சார்ந்திருக்கும் மதத்தை தூக்கிப் பிடிக்க கட்டுரையை பதிவிடவில்லை. நான் கண்ட மனிதரைப் பற்றியும் அவரின் வாழ்க்கைப் பயணத்தையும் தான் பதிவிட என்னுடைய முதல் முயற்சியாக எழுதத் தொடங்கினேன் அன்றி வேறெதுவும் காரணிகள் இல்லை. இதைத் தாங்கள் எந்த விதத்தில் சரி என்று நீக்கினீர்கள் என்று தெளிவு படுத்துங்கள். தனி மனிதனின் வாழ்க்கை குறிப்பைப் பதிவிட எந்த பதிப்புக்கும். தடை இல்லையென்று நான் நினைக்கிறன். ஒரு பதிவோ ஒரு கட்டுரையோ முழுமை அடைவதற்கு முன்பே நீங்கள் ஏன் அவசரப் படுகிறீர்கள். உங்களைப் பற்றிய அறிமுகத்தை உங்கள் பக்கத்தில் நீங்கள் எழுதுவதை நான் எழுதுவது தான் சாலச் சிறந்தது. உங்களைப் பற்றி நீங்களே அறிமுகம் செய்து கொள்ளும் போது நான் ஏன் எனக்குத் தெரிந்த நபரைப் பற்றி பதிவிடக்கூடாது.−முன்நிற்கும் கருத்து Lingaraju ponnusamy (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. --உழவன் (உரை) 03:18, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

காரணம் உங்கள் பேச்சுப் பக்கத்தில் உள்ளது. //உங்களைப் போன்று தங்கள் சார்ந்திருக்கும் மதத்தை தூக்கிப் பிடிக்க கட்டுரையை பதிவிடவில்லை. உங்களைப் பற்றிய அறிமுகத்தை உங்கள் பக்கத்தில் நீங்கள் எழுதுவதை நான் எழுதுவது தான் சாலச் சிறந்தது. உங்களைப் பற்றி நீங்களே அறிமுகம் செய்து கொள்ளும் போது // விக்கி விதிக்கு உட்பட்டே அவை இடம்பெற்றுள்ளன. மேலும், இவ்வித விடயத்தை திசை திருப்பும், தனிநபர்நார் விமர்சனங்கள் விக்கிக்கு ஏற்புடையதல்ல. --AntanO 02:31, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Lingaraju ponnusamy:! நானும் விக்கியில் 7வருடங்களுக்கு மேல் பங்களிப்பவருள் ஒருவன். இருப்பினும், ஒவ்வொரு நாளும் விக்கியின் நடைமுறைகளைக் கற்கிறேன். இந்த ஒத்தாசைப்பக்கத்தில் நீங்கள் எண்ணமிட்டதால், நான் இது குறித்த எனது எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். யாதெனில்,
  • நீக்குதலில் அவசரம் காட்டப்படுகிறது என்று கூறுகிறீர்கள். ஓரளவு உண்மையே. உங்களின் முதல் பதிவு நீக்கப்பட்டதாகத் தெரிகிறது. இனி இதுபோல நிகழாமல் இருக்க , பதிவிடுவதற்கு முன், சில நடைமுறைகளைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
  • எந்த உரையாடல்/பேச்சுபக்கத்தில் எழுதினாலும், எழுதிய பிறகு ஒப்பம் இட வேண்டும்.மற்ற இடங்களில் தேவையில்லை.
  • நீங்கள் உங்கள் கணக்கினுள் நுழைந்த பிறகு, முதல் வரியின் முதலில் உங்கள் பெயர், அடுத்து பேச்சு, 3வதாக மணல்தொட்டி இருக்கும்.
  • அதனுள் நீங்கள் உங்கள் முதல் கட்டுரையை எழுதுங்கள். யாரும் நீக்கமாட்டார்கள்;நீக்கக்கூடாது. ஆனால், அப்பகுதி, ஒரு கட்டுரையை வளர்த்து எடுப்பதற்கு மட்டுமே. பிறகு, பிறரிடம் கருத்து கேட்கலாம்.
  • அப்பொழுதே உங்களுக்கு இங்குள்ள நடைமுறையினை உணரமுடியும். மனம் தளராதீர்கள். ஏதேனும் உதவி தேவையெனில், வினவுங்கள். உதவிட பலர் வருவர். தேவைப்படும் உதவியை அந்த இடத்திலேயே கேளுங்கள். அப்பொழுதே என்ன நடக்கிறது என்பது மற்றவருக்குப் புரியும். உழவன் (உரை) 03:46, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]
@Info-farmer: //நீக்குதலில் அவசரம் காட்டப்படுகிறது என்று கூறுகிறீர்கள். ஓரளவு உண்மையே.// என்ற கருத்தின் மூலம் நீங்கள் (நிருவாகி ஒருவர்) எதைக்குறிப்பிட முயல்கிறீர்கள் எனத் தெரியவில்லை. விக்கிப்பீடியா:துரித நீக்கல் தகுதிகள் (தெளிவாக இங்கு: en:Wikipedia:Criteria for speedy deletion) என்பதின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட நபரின் கட்டுரையும் நீக்கப்பட்டது. காண்க: பயனரின் நீக்கப்பட்ட பங்களிப்புக்கள். அதற்கு {{db-g11}} வார்ப்புருவும் இடப்பட்டிருந்தது. காண்க: நீக்கப்பட்ட பக்கம். உங்கள் கருத்து இங்கு ஒருசிலர் விதிமுறைகளைப் பின்பற்றாமல் செயற்படுகிறார்கள் என்ற கருத்தினையும், குறித்த பயனர் செய்தது சரி என்ற கருத்தினையும் தரவல்லது. --AntanO 02:01, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தமிழ்ப்பெயர்[தொகு]

