விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு68

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விக்கி பரப்புரை-சேலம்[தொகு]

விக்கிப்பீடியா:சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை பக்கத்துக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

இந்திய வரைபடம்[தொகு]

புகுபதியா பயனர் 212.121.219.1 பல கட்டுரைகளில் திசம்பர் 2011 முதல் இந்திய வரைபடங்களை மாற்றி வருகிறார். இது இந்திய நாட்டுப்பகுதிகளை சர்ச்சைக்குள்ளானவையாக காட்டுகின்றது. விக்கி மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை அடுத்து இவை பற்றி முடிவெடுக்க வேண்டும்.--மணியன் 17:05, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இப்போதைக்கு மீளமைத்துள்ளேன். முன்பிருந்த படங்களும் சர்ச்சைக்குரிய பல பகுதிகளைக் காட்டுமாறே உள்ளன. எனினும் தற்காலிகமாக முன்னிருந்த பதிப்புக்கே மாற்றியுள்ளேன்.--சோடாபாட்டில்உரையாடுக 17:30, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்கி உறவாடலில் மதிப்புறு நற்பண்பு[தொகு]

பொதுவாக விக்கிப்பீடியாவில் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும்போது எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் பண்புடனும் பங்களிப்பாளருக்கு உரிய மதிப்பளித்தும் பேச வேண்டும் என்பது கொள்கையாகும். அப்போதுதான் பங்களிக்கும் சூழல் நன்றாக அமையும். அண்மையில் சில உரையாடல்களில் சோடாபாட்டில் மற்ற பங்களிப்பாளர்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்தியும் நையாண்டி செய்தும் பேசியதைக் கண்டு அவரை அவ்வாறு செய்ய வேண்டாமெனக் கேட்டுக் கொண்டேன். அவர், நான் விக்கிப் பயனரை mock செய்யவில்லை, அவர் சொன்னதைத்தான் கேலி செய்தேன், இதில் தவறு இல்லை என்கிறார். எனக்குத் தெரிந்தவரை இது விக்கி நற்பண்புகளை மீறிய (incivil) நடத்தை என்றாலும் மற்ற பயனர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன். இந்தக் குறிப்பிட்ட விசயத்தில் குறிப்பிட்ட பயனர் (சோடாபாட்டில்) எவ்வாறு நடந்து கொண்டார் என்பதைக் காட்டிலும் இது ஒரு தவறான முன்மாதிரியாகிவிடக் கூடாது என்பதால் இதை முக்கியமாகக் கருதுகிறேன். அருள் கூர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். -- சுந்தர் \பேச்சு 16:03, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

குறிப்பிட்ட ஒரு வாதத்தைக் சுட்டி அதைப் படிக்கையில் “சிரிப்பு தான் வருகிறது” என்று சொல்லுவது எவ்விதத்திலும் incivility ஆகாது. ஆங்கில விக்கியின் en:Wikipedia:Civility பக்கத்தை மேற்கோள் காட்டுகிறேன். இங்கு எவ்விதத்திலும் நான் கோபியைத் தாக்கவில்லை, அவர் மீது அவதூறு செய்யவில்லை அவரைக் கண்டிக்கவும் இல்லை. ”பங்களிப்பாளருக்கு உரிய மதிப்பளித்தும்” என்பதில் நான் இங்கு பிசகவில்லை. ஒரு குறிப்பிட்ட வாதம் நையாண்டி செய்யத் தக்கது என்பது incivil ஆகாது. நமது கொள்கைப் பக்கத்திலும் ”பங்களிப்பை குறை கூறுவீர், பங்களிப்பாளரை அல்ல” என்று உள்ளது.
பிற விக்கிகளில் எங்கும் “வாதத்தை நையாண்டி செய்யாதே”/ “வாதத்தை விமர்சனம் செய்யாதே” என்ற கொள்கை கிடையாது. இது தமிழ் விக்கியில் கூடாதென பரந்த விக்கி சமூகம் கருதினால், இங்கும் civility கொள்கைப் பக்கத்தை உருவாக்கி அதில் வாதங்களையும் நையாண்டி செய்தல் கூடாது என்று சேர்த்து விடுங்க்ள். நான் அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்கிறேன். (என்னைப் பொறுத்த வரை இது தேவையற்ற இறுக்கம் பேணல். நையாண்டியும் அங்கதமும் விமர்சனம் செய்யும் போக்கு தமிழ் பண்பாட்டில் காலங்காலமாக இருந்து வந்துள்ளன. அடுத்தவரைத் தாக்காது வாதத்தை மட்டும் விமர்சனம் செய்கையில் நையாண்டியோ, சிரிப்பு வருகிறது என்று சொல்லுவதோ தடை செய்வது தேவையற்றது என் தனிப்பட்ட கருத்து.) --சோடாபாட்டில்உரையாடுக 18:32, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

