பெட்டமுகலாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெட்டமுகலாளம்
கிருஷ்ணகிரியின் ஊட்டி
பெட்டமுகிளாலம்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

பெட்டமுகலாளம் ( Bettamugulalam ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் பெட்டமுகலாளம் ஊராட்சிக்கு உட்பட்டது. இங்குள்ள மலையும் பெட்டமுகலாளம் என்று அழைக்கபடுகிறது.

பெயராய்வு[தொகு]

பெட்ட என்ற கன்னடச் சொல்லுக்கு மலை என்பது பொருளாகும். முகுலாளம் என்றால் மிகவும் ஆழமான பகுதி என்பதாகும். இது ஒரு மலைக் கிராமம் ஆகும். மலைமேல் இருந்து ஆழமான பகுதியைக் காண முடிவதால் இப்பெயரைப் பெற்றிருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[2]

அமைவிடம்[தொகு]

இந்த ஊர் தேன்கனிக்கோட்டையிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 47 கி.மீ. தொலைவிலும், மாரண்டஅள்ளியில் இருந்து 15 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 309 கி.மீ. தொலைவில் உள்ளது. [3] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 16 கி.மீ தொலைவில் உள்ள மாரண்டஅள்ளி தெடருந்து நிலையம் ஆகும்.

பெருங்கற்காலச் சின்னங்கள்[தொகு]

பெட்டமுகலாளத்தில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் பாண்டுரார் பாறை என்றும் பாண்டுரார் குண்டு என்றும் பாண்டவர் கோயில் என்று அழைக்கப்படும் இடத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் ஒரு வகையான கல்வட்டங்கள், கல்திட்டைகள் போன்றவை உள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். பக். 105. 
  3. http://soki.in/bettamugulalam-kelamangalam-krishnagiri/
  4. த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். பக். 130-131. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்டமுகலாளம்&oldid=3753273" இலிருந்து மீள்விக்கப்பட்டது