torus என்ற கேத்திர கணித உருவுக்கான தமிழ்ப் பெயர் என்ன?--பிரஷாந் (பேச்சு) 14:39, 16 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உருள்வளையம்??--Kanags \உரையாடுக 02:12, 17 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

நாட்டுடைமை நூல்கள் பட்டியலில் உள்ள ஆங்கில நூல்கள்[தொகு]

தமிழக நாட்டுடைமை நூற்பட்டியலில் பல ஆங்கில நூல்கள் உள்ளன. அத்தகைய ஆங்கில நூல்களுக்கு எப்படி, இந்த மாதிரி நூல் போல அறிமுகவுரை வழங்குவது? தலைப்பு ஆங்கிலம் என்பதால் வினவுகிறேன்.--உழவன் (உரை) 12:26, 18 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

நீக்கல் காரணம்[தொகு]

வணக்கம், ஒரு நாவலுக்கான விமர்சனத்தை இங்கே பதியும் பொழுது அது நீக்கப்படுகிறது எதனால் என்று அறிந்து கொள்ளலாமா?.. நன்றி

தங்கள் உரையாடல் பக்கத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது. குறிப்பாக விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அல்ல.--Kanags \உரையாடுக 20:38, 22 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

15 வது தமிழ்நாடு சட்டமன்றம்[தொகு]

வணக்கம்,தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016, முடிந்து ஏழு மாதங்கள் ஆகியும் அனைத்து ஊர்கள் தொடர்பான கட்டுரைகளிளும் 14வது சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரே உள்ளது.எனவே 15வது சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை இங்கு தொகுக்கிறேன்.அதற்கு தாங்களும் உதவவும்.அதற்கான தகவலை இங்கு பார்க்கவும். ஏற்கனவே 15 வது சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சிகளை இங்கு தொகுத்துள்ளேன். நன்றி. --ஜுபைர் அக்மல் 11:52, 26 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

திரு .Antono அவர்கட்கு சர்வோதயம் என்பதும் வட இலங்கை சர்வோதயம் என்பதும் செயற்பாட்டால் வேறுபட்ட நிறுவனங்கள். வட இலங்கை சர்வோதயம் என்பது புங்குடுதீவு மக்களின் , பெண் தமைத்துவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு .மற்றும் இங்கு யுத்த சூழ்நிலைகள் குறிப்பிடப்படவில்லை .வட இலங்கை சர்வோதயம் செய்த சேவைகளே குறிப்பிடப்பட்டுள்ளது . வேறு பிழைகள் இருந்தால் தயவு செய்து மற்றம் ஏற்படுத்த உதவவும்.--−முன்நிற்கும் கருத்து Sivapatham Thanusha (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

வட இலங்கை சர்வோதயம்[தொகு]

திரு .Antono அவர்கட்கு சர்வோதயம் என்பதும் வட இலங்கை சர்வோதயம் என்பதும் செயற்பாட்டால் வேறுபட்ட நிறுவனங்கள். வட இலங்கை சர்வோதயம் என்பது புங்குடுதீவு மக்களின் , பெண் தமைத்துவ குடும்பங்களுக்கு உதவி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பு .மற்றும் இங்கு யுத்த சூழ்நிலைகள் குறிப்பிடப்படவில்லை .வட இலங்கை சர்வோதயம் செய்த சேவைகளே குறிப்பிடப்பட்டுள்ளது . வேறு பிழைகள் இருந்தால் தயவு செய்து மற்றம் ஏற்படுத்த உதவவும்.