--சோடாபாட்டில்உரையாடுக 18:00, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சுந்தர், தனியொரு பயனரைக் குறித்து அல்லாது பொதுவாகச் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.
1. இணையத்தின் பல்வேறு களங்களிலும் எது தகுந்த உரையாடல் போக்கு, எது பண்பற்றது என்பதற்கான வரையறை மாறும். இங்கே பண்பற்றதாகப் பார்க்கக்கூடியது பிற இடங்களில் ஏற்புடையதாக இருக்கும். எனவே, விக்கிக்கு எது தகுந்த உரையாடலாக இருக்கும் என்று எண்ணிப்பார்த்துச் செயல்படலாம். விக்கியிலும் சரி வெளியேயும் சரி, காலம் செல்லச் செல்ல என்னுடைய உரையாடல் போக்கிலேயே பல்வேறு மாற்றங்களை உணர்ந்துள்ளேன். எனவே,பண்பான உரையாடல் என்பது எதிர் கருத்து உடையவரையும் நம்மை மதித்து அவரது கருத்துகளை முன்வைக்க உதவும். சிலர் முறையான கருத்துகளை மிகப் பணிவாகச் சொல்லும் போது, "இவர் ஏன் இவ்வளவு பணிவாகச் சொல்கிறார். சும்மாவே சொல்லலாமே" என்று எண்ணுவேன். அதே வேளை, தேவையான கருத்தை மிகக் கடுமையாகச் சொல்லும் போதும், "இதை ஏன் இவ்வளவு கடுமையாகச் சொல்கிறார். நட்புடன் சொல்லலாமே?" என்று எண்ணுவேன். பண்பற்ற உரையாடல் என்பது எதிர் கருத்து உடையவர் நம்மேல் உள்ள நன்னம்பிக்கையைக் குலைத்து இன்னும் கடுமையாகவும் தனிப்பட்ட அளவிலும் கருத்துகளை முன்வைக்கத் தூண்டும். இவ்வாறு ஒருவர் பண்பற்று உரையாடும் போது, அவரது கருத்துக்கு மற்றவர் உடன்பட்டால் கூட உரையாடல் கடுமையை முன்னிட்டு விலகி இருக்க எத்தனிப்பர். கடுமையாக உரையாடினாலும் சரியாக முன்வைப்பவருக்கு இது ஒரு இழப்பே.
2. ஆங்கிலத்தில், உலகளாவிய, மேலைநாட்டுச் சூழலில் இலகுவாக ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தும் தொனியும் தமிழ்ச் சூழலில் மிக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புண்டு. நமது நண்பர்களிடேயே கூட ஆங்கிலத்தில் சில தகா சொற்களைப் பயன்படுத்துவோம். சிரிப்பார்கள். ஆனால், அதே சொல்லை, கருத்தைத் தமிழில் சொல்லும் போது நமக்கே உறுத்தும். எனவே, உண்மையிலேயே ஒருவர் கடுமையாகப் பேச எண்ணாத போதும் அவரது கருத்துகள் தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளதைக் கருதி, தமிழ்ச் சூழலை, மரபை, பண்பாட்டைக் கருத்தில் உள்ளலாம்.
3. தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி வெளியில் உரையாடும் போது நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பாளர்களாகவே பார்க்கப்படுவோம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை வைத்து நமது திட்டம் பற்றி, தமிழர்களைப் பற்றிய பொதுவான மதிப்பீடு வர வாய்ப்பு உண்டு. இதனை உணர்ந்து கருத்துகளை உறுதியாக முன்வைக்கும் அதே வேளை நயம்பட முன்வைக்க வேண்டும். கூகுள் திட்டம் போன்றவற்றில் ஒருவர் நயமாகப் பேச, மற்றவர் கருத்துகளை உறுதியாக முன்வைக்கும் நிலைப்பாடும் தேவைப்பட்டது. இது போன்ற அணுகுமுறையையும் மேற்கொள்ளலாம்.
4. விக்கியில் ஒருவரது கருத்துகளை முன்வைக்கும் போது அவர் தனது சொந்த, தனிப்பட்ட கருத்துகளையே முன்வைக்க வேண்டும். மற்ற பலர் ஒத்த கருத்து உடையவராக இருந்தாலும் அவர்களின் சார்பாக ஒருவர் பேசும் போக்கைத் தவிர்க்க வேண்டும். இது ஒரு வகையில் குழு சேர்ப்பது போல் ஆகி விக்கியின் உறவாட்டத்தைக் கெடுக்கும். இந்த நிலை மாற வேண்டுமானால், அனைவரும் தத்தமது கருத்துகளைத் துணிவாகவும் தெளிவாகவும் தத்தம் சொற்களிலும் முன்வைக்க முன்வர வேண்டும் என்பது விக்கிப் பண்பு. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் இந்தப் பண்பைப் பேண சிலருக்குத் தயக்கமாக உள்ளதாகவே புரிந்து கொள்கிறேன். உரையாடல்களில் கருத்தை முன்வைத்துப் பேசும் போதும், வாக்கெடுப்புகளிலும் வெறும் +1 போடுவதும், விருப்பம் போடுவதும் எந்த வகையிலும் உதவுவதில்லை.--இரவி 18:06, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
(edit-conflicted, இரவியின் கருத்துக்கு முன்னால் இட முயன்றது) வாதத்தையோ பங்களிப்பாளரையோ நையாண்டி செய்யாதே உடன் பங்களிக்கும் பயனரின் கருத்துக்களையும் வாதத்தையும் நையாண்டி செய்ய வேண்டாம். என்பதைத் தமிழ் விக்கிப்பீடியாவில் கொள்கை ஆக்கலாமா என்பதைப் பற்றி அனைவரின் கருத்தை அறியவே இந்த உரையாடலைத் தொடங்கியிருக்கிறேன், சோடாபாட்டில். (விமர்சனத்தையும் நையாண்டியையும் ஒன்றாகப் பார்க்க வேண்டாம்.) -- சுந்தர் \பேச்சு 18:09, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
வாதத்தையோ பங்களிப்பாளரையோ நையாண்டி செய்யாதே. இதிலிருந்து “பங்காளிப்பாளரை” அடிக்கக் கோருகிறேன். அது ஏற்கனவே WP:NPA விதியாக உள்ளது. அதை நானுட்பட யாரும் எதிர்க்கவில்லை. இப்படி இரண்டையும் இங்கு சேர்த்துப் போடுவது எனது நிலைப்பாட்டை வேறுமாதிரிக் காட்டுவது போலக் காட்சியளிக்கிறது. மேலும் நீங்கள் முன்வைக்கும் முன்மொழிவுக்கு வலுவும் சேர்க்கும் (”வாத நையாண்டி தடை வேண்டாமென்பவர்கள்” அதை மட்டும் மறுக்கும் வாய்ப்பு வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 19:34, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதால் அவ்வாறு இட்டேன். நீங்கள் இரண்டையும் எதிர்ப்பதாக நினைக்கவில்லை. அவ்வாறு கருத இடமிருக்குமெனில், நீங்களும் மேலே கருத்தை விமர்சனம் செய்வதையும் நையாண்டி செய்வதையும் ஒன்றாக இட்டிருப்பதை அடித்துவிட வேண்டுகிறேன். நான் நீங்கள் கூறியபடி பழைய பரிந்துரையை அடித்து மாற்றி எழுதியுள்ளேன். -- சுந்தர் \பேச்சு 19:46, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
I dont seem that comment as an incivil one, since it didnt attack the commenter. IMHO Internet/Wikipedia has 1 culture,rather is culture agnostic. Wikipedia rules should be modified / suited for situations(We can have different policy for BLP due to the kind of articles / defamation that happen), but values cannot change based on culture(which is transient). So when designing policies like WP:CIVIL, "தமிழ்ச் சூழலை, மரபை, பண்பாட்டைக் கருத்தில் உள்ளலாம்" should be kept out of paper. All these are very transient,vary from individuals. Adding culture to policy is a slippery slope and can tomorrow lead to WP:BIAS. IMO தமிழ்ச் சூழல் is a word reserved only for Vijay TV Gopinath, not Internet,not certainly Wikipedia. ஸ்ரீகாந்த் 19:12, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
When i meant culture could lead to en:WP:BIAS, can a german native contribute to tamil wikipedia with just tamil knowledge? or should that person also know about "தமிழ்ச் சூழல்" before doing so.Just like how pure tamil is relative, "தமிழ்ச் சூழல்" also has individual meanings and cannot be put into any guideline/policy. ஸ்ரீகாந்த் 19:17, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
