நேரடி வீட்டுத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீட்டுச் சுவற்றில் பொருத்தப்பட்டுள்ள கும்பா அலைவுணரி

நேரடி வீட்டுத் தொலைக்காட்சி (Direct-broadcast satellite television - DBSTV) என்பது கம்பியில்லா முறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பயனர்களின் வீடுகளுக்கு வழங்கும் ஒரு நவீன தொழினுட்பம் ஆகும். இதன் மூலம் நிலையத்தில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்களின் மூலமாக பயனர்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. செயற்கைத் துணைக்கோள்கள் புவியிலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பெற்று மீண்டும் புவியின் மற்றொரு பகுதிக்கு அனுப்புகிறது. பயனர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின்காந்த அலையுணரிகள் இந்த சமிக்ஞைகளைப் பெற்றுத் தொலைக்காட்சிக்கு அனுப்புகின்றன.[1]

இந்த செயற்கைத் துணைக்கோள்கள் புவியிலிருந்து சுமார் 35700 கி.மீ உயரத்தில் ஜியோசின்க்ரோனஸ் சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. நேரடி வீட்டுத்தொலைக்காட்சி 200 க்கும் மேற்பட்ட தடங்கள், தொலைவியாபாரம் மற்றும் இணைய வசதிகளையும் அளிக்கிறது.[சான்று தேவை]

நேரடி வீட்டுத்தொலைக்காட்சி பல்லாயிரக்கணக்கான அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What is DTH ?". Videocon d2h Limited. Archived from the original on 2017-04-29. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)