பயனர்:Sivapatham Thanusha, இக்கட்டுரையை நீங்கள் உங்கள் கல்லூரி project இற்காக எழுதுகிறீர்களா? அவ்வாறென்றே நம்புகிறேன். நீங்கள் எழுதிய கட்டுரை பயனர்:Sivapatham Thanusha/வட இலங்கை சர்வோதயம் என்ற தலைப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இப்பக்கத்திலேயே நீங்கள் தொடரலாம்.--Kanags \உரையாடுக 02:54, 2 சனவரி 2017 (UTC)[பதிலளி]

உதவி[தொகு]

Fantastic Beasts and Where to Find Them இப்பையரை தமிழில் எவ்வாறு எழுதுவது? உதவுக-- மாதவன்  ( பேச்சு ) 17:57, 7 சனவரி 2017 (UTC)[பதிலளி]

மாதாவன், இதனை ஃபன்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வெயார் டு ஃபைன் தெம் என எழுதலாம். மொழிபெயர்ப்பு உச்சரிப்பில் மட்டுமே கருத்தில் அல்ல. --ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:35, 8 சனவரி 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன், மகிழ்ச்சி. ஆனால் எனக்கு கிரந்தம் நீக்கி எவ்வாறு எழுதுவது என்பதுதான் தேவை. எனக்கு இப்பெயரை தமிழில் கிரந்தம் தவிர்த்து எழுதுவதில் சிக்கலாக உள்ளது.-- மாதவன்  ( பேச்சு ) 15:45, 8 சனவரி 2017 (UTC)[பதிலளி]
ஆய்தம் வராமல் தொடங்குவது, தமிழ் மரபு என்றே எண்ணுகிறேன். 'பென்டாசுடிக் பீட்சு அன்டு வேயர் டு ஃபைன் தெம்' , ஒலிக்கும் போது, வரும் சொல்லின் ஓசை, தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும். பிற மொழியில், நமது தமிழ் பண்பை கொண்டு வருவது, தவறான சிந்தனை. அதனால் தான் சிக்கல் வருகிறது. எண்ணுக.--உழவன் (உரை) 16:48, 8 சனவரி 2017 (UTC)[பதிலளி]
பென்டாசுடிக் பீட்சு அன்டு வேயர் டு ஃபைன்ட் தெம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:04, 9 சனவரி 2017 (UTC)[பதிலளி]
ஸ்ரீஹீரன், உழவன், Beasts என்பதற்கு பீட்சு என்று எழுதுவதில் தான் சிக்கல். Beats என்றால் தமிழில் பீட்சு என்று எழுதலாம் ஆனால் இது 'Beasts'. பன்டாசுடிக் என்று எழுதலாமா? -- மாதவன்  ( பேச்சு ) 11:09, 10 சனவரி 2017 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 11:23, 10 சனவரி 2017 (UTC)[பதிலளி]