I look forward to the day a German editor edits Tamil Wikipedia, Logic. Actually, for that matter Jean-Luc, a native French speaker, has made occasional edits. In my view, it is not about culture as in rituals, it's almost that two phrases don't mean the same in two different languages. So, if you translate an acceptable statement in English to Tamil, it may sound rude. A Tamil speaker will know it's rude. If they still post that, it only means that they intended it to be so.
Coming to this instance, I repeat: Saying "I only mocked at the editor's comment, not the editor." is akin to saying "I only mocked at the way he was limping, not the handicapped person." Also, to laugh at someone's comment may not be explicitly forbidden in English wiki policy (for example), but it's still incivil in spirit.
As to the general question of culture to be considered in policy. When a comment is insulting in real world in similar contexts, how can we expect the users to imagine it to be not insulting just in wiki? Then, it's like doing some kind of new "cultural orientation" for users, which is unfair. For probably a few dozen non-native editors a few decades from now, following a more polite culture may be hard, but isn't it fine to err on the side of politeness (keeping all else same)? If there's even a sizeable number of French or German people, we can consider revising the policy anyway. -- சுந்தர் \பேச்சு 19:39, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
Even I too would love if every wiki editor edits Tamil Wiki :). When I meant about "தமிழ்ச் சூழல்", Just like how pure tamil is relative, "தமிழ்ச் சூழல்" also has individual meanings and cannot be put into any guideline/policy. We are Tamil Wikipedians each having our own தமிழ்ச் சூழல். unified "தமிழ்ச் சூழல்" is also a cultural orientation IMO which otherwise differs for each of us. ஸ்ரீகாந்த் 20:00, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நண்பர்களுக்கு நான் எழுதும் கடிதங்களில் கூட ஆங்கிலத்தில் எழுதும் போது வேறு வகையான புரிதலும் தமிழில் எழுதும் போது வேறு வகையான நெருக்கமும் உள்ளதை உணர்ந்திருக்கிறோம். எழுதுபவரையும் படிப்பவரையும் பொறுத்து ஒரே சிந்தனை வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு உள்ளது. இது பண்பாட்டுச் சூழலையும் தாண்டியது. ஆனால், பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. சிலர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுத முற்படலாம். அல்லது, ஆங்கில விக்கிப்பீடியாவில் இது போல உரையாடுகிறார்களே எனலாம். ஆனால், வணிகம் முதல் அனைத்து விசயங்களிலும் உள்ளூர் பண்பாடு, மொழியின் இயல்புக்கேற்ப மாற்று அணுகுமுறைகள் தேவைப்படுகிறது. ஆங்கில விக்கிப்பீடியாவில் எல்லாரையும் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உண்டு. ஆனால், இது தமிழ்ச் சூழலுக்குப் பொருத்தமானது இல்லை. அதே வேளை, எல்லாரையும் sir, அவர்களே இவர்களே, பேராசிரியரே என்று அழைத்துக் கொண்டிருந்தாலும் விக்கி போன்ற கூட்டுத் திட்டங்களில் தோழமை உணர்வும் சமநிலையும் மாறலாம். இதைக் கருத்தில் கொண்டே தமிழ் விக்கியின் தொடக்க காலம் முதல் அனைவரையும் பெயர் சொல்லியே அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், செங்கைப் பொதுவன், பேராசிரியர் கிருசுணமூர்த்தி போன்ற மிகவும் மூத்தவர்கள் வரும்பொழுது அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பது தயக்கமாக உள்ளது. எனவே, இது போன்ற இடங்களில் சிலர் ஐயா என்று விளிப்பதும் ஏற்புடையதாக இருக்கிறது. எனவே, விக்கி நற்பழக்க வழக்கம் என்பது சில வேளை உலகளாவிய போக்குக்கு உடன்பட்டும் சில வேளைகளில் உள்ளூர் சூழலுக்கு ஏற்பவும் இருப்பது தவிர்க்க முடியாதது.--இரவி 17:05, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
By repeatedly comparing "mocking an argument" to "mocking the limping of a handicapped person", you are unjustly vilifying me and painting my actions in bad light. I said "I find this logic/argument laughable/funny". You are linking it to "handicapped person" and playing the emotional card here. An argument isnt an activity of a handicapped person. Mocking the merits of someone's comment isnt forbidden either in policy or in spirit in ANY wiki project. As an en wiki admin you would know this. Such cases have been repeatedly brought up in ANI and etiquette forums and everytime the complainer (he mocked my argument / he attacked my argument) has been dismissed as wasting the admins time. Please show me an instance where mocking an argument has been deemed violation of CIVIL policy in spirit en wiki? --சோடாபாட்டில்உரையாடுக 19:49, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
(edit-conflicted) I'm not linking the two, Sodabottle. Neither is my interest in vilifying you. I'm sure you're aware of what an analogy is.
I don't claim that there is any precedent for this in English Wiki, and the lack of precedents there doesn't by itself mean much. Particularly for an 'in spirit' claim. That aside, I want to formally propose this etiquette and seek have a poll (separate from this particular case). In order to de-link this issue from the larger question, I choose to not do it now. -- சுந்தர் \பேச்சு 19:58, 26 சனவரி 2012 (UTC) P.S. (OT: I responded in English for continuity's sake here, but prefer to respond in Tamil henceforth.)[பதிலளி]
An analogy that puts "approach towards an argument" and "behaviour towards a handicapped person" in the same sentence?. This is the same tactic godwin's law mentions. Use an extreme and despicable case as an analogy to create guilt by association. I would respectfully request not to use such extreme analogies while proposing policy changes. Especially when the incident in question is being offered as a pretext for a sitewide policy change.
