சத்தாதன்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தாதன்வன்
எட்டாவது மௌரியப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி.மு.195 – 187
முன்னையவர்தேவவர்மன்
பின்னையவர்பிரகத்திர மௌரியன்
பிறப்புகி.மு.224
இறப்புகி.மு.187
பாடலிபுத்ரம்
அரசமரபுமௌரிய வம்சம்

சத்தாதன்வன் அல்லது சத்தாதனுஸ் (Shatadhanvan or Shatadhanus) மௌரியப் பேரரசின் எட்டாவது பேரரசர் ஆவார். புராணக் குறிப்புகளின் படி, தேவவர்ம மௌரியனுக்குப் பின்னர் ஆட்சி வந்த சத்தாதன்வன் மௌரியப் பேரரசை கி.மு. 195 முதல் 187 முடிய ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் பல்வேறு மன்னர்களின் தொடர் படையெடுப்பால், மௌரியப் பேரரசின் பகுதிகள் சுருங்கி, மகதப் பகுதி (தற்கால பிகார்) மட்டும் மௌரியப் பேரரசில் எஞ்சியிருந்தது. இவரது மறைவுக்குப் பின்னர், இவரது மகன் பிரகத்திர மௌரியன் ஆட்சிக்கு வந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

சத்தாதன்வன்
முன்னர்
தேவவர்மன்
மௌரியப் பேரரசர்
கி.மு.195–187
பின்னர்
பிரகத்திர மௌரியன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தாதன்வன்&oldid=3909953" இலிருந்து மீள்விக்கப்பட்டது