ஆம். சரியாக படிக்காதது என் தவறே. பீசிட்சு எனலாமென்றே எண்ணுகிறேன். 'பன்டாசுடிக்' என்பதில் விருப்பமே. கிரந்தம் ஒழிந்தால் சரி. கிரந்தம் மேல் வெறுப்பில்லை. ஆனால், அது இருந்தால் தான் தமிழ் என்பதில் தான் எனக்கு உடன்பாடு இல்லை.சில நண்பர்களிடம் வட இந்திய நண்பர்களிடம் பேசும் போது, அவர்கள் சொல்லுவார்கள் எங்கள் மொழியில் 4 க உள்ளது என்பார்கள். அந்த மொழி வசதி உங்களுக்கு இல்லையே? என்பர். காகம் என்பதை, நாங்கள் பேசும் போது, காஹம் என்று கூறினாலும், எழுதும்போது காகம் என்றே எழுதுவோம். செந்தமிழும் நா பழக்கம் என்பேன்.!--உழவன் (உரை) 12:32, 10 சனவரி 2017 (UTC)[பதிலளி]
உழவன், :"ட்" என்னும் எழுத்தின் பின் "சு" என்ற எழுத்து வருமா? இது இலக்கணப் பிழையோ என்று எனக்கு ஒரு சந்தேகம். -- மாதவன்  ( பேச்சு ) 16:45, 11 சனவரி 2017 (UTC)[பதிலளி]
அடுத்த சொல் தான் வரக்கூடாது என்று எண்ணுகிறேன். இது எழுத்துதானே? பிற மொழி ஒலியை ஓரளவுதான் தமிழ் தர முடியுமென்றே கருதுகிறேன். நமது நோக்கம் ஒலிநயம் தானே? இதில் இலக்கணம் குறித்த தெளிவில்லை. தவறென மற்றவர் சுட்டும் போது, மாற்றிக் கொள்வோம். இப்போதைக்கு கிரந்தம் இல்லையென்பதே மகிழ்ச்சி.--உழவன் (உரை) 16:56, 11 சனவரி 2017 (UTC)[பதிலளி]
மிக்க மகிழ்ச்சி. உதவியமைக்கு நன்றி. :) -- மாதவன்  ( பேச்சு ) 16:59, 11 சனவரி 2017 (UTC)[பதிலளி]

பயனர் பெயரை மாற்றுவது எப்படி?

என் பக்கத்தின் இணைப்பு தலைப்பை தமிழில் மாற்ற விரும்புகின்றேன்

புதுவை ஒன்றிய பிரதேசத்திற்கு வலைவாசல் எப்படி உருவாக்க வேண்டும் அவற்றில் என்ன கட்டுரைகள் இடம் பெற வேண்டும் ? புதுவைபிரபு 14:07, 1 பெப்ரவரி 2017 (UTC)

பிறப்பு இறப்பு பகுப்புகள்[தொகு]

வணக்கம். பிறப்பு இறப்பு பகுப்புகள் பெயரிடலில் உதவி தேவை.

category:2000 births => பகுப்பு:2000 பிறப்புகள் / பகுப்பு:2000இல் பிறந்தவர்கள் / பகுப்பு:2000 ஆண்டில் பிறந்தவர்கள்
category:2000s births => பகுப்பு:2000கள் பிறப்புகள் / பகுப்பு:2000களில் பிறப்புகள் / பகுப்பு:2000களில் பிறந்தவர்கள்

தற்போது பகுப்பு:2000 பிறப்புகள்/பகுப்பு:2000 இறப்புகள் என பகுப்புகள் உள்ளன. கருத்துக்கள் தேவை. --அஸ்வின் (பேச்சு) 20:54, 1 பெப்ரவரி 2017 (UTC)

இப்போதிருப்பது போல பகுப்பு:2001 பிறப்புகள் என இருப்பதே சிறந்தது. ஆனால், 2000கள் பிறப்புகள் என்ற பகுப்பு எதற்காக. அவை தேவையற்றவை என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 00:35, 2 பெப்ரவரி 2017 (UTC)
Kanags அவர்களே, 1900கள் பிறப்புகள்/இறப்புகள் போன்ற பகுப்புகள் பிறப்பு/இறப்பு வருடம் சரியாக அறியப்படாதவர்கள் கட்டுரைகளில் உதவும். மேலும் இவற்றால் பகுப்புகளில் தொடர்ச்சி இருக்கும். AswnBot இனை வைத்து இப்பகுப்புகளை சரிசெய்திடலாம். --அஸ்வின் (பேச்சு) 16:56, 17 பெப்ரவரி 2017 (UTC)

புரியவில்லை[தொகு]

மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் (பகுப்பு) என்றால் என்ன? அதை எப்படி சரி(துப்புரவு) செய்வது என்று புரியவில்லை.? --குறும்பன் (பேச்சு) 18:40, 20 பெப்ரவரி 2017 (UTC)

தமிழாக்கம்[தொகு]

Death Eater என்பதை தமிழில் எவ்வாறு எழுதுவது? டெத் ஈட்டெர் என்று கூறலாமா? அல்லது பிணந்தின்னி என்பதை பயன்படுத்தலாமா?-- மாதவன்  ( பேச்சு ) 12:18, 1 மார்ச் 2017 (UTC)