"the lack of precedents there doesn't by itself mean much. Particularly for an 'in spirit' claim". On the contrary there have been repeated instances where incivil complaints on "comments on argument/edits" have been dismissed out of hand. Even comments like "your edits/actions are idiotic" have been deemed not personal attacks or invivil behaviour (this would be last english comment, will switch to tamil henceforth too). --சோடாபாட்டில்உரையாடுக 20:19, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
தகவலுக்கு நன்றி, சோடாபாட்டில். மேலே சொன்னதுபோல இந்த நிகழ்வையொட்டி கொள்கை வரைவை முன்வைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். பின்னர் முன்மொழிவு வரும்போது உங்கள் கருத்தைப் பதியுங்கள். -- சுந்தர் \பேச்சு 07:46, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
"When a comment is insulting in real world in similar contexts, how can we expect the users to imagine it to be not insulting just in wiki?" In real world, where gopi and me are talking, gopi makes an argument and if i respond by laughing first and then proceed to rebutt his argument. It is the exact real world analogue of what happened here. How you concluded that i was "insulting" gopi from there i don't know. (especially when i specifically refrained from "condemning" him like you did in the same page). --சோடாபாட்டில்உரையாடுக 19:54, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
என்னுடைய கருத்தில் கவனிக்கவேண்டிய பகுதி in similar contexts. ஒரு பொது நோக்கத்துக்காகப் பல்வேறு நபர்கள் ஒன்றாக இணைந்து உரையாடும்போது உள்ள சூழலைத்தான் சொல்கிறேன். மேலும், அப்பகுதி As to the general question என்ற வரியுடன் உள்ளதைக் கவனியுங்கள். அது ஸ்ரீகாந்த் இரவிக்குக் கூறிய மறுமொழியைக் குறித்தது. -- சுந்தர் \பேச்சு 20:03, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தனிப்பட்ட அலுவல் காரணமாக சிலநாள் பயணம் முடித்து விக்கிப்பீடியாவிற்கு வந்தால் இங்கே பல நீண்ட உரையாடல்கள் நடைபெற்றிருப்பதைக் காண முடிந்தது. பயனரைக் கேலி செய்வது தவறு. ஆனால் குறிப்பிட்ட கருத்தைக் கூட கேலி செய்வது கூடாது என்பது நம்மிடையே தேவையற்ற இறுக்கமான சூழலையே உருவாக்கும். இது கொள்கையாவதை எதிர்க்கிறேன். --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 07:05, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மரு.கார்த்தி. உங்கள் கருத்துக்கு நன்றி. இரு பயனர்களது விவாதத்தில் கருத்து வேறுபாடு நிலவிக் கொண்டிருக்கும்போது நையாண்டியாக 'கருத்தைக் கேட்டால் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது' என்பது போலச் சொல்வது எனக்கு விக்கிச்சூழலுக்கு உகந்ததாகத் தெரியவில்லை. அது என் தனிப்பட்ட கருத்துதான்.
இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட நிகழ்வையும் தாண்டி பொதுவான கொள்கை ஒன்றை சில நாட்கள் கழித்து முன்மொழிய இருக்கிறேன். அப்போது உங்கள் கருத்தையும், மறுப்பு இருந்தால் அதையும் கட்டாயம் தெரிவியுங்கள். -- சுந்தர் \பேச்சு 07:42, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மரு. கார்த்தி, " பயனரைக் கேலி செய்வது தவறு. ஆனால் குறிப்பிட்ட கருத்தைக் கூட கேலி செய்வது கூடாது என்பது நம்மிடையே தேவையற்ற இறுக்கமான சூழலையே உருவாக்கும்." என்கிறீர்கள், ஆனால் பயனர் தன் கருத்தாகக் கூறிய ஒன்றைக் கேலி செய்தல் பயனரைக் கேலி செய்தல் ஆகாதா? மேலும் ஏன் கருத்தைக் கேலி செய்ய வேண்டும், கருத்தை மறுத்து எதிர்க்கருத்துகள் வைக்கலாமே. சற்று எண்ணிப்பாருங்கள். " உயர் குறிக்கோளைக் கருத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன். இவை எல்லாம் என் தனிப்பட்ட கருத்துகள்தாம், அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகி பொருள்கொள்ள வேண்டுகிறேன்" நான் பணிவுடன் கூறிய கருத்தையே, "முகத்தில் அடித்தாற்போல் இருந்தது" என்று கூறி கடுமையாகத் தாக்கினார் சோடாபாட்டில், இப்பொழுது பயனர் கூறும் கருத்தைப்பார்த்து கேலியாகக் கூறியது பயனரைக் கேலி செய்ததாகாதா? கேலியும் கிண்டலும் நட்புறவான சூழலில் இனிக்கும், எவ்வளவோ விக்கியில் நடந்துள்ளன!! வெகுநாட்களுக்குப் பின், பெரும் பங்களித்த கோபி வந்து சொன்ன பொறுப்பான கருத்தைக் கேலி செய்வது விக்கியில் நல்லுறவாட்டத்தை வளர்க்காது. --செல்வா 11:34, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அண்மைய நாட்களில் இங்கே நடந்து வரும் உரையாடல்கள்பற்றி எனது கருத்தை விரிவாகவே கூற விருப்பம். ஆனாலும் இப்போது எவ்வளவு கூற முடியும் எனத் தெரியவில்லை. இந்த விடயம் தொடர்பாகவும், அண்மைய நாட்களின் நடந்துவரும் உரையாடல்கள் தொடர்பாகவும் எனது கருத்தை முடிந்த வரையில் கூறுகின்றேன். //இந்தக் கட்டுரையை விடப் பயனுள்ள இன்னொரு கட்டுரையில் நான்கு சொல்லேனும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு - பயனர்களுக்குக் கிடைக்காது போயுள்ளது. இதைக் கேட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை.//. இவ்வாறு சோடாப்பாட்டில் எழுதியதே இப்போது நடக்கும் விவாதத்துக்கான விடயம். இங்கே பல நாட்களாக தொடர்ந்துவரும் உரையாடல்களை, விவாதங்களை கோபி பார்த்துவிட்டுத்தான் அப்படிச் சொன்னாரா என்று தெரியாது. உண்மையைச் சொன்னால், இங்கே அண்மையில் நடந்த பல விவாதங்கள் பயனற்றவையாகவே எனக்குத் தோன்றியது. இதில் செலவளிக்கும் நேரத்தை வேறு பயனுள்ள வழியில் விக்கியில் செலவளிக்கலாமே என்று தோன்றியது. ஆனால் எனக்குப் பயனற்றதாகத் தோன்றுவது, விவாதம் செய்யும் பலருக்கு அத்தியாவசியமானதாகத் தோன்றுகின்றது. அப்படியிருக்க, எது பயனுள்ளது, எது பயனற்றது என்று எப்படித் தீர்மானிக்க முடியும். எழுதப்படும் கட்டுரைகள் பயனுள்ளவையா, பயனற்றவையா என்பதுபற்றி எண்ணிப் பார்த்தால் எனக்குப் பயனுள்ளதாகத் தோன்றுவது இன்னொருவருக்குப் பயனற்றதாகவும், இன்னொருவருக்குப் பயனுள்ளதாகத் தோன்றுவது எனக்குப் பயனற்றதாகவும் தெரிவது இயல்புதான். எழுதப்படும் ஒவ்வொரு கட்டுரையும் யாரோ ஒருவருக்குப் பயன்படலாம். ஆனால் அந்த ஒருவருக்காக அந்தக் கட்டுரை தேவைதானா, அதில் ஒருவருடைய உழைப்பு தேவைதானா என்று கேட்டால், அதைத் தீர்மானிக்க வேண்டியது அதற்கான உழைப்பைக் கொடுக்க நினைப்பவர்தானே? எனவே இதில் சிரிப்பு வருகின்றது என்று சொன்னது பெரிய தவறாக எனக்குத் தெரியவில்லை. இப்படி எத்தனையோ வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்கள் கருத்து எனக்கு சலிப்பூட்டுகின்றது, அயர்ச்சியாய் இருக்கிறது, சிரிப்பூட்டுகின்றது என்றெல்லாம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. (தயவுசெய்து ஆதாரம் கேட்காதீர்கள். அதைத் தேடும் அளவுக்கு எனக்கு பொறுமையோ, ஆற்றலோ, நேரமோ இல்லை). அப்படியிருக்க, இந்த ஒரு சொல்லை வைத்து, இத்தனை உரையாடல் தேவைதானா என்பதை அனைவரும் யோசித்துப் பார்த்தால் நல்லது. மேலும் கோபி, புன்னியமீனுக்கு பலர் ஆறுதல் சொன்னார்கள் என்றதை, எவ்வாறான ஆறுதல் சொன்னார்கள் என்றே அறியாமல், தானாகவே சிலவற்றை யோசித்து, அவற்றை ஆய்வு செய்து எழுதியிருந்ததும் (அவர் ஒருவரைக் குறிப்பிட்டுக் கூறவில்லை எனினும்), கனக்ஸ் ஒரு இடத்தில் சொல்லியிருந்ததுபோல் 'விக்கிப்பீடியர்களிடையே ஒரு வகைக் குழப்பத்தையே உண்டு பண்ணும்' என்றே நானும் நினைக்கின்றேன். இவ்வகையான வாதங்களும் நட்பான சூழலைத் தராது என்பதை உணரவில்லையா? இங்கே தமிழ் விக்கிபீடியாவில் அண்மைய நாட்களில் தொடர்ந்துவரும் உரையாடல்கள்பற்றி என் மனதில் சில விடயங்கள் தோன்றின. அதையெல்லாம் எழுதுவது அவசியம்தானா என்று பலதடவை என்னை நானே கேட்டுக் கொண்டேன். இதனை ஒரு கட்டத்தில் தொடராமல் முடித்துக் கொள்வார்கள் என்று நினைத்தேன். முடிவதாகக் காணவில்லை. இப்போது சூழ்நிலை கொஞ்சம் இறுக்கமாக உள்ளதே, இப்போதைக்கு இதனைத் தொடராமல், பிறகு அவசியமென நினைக்கும் விடயங்களைப்பேசி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றாவது இப்படியான நீண்ட உரையாடல்களை/விவாதங்களைத் தவிர்பார்களோ என்றால் அதுவும் நடக்கவில்லை. எனக்கு ஆங்கில விக்கிப்பீடியாவோ, அல்லது தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள அனைத்து கொள்கைகளுமோ தெரியாது. ஒரு சாதாரண விக்கிப்பயனராக அல்லது வெளியே இருந்து இந்த உரையாடல்களைக் கவனிக்கும் ஒருவராகவே இவற்றைச் சொல்கின்றேன். பண்பான சொல்லாடல்கள், பண்பான செயல்கள் தேவையென்று சொல்லப்படுகின்றது. சிலசமயம் பண்பான சொல்லாடல்கள் பயன்படுத்தப்படினும், அவை பண்பான செயல்களாக இருப்பதாகவோ, அல்லது நட்பான சூழ்நிலையைப் பேணுவதாகவோ தோன்றவில்லை. ஒரு பயனர் ஏதோ ஒரு வகையில் மனம் புண்பட்டார் என்றால், அவரை மேலும் புண்படுத்தாமல், அதனை எப்படித் தீர்க்கலாம் என்று இலகுவான வழிகளை எண்ணிப் பார்க்காமல், அவரது கட்டுரைகளில் தொடர்ந்து தவறு கண்டு பிடிப்பதும், புதிய கொள்கைகளை உருவாக்குவதன் அவசியம்பற்றி அப்போதே பேசிக் கொண்டிருப்பதும், அவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்பதும் எந்த வகையில் நட்பான சூழலைப் பேணுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. கலைக்களஞ்சியம் எல்லா வகையான கட்டுரைகளையும் அடக்கியதுதானே. விக்கிப்பீடியா தன்னார்வலர்களால் உருவாக்கப்படும்போது, அவரவர் தனக்குத் தெரிந்ததை, தனக்கு ஆர்வமுள்ள விடயங்களைப் பற்றித்தான் அதிகம் எழுதுவார்கள். எந்த வகையான பயனர்கள் அதிக பங்களிப்புச் செய்கின்றார்களோ, அவர்கள் விரும்பி எழுதும் துறைசார்ந்த கட்டுரைகள் அதிகம் வரத்தான் செய்யும். பன்முகத்தன்மை தேவையெனின், ஏனைய துறைசார்ந்த கட்டுரைகளை எழுதுவதோ, அல்லது அப்படி எழுதக் கூடியவர்களை விக்கிக்கு அழைத்து வருவதோதான் நாம் செய்ய வேண்டியது. அதைவிடுத்து, இப்படியான கட்டுரைகளை அதிகம் இருக்கின்றதே என்று சொல்வது சரியாகத் தோன்றவில்லை. கட்டுரைகளின் தரம் நன்றாக இருக்க வேண்டியது அவசியம்தான். எனினும், இங்கே அது தொடர்பாய் நிகழ்ந்த சில உரையாடல்கள் மேலோட்டமான சில கருத்துக்களை காட்டியதைக் காணக்கூடியதாய் இருந்தது. கடைசியாக எனது கருத்து இவ்வாறான நீண்ட உரையாடல்களைத் தவிர்த்து, அவரவர் தனக்கு கிடைக்கும் நேரத்தில் வேறு விக்கிப் பங்களிப்புகளைச் செய்தாலே தமிழ் விக்கி தானாக வளர்ச்சியடையும். அப்படியில்லாமல் இந்த உரையாடல்களே விக்கியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும், நட்பான சூழலைப் பேணும் என்றால் எதுவும் சொல்வதற்குத் தோன்றவில்லை. --கலை 12:44, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இது கொள்கையாவதை நானும் எதிர்க்கிறேன். பல பயனர்களும் தற்போது கைவலிக்கத் தட்டச்சு செய்வதை நிறுத்திவிட்டு கருத்துகளுக்கு +1, 👍 விருப்பம் போடுகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் இது கிண்டலாகப் பார்க்கப்படலாம். ஆனால், உரையாடலை எளிமையாக்கித் தட்டச்சலைத் தவிர்க்கிறது என்ற நோக்கில் பயனுள்ளவையே! அதற்காக இவ்வார்ப்புருக்கள் வேண்டாம் என்று எவரும் ஒதுக்கிவிடவில்லை. மேலும், விக்கியில் இது போன்ற கொள்கைகள் ஓர் இறுக்கமான சூழலை ஏற்படுத்தலாம். மேலும், இக்கொள்கையின் அடிப்படையில் பயனர் தடை போன்றவையும் நடக்கலாம்.
//அருள்கூர்ந்து வளர்முகமாக அணுகி பொருள்கொள்ள வேண்டுகிறேன்// இதேதான் என்னிலைப்பாடும். இப்போது, இரு வாரங்களாக விக்கியில் பல பேச்சுப் பக்கங்களில் வரும் சச்சரவுகளைப் பார்க்கும்போது எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இதை நான் இவ்வாறுதான் சொல்லமுடியும். மேலும், இதனை உரையாடலை நிறுத்துவோமே!, ஒரு முடிவினை எட்டுவோமே என்று கூறுவதெல்லாம் மீண்டும் அரைத்த மாவையே அரைக்கும் கதையாக நீளும். ஓரிடத்தில், ஒரு கருத்துக்கு நீங்கள் கூறுவது நகைப்பூட்டத்தக்கதாக இருக்கிறது என்று கூறுவது அப்பயனரிடம் நீங்கள் கூறுவது முழு புரிதலின்றி இருக்கிறது என்பதற்கு ஈடாகும். இதனைச் சொல்லக்கூடாது என்றில்லை. தினந்தோறும் வாழ்வில் பல இடங்களில் இதைச் சொல்லகூடும். விக்கியின் ஐந்து தூண்கள் படி, பயனரிடம் பேசுகையில் கண்ணியக் குறைவின்றிப் பேசுவதே கூறப்படுகிறது. அங்கு, பயனரின் கருத்துகளுக்கு குறிப்பிட்ட வகையில்தான் மறுசொல் (reaction word) சொல்லவேண்டும் என்று கூறப்படவில்லை. அவரவர் பாணிக்கேற்ப அவரவர் கூறுவர். எடுத்துக்காட்டாக, (பயனர்பேச்சுப் பக்கம்) இதுபோன்ற உரையாடல்களில் கூறப்படுபவையே பயனரது முழுமன நிலைப்பாட்டைக் காட்டும். அதைவிடுத்து, நீங்கள் இப்படிச் செய்யலாம், நீங்கள் இப்படி எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் இதைச் செய்யலாம், இது இப்படி இருந்திருக்கலாம், இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே! நாம் இப்படிச் செய்திருந்தாலென்ன? நாம் ஏன் இதனை முயலக்கூடாது? நீங்கள் செய்வது தவறு! என்பன போன்ற சப்பைக்கட்டுகள் (பல மெகா பைட் அளவில் இவை த.வி.-யில் குவிந்துள்ளன) பயனருக்கு சில வேளைகளில் எரிச்சலூட்டலாம். (எனக்கும் ஊட்டியிருக்கிறது) பங்களிப்பாளர் ஒருவர் கூறியது போல, நேருக்கு நேர், 1 அல்லது 0, அல்லது , சரியா தப்பா! என்று சொல்லிவிட்டால் முடிந்துவிடும். ஒரு சிலர், இதிலிருந்து கிளைக்கதையைத் துவக்கலாம். சிரமம் வேண்டாம், நானே துவக்குகிறேன்.
பயனர் நீங்கள் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொண்டாரெனில்?