ஹாரி பாட்டர் புதினங்களின் இரண்டு பாகங்கள் தமிழில் மொழிப்பெயர்த்து வெளியிடப்பட்டதாக ஆங்கில விக்கியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்க்க: Harry Potter in translation மற்றும் பதிப்பாளர் (மஞ்சுள்) பக்கம். தமிழ் நூலில் எவ்வாறு Death Eatersஐ பயன்படுத்தியிருக்கிறார்களோ அதே மாதிரி பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. இத்தமிழ் நூல்களைப் படித்தவர்கள் கருத்தை அறிந்து தக்க சொல்லைப் பயன்படுத்தலாம். --சத்தியராஜ் (பேச்சு) 14:05, 1 மார்ச் 2017 (UTC)
சத்தியராஜ் மஞ்சுள் இரண்டு நூல்களை மட்டுமே வெளியிட்டுள்ளனர். அவை முதல் இரண்டு பாகங்களே. அவற்றில் Death Eater அறிமுகமாகவில்லை. ஹாரி பாட்டர் அன்டு த காப்லட் ஆப் பயரிலே முதலில் Death Eater எனும் வார்த்தை பயன்பபடுத்தப்பட்டுள்ளது. பயனர்:Kanags, பயனர்:AntanO -- மாதவன்  ( பேச்சு ) 15:57, 3 மார்ச் 2017 (UTC)
தமிழில் வெளியிடப்பட்டிருந்தால் (அது விக்கிநடைக்கேற்ப இருந்தால்) அந்தத் தலைப்பையே பயன்படுத்தலாம். அல்லது "டெத் ஈட்டர் எனத் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 22:12, 3 மார்ச் 2017 (UTC)
Kanags தமிழில் வெளியிடப்பட்ட அப்புத்தகத்தில் இருக்கும் சொற்களை விக்கியில் பயன்படுத்துவது சரியாகுமா? தமிழிலில் வெளியிட்ட அப்புத்தகங்களில் Death Eater பயன்படுத்தப்படவில்லை. ஆனால் திரைப்படத்தின் தமிழாக்கத்தில் பிணந்தின்னி எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எதனை தலைப்பிடலாம் என்று தாங்களே கூறுங்கள்.-- மாதவன்  ( பேச்சு ) 13:57, 4 மார்ச் 2017 (UTC)

புகைப்படம் அமைத்துக் கட்டுரை எழுதுவது எப்படி[தொகு]

caption text User:Ethirkottaisaravanajothi பயனரால் கேட்கப்பட்டது.

உங்களின் கவனத்திற்கு[தொகு]

வணக்கம்! விக்கிப்பீடியா:MS, தானியக்கமாக மாறவில்லை. கவனிக்கவும்.--நந்தகுமார் (பேச்சு) 05:22, 7 மார்ச் 2017 (UTC)

@Aswn: கவனிக்க.--Kanags \உரையாடுக 06:54, 7 மார்ச் 2017 (UTC)

இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்[தொகு]

நான் நௌஷாத் ..இலங்கை- தமிழ் விக்கிபீடியாவுக்கு புதியவன். இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் என்று ஒரு விடயம் அதில் இருக்கிறது. அதில் என்னை பற்றிய தகவல்களை சேர்க்க முயன்றேன்.. முடியவில்லை.. சேர்க்கும் வழியை அறியத் தந்தால் மிக்க நன்றி உடையவனாயிருப்பேன். அன்புடன் நௌஷாத் 0714457593

தாங்கள் ஓர் எழுத்தாளர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் இருப்பின் ஓர் கட்டுரை ஒன்றை விக்கிப்பீடியாவில் ஆரம்பிக்கலாம். மேலதிக விபரங்கள், கட்டுரை எழுதும் முறை அனைத்தயும் உங்கள் பேச்சுப்பக்கத்தில் மேலே காணப்படும் வழிகாட்டிக்குறிப்புகளை வாசித்தும், அதிலுள்ள இணைப்புக்கலை அழௌத்தி வரும் பக்கங்களை வாசித்தும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:44, 9 மார்ச் 2017 (UTC)
அன்பின் நௌசாத், தன்னைப் பற்றிய கட்டுரையை அவரே எழுதுவது விக்கிப்பீடியாவில் நடைமுறையில் இல்லை. நீங்கள் ஒரு பயனராக உங்கள் தகவல்களைச் சுருக்கமாக உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். @Shriheeran:--Kanags \உரையாடுக 20:35, 9 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:18, 10 மார்ச் 2017 (UTC)