ஆம். இந்தவகையான சிக்கலும் இதில் உள்ளது. அது ஒவ்வொருவரது கண்ணோட்டத்திலேயே உள்ளது. இவ்வாறு நிகழுமிடத்து பயனர் வெளிப்படையாகத் தன் நிலைப்பாட்டைக் கூறலாம். இவ்வாறு கூறுவோரிடமோ பேச்சுப்பக்கச் செய்திப் பெட்டி மூலமோ (என்னையோ என்னால் தட்டச்சப்படும் எழுத்துகளையோ யாரும் கிண்டலோ கேலியோ எள்ளலோ நகையாடலோ செய்யக்கூடாது! என் எழுத்துகள் எல்லாமும் மிகவும் கவனத்துடன் (seriousness) எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவை நகைச்சுவையூட்டும் எண்ணத்தில் எடுத்துக்கொள்ளப்படக்கூடாது! மீறினால் மதிப்புறு நற்பண்பு எனும் விக்கிக் கொள்கையின்படி நீங்கள் தடைசெய்யப்படலாம், உங்கள் பங்களிப்பு சில மணிநேரமோ சில நாட்களோ தடைபடலாம். உங்களைப்பற்றிய முடிவுறா விவாதஇழை (Discussion thread) ஒன்று ஆலமரத்தடியில் தொடரப்பட்டு பலரால் விமர்சிக்கப்படலாம். எனவே, எனது எழுத்துகளைப் படிக்குமுன் சற்று கவனமாக இருக்கவும்!) என்பது போன்ற அறிவிப்புப் பலகைகளை இதனை விரும்புபவர் பேச்சுப் பக்கத்தில் பெரியதாக வைத்துக்கொள்ளலாம். (இதில் "என்னை" என்பது அவரவர் விருப்பத்திற்குட்பட்டது.)

இனி இதுகுறித்து எதுவும் கூற நான் விரும்பவில்லை. இதற்கெல்லாம் இவ்வளவு பெரிய உரையாடல் தேவையா என்பதை நோக்குங்கால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 13:12, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். இந்த உரையாடலின் தொடக்கப் புள்ளியில் கோபி சம்பந்தப்படுவதால் இதனைக் குறிப்பிட வேண்டியதாகிறது. சோடாபாட்டில் சிரிப்பாக இருக்கிறது என எழுதியது எனக்கு என்னைத் தனிப்படத் தாக்கியதுபோல இருக்கவில்லை. சோடாபாட்டில் போன்றே நானும் கடந்தகாலங்களில் உரையாடியிருக்கிறேன் என்பதாலும் அது பிரச்சினையானதாக எனக்குத் தோன்றாதிருக்கலாம். ஆனால் அது பிரச்சினைக்குரியதாக இருப்பின் இந்த உரையாடலுக்கப்பால் மீண்டுமொரு உரையாடல் ஏற்படாத ஒரு முடிவு கிடைத்தால் மகிழ்ச்சி. நிற்க.

தமிழ் விக்கிப்பீடியாவைத் தமிழ் மொழியின் ஒரு கலைக்களஞ்சியம் என அணுகினால் செல்லவேண்டிய தூரம் அதிகம் என்பது என் கருத்து. வளர்ச்சியடைந்த நாடுகளின் மொழிகளின் விக்கிப்பீடியாக்களின் தேவையிலிருந்து தமிழ்மொழிச் சூழலிலுள்ள தேவைகள் முற்றிலும் மாறுபட்டவை. அவ்வகையில் எது கலைக்களஞ்சியம், எது பயனுள்ள உள்ளடக்கம் போன்றவற்றில் சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை உடனடியாக இப்பொழுது இங்கே உரையாடுவது பொருத்தமற்றது. அமைதியான குழப்பமற்ற சூழலை விடவும் கலைக்களஞ்சியம் முக்கியமானது. பின்னர் உரையாடுகிறேன். நன்றி. கோபி 14:39, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கருத்துக்களுக்கு நன்றி, கலை, சூரியா. எனக்கென்னவோ இப்போது நிலவும் சில விசயங்களை (அதாவது கோபி-சோடாபாட்டில் உரையாடலையும் தாண்டி) வைத்து இந்தக் கொள்கை வேண்டுமா வேண்டாமா என முடிவுக்கு வருவதாகத் தோன்றுகிறது. நான் மேலே சொன்னது போல இப்போது கொள்கைப் பக்கத்தை முன்மொழிய வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். வேறு சூழலில் பெரும்பாலான பயனர்களுக்கு ஏற்பிருந்தால் பார்க்கலாம். அதுவரை என் தனிக்கருத்தைச் சொல்லி உங்களுக்குச் சலிப்பையும் அயர்ச்சியையும் உண்டாக்க விரும்பவில்லை. விரும்புபவர்கள் எந்தவொரு கருத்து வேறுபாடுள்ள உரையாடலிலும் மற்றவர் கருத்தை எள்ளி நகைத்துக் கொள்ளட்டும். என்னால் ஆங்கில விக்கியிலும் அவ்வாறு இருக்க முடியவில்லை, அதனால் நான் அதுபோன்ற விவாதங்களில் இருந்து விலகிக் கொள்கிறேன். -- சுந்தர் \பேச்சு 15:13, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
சூர்யா,
  • நீங்கள் சுட்டிய பயனரின் பேச்சுப் பக்கத்தில் இட்ட "கொல விழும்" என்னும் சொல்லாட்சி இலேசான பொருளில் வேடிக்கையாகக் கூறப்பட்டது என்பதை அறியாதவன் அல்லன், ஆனால் அது சீரியதாகப் போய் சிக்கலில் சேரும்பொழுது தெரியும் அது உகந்ததா அல்லதா என்று.
  • நீங்கள் கூறுகின்றீர்கள், "அதைவிடுத்து, நீங்கள் இப்படிச் செய்யலாம், நீங்கள் இப்படி எடுத்துக் கொள்ளலாம், நீங்கள் இதைச் செய்யலாம், இது இப்படி இருந்திருக்கலாம், இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமே! நாம் இப்படிச் செய்திருந்தாலென்ன? நாம் ஏன் இதனை முயலக்கூடாது? நீங்கள் செய்வது தவறு! என்பன போன்ற சப்பைக்கட்டுகள் (பல மெகா பைட் அளவில் இவை த.வி.-யில் குவிந்துள்ளன) பயனருக்கு சில வேளைகளில் எரிச்சலூட்டலாம். (எனக்கும் ஊட்டியிருக்கிறது) பங்களிப்பாளர் ஒருவர் கூறியது போல, நேருக்கு நேர், 1 அல்லது 0, அல்லது , சரியா தப்பா! என்று சொல்லிவிட்டால் முடிந்துவிடும்." நீங்கள் இங்கே சொல்லியுள்ளதை "இப்படிச்செய்யலாம், அப்படிச் செய்யலாம்" வகையில் நீங்கள்கூறுவதாக எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் கூற்றின் முரண்பாடு தெரிகின்றதா? அது "சப்பைக்கட்டு" அன்று, "வளர்முகமான" கருத்தாடல் பண்பு. நீங்கள் சொல்லும் "எரிச்சலூட்டலாம்" (எனக்கு ஊட்டியிருக்கின்றது) என்கிறீர்களே, அது போல கருத்துகளை முறையாக எதிர்கொள்ளாது மற்றவர்களைக் பார்த்து நீங்களோ இன்னொரு பயனரோ கூறுவது கண்டு எனக்கோ இன்னொரு பயனருக்கோ "எரிச்சல்" ஊட்டக்கூடாதா (இப்படி "எரிச்சல்" ஊட்டுகின்றது என்று கூறுவதே எத்தனை பண்பற்ற கூற்று தெரியுமா?! யாரைப் பார்த்தும் நீங்கள் கூறுவது "எனக்கு எரிச்சல் ஊட்டுகின்றது" என்று இங்கே கூறினால் அது தகாத கூற்று (ஓ தகாத கூற்றுக்கு அகராதி உள்ளதா? அதை நீங்கள் தான் உருவாக்க வேண்டுமோ? என்றெல்லா பேசப் புகுந்தால் விளைவது நச்சுச் சூழல்). பண்பான உரையாடல், வளர்முகமான அணுகுமுறை என்பது எல்லா நிறுவனங்களுக்குள்ளும் இருக்கும்/இருக்கவேண்டிய பொதுப்பண்பு. விக்கிப்பீடியாவில் நற்பழக்கவழக்கங்கள் உள்ளன. --செல்வா 15:46, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மதிப்புறு நற்பண்பு தொடர்பான கொள்கை Freedom of expression தொடர்பான மட்டுறுத்தலாகப் பார்க்கப்படலாம். அகவயமான சிக்கலும் கூட. கோபிக்கு சோடாபாட்டில் தந்த மறுமொழி எனக்கு நையாண்டியாகத் தோன்றவில்லை. ஆனால், ஒரு சிலரது கருத்துகள் வேறு சில இடங்களில் புண்படுத்துவதாகத் தோன்றியுள்ளது. நானே கூட முன்பு சில இடங்களில் இப்படிச் செயல்பட்டிருக்கலாம். அதற்கு வருந்துகிறேன். விக்கி போன்ற திட்டங்களில் பங்களிக்கப் பங்களிக்கவும், தனிப்பட்ட அனுபவங்களின் காரணமாகவும் ஒரு பயனரின் முதிர்ச்சி நிலை மாறலாம். சுந்தரின் முன்மொழிவை நான் பொதுவான ஒரு வழிகாட்டாகவே பார்த்தேன். அதனாலேயே தற்போது உள்ள பிரச்சினையையும் தாண்டி பொதுப்பட என் கருத்துகளைத் தெரிவித்தேன். இன்னும் கொள்கை முன்மொழிவே முறைப்படி வைக்காத நிலையில், இதனைப் பயனர்களைத் தடை செய்யக்கூடும் என்று எண்ணுவது தவறான புரிதல். இது கொள்கை ஆனால் கூட , ஒவ்வொரு பயனரும் தன்னளவில் ஏற்றுக் கொண்டாலே ஒழிய கடைப்பிடிக்கப்படுவதற்கான உத்திரவாதம் இல்லை. தற்போது இந்தச் சூழலை ஏற்றுக் கொண்டு மற்ற பணிகளைக் கவனிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.. எனவே, இந்தக் கொள்கை முன்மொழிவை நான் இப்போது வலியுறுத்தப் போவது இல்லை.

//அவரது கட்டுரைகளில் தொடர்ந்து தவறு கண்டு பிடிப்பதும், புதிய கொள்கைகளை உருவாக்குவதன் அவசியம்பற்றி அப்போதே பேசிக் கொண்டிருப்பதும், அவரிடம் கேள்விமேல் கேள்வியாக கேட்பதும் எந்த வகையில் நட்பான சூழலைப் பேணுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை. //

@கலை, விக்கிப்பீடியர்களின் ஒற்றுமையும் புதுப் பயனர்களுக்கான ஊக்கமும் குலையக்கூடாது என்பதாலும் மற்ற பயனர்கள் தமிழ் விக்கியின் அண்மைய மாற்றங்களைக் கவனித்துத் தேவையான பயனர்களுக்கு சிறப்பா உதவி அளித்து வந்தமையாலும், சென்ற ஆண்டு தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த நிகழ்வுகளாலும் விக்கிப் பணியில் போதிய கவனம் செலுத்த இயலவில்லை. இப்போது சுட்டிக்காட்டப்படும் தவறுகளை முன்பு ஏன் சுட்டிக்காட்டவிலை என்பதற்கு என்னுடைய நேர்மையான மறுமொழி இதுவே.

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு இடையே நட்புறவும் ஒற்றுமையும் பேணப்படுவது எந்த அளவு முக்கியமோ அதை விட முக்கியம் ஒரு தமிழ் விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மையும் தரமும் காக்கப்படுவது. முன்னதைக் காரணம் காட்டி பின்னதை விட்டுக் கொடுக்க முடியாது. தமிழ் விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம். சமூ உறவாடல் தளம் அன்று. ஒவ்வொரு கட்டுரையையும் தகுந்த ஆதரங்களுடன் சரியாக எழுவதும், எழும் கேள்விகளை முறையாக எதிர்கொள்வதும் அடிப்படைத் தேவை. இப்போது ஏன் சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று கேட்டால், இப்போது இல்லாவிட்டால் எப்போது சுட்டிக்காட்டுவது? இன்னும் ஆறு மாதம் கழித்துச் சுட்டிக்காட்டினாலும் முன்பே ஏன் சுட்டிக் காட்டவில்லை என்ற கேள்வியே வரும். தவிர, எப்போதும் தவறுகளைச் சுட்டிக் காட்டித் தேவையான மாற்றங்களைச் செய்யலாம் என்பது விக்கிக் கொள்கைக்கு உடன்பட்டதே. தமிழ் விக்கிப்பீடியா பிழையற்றதாக இருக்கிறதா என்பதே வாசகருக்கு முக்கியமே ஒழிய பயனர்கள் ஒருவருக்கு ஒருவர் நட்புறவாக இருந்தார்களாக என்பது இல்லை. விக்கிப்பீடியாவில் கடுமையான எதிர் கருத்தைக் கொண்டிருந்தாலும் விக்கிக்கு வெளியே நட்புறவு பேணும் எத்தனையோ பேரை அறிவேன். ஒரு குறிப்பிட்ட விக்கிபீடியா பக்கத்தில் கடுமையாக முரண்பட்டு இன்னொரு பக்கத்தில் அதே பயனரின் இன்னொரு கருத்துக்கு உடன்படவும் முடியும். . குறிப்பிட்ட பயனருக்கு இத்தகைய முதிர்ச்சி இல்லாவிட்டால் மற்றவர்கள் பொறுப்பாக மாட்டர்கள்.

குறிப்பிட்ட ஒரு பயனரின் கட்டுரைகளை மட்டும் குறை காண வேண்டும் என்ற நோக்கு இல்லை. சனவரி 1, 2012 முதலே பல்வேறு கட்டுரைகளையும் உரை திருத்தி உள்ளேன். இவ்வாறு உரை திருத்துவதற்கு ஏதேனும் ஒரு கட்டுரை வசதியைப் பயன்படுத்துகிறேன். குறிப்பிட்ட பயனர் எழுதிய 9000 கட்டுரைகள் என்பது தமிழ் விக்கிப்பீடியாவின் மொத்தக்கட்டுரைகளில் ஐந்தில் ஒரு பங்கு (எண்ணிக்கை அளவில்). எனவே, இக்கட்டுரைகளே ஏதேனும் ஒரு கட்டுரையில் அதிகமாகச் சிக்குகின்றன. அவற்றை உரை திருத்த முயலும் போது காணும் பிரச்சினைகளையே முன்வைக்கிறேன். குறிப்பிட்ட ஒருவர் எழுதிய கட்டுரைகள் என்பதற்காக ஐந்தில் ஒரு பங்கு கட்டுரைகளை எப்படியேனும் இருந்து விட்டுப் போக அனுமதிக்க முடியாது.

//அவரவர் தனக்கு கிடைக்கும் நேரத்தில் வேறு விக்கிப் பங்களிப்புகளைச் செய்தாலே தமிழ் விக்கி தானாக வளர்ச்சியடையும். அப்படியில்லாமல் இந்த உரையாடல்களே விக்கியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்//

உரை திருத்தம், தகவல் சரி பார்ப்பு, கட்டுரைகள் ஒழுங்கமைப்பு என்பதும் விக்கிப்பணி தான். பிழைகள் மண்டிகிடக்கிற 10000 பக்கங்களை உடைய கலைக்களஞ்சியத்தை விலை கொடுத்து வாங்குவீர்களா இல்லை குறைந்த அளவு பிழை உள்ள 1000 பக்க கலைக்களஞ்சியத்தை வாங்க முனைவீர்களா? தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி என்பது எண்ணிக்கையில் மட்டும் இல்லை. இயன்ற அளவு தரம் பேணுவதும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியே--இரவி 17:05, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியில் நட்புச்சூழல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது என்று இங்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால்தான் அண்மையில் நடந்த விடயங்களைக் கூறி, உண்மையிலேயே அப்படித்தான் உள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தேன். நான் எழுதியதைத் தவறாகப் புரிந்துகொண்டு அதற்கு இத்தனை விளக்கம் தந்திருக்கத் தேவையில்லை. அத்தனை விளக்கமும் தேவையே இல்லாமல் உள்ளது. கலைக்களஞ்சியத்தின் தரத்தை விட நட்புச்சூழல் முக்கியம் என்று நான் எங்கேயும், எப்போதும் கூறவில்லை. அப்படியிருக்க எனக்கேன் அத்தனை விளக்கமும். //உரை திருத்தம், தகவல் சரி பார்ப்பு, கட்டுரைகள் ஒழுங்கமைப்பு என்பதும் விக்கிப்பணி தான்.// இது எனக்கும் மிக நன்றாகவே தெரியும் (நான் செய்யாவிட்டாலும் கூட). மேலும், தரமற்றதாயினும் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்று நான் எங்கேயும் கூறவில்லை. அப்படியிருக்க நான் அப்படிக் கூறியதுபோன்று, எனக்கு விளக்கங்கள் எல்லாம் தரப்பட்டு, என்னிடம் இதை வாங்குவீர்களா, அதை வாங்குவீர்களா என்று கேள்வி கேட்கப்படுகின்றது. இப்படியான விவாதங்கள் தேவைதானா? தேவையில்லாமல் (அதாவது என்னைப் பொறுத்த அளவில்) இவ்வகையான உரையாடல்கள் நீண்டு கொண்டே செல்வதும் விக்கிப்பணிதான் என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு. இனியும் இந்த உரையாடலில் தொடர்ந்து நீட்டிப்பதில் எனக்கு விருப்பமில்லை. என்னால் தொடர்ந்து விக்கிப்பணிகளில் கவனம் செலுத்த நேரமும், சூழலும் இல்லாமல் இருக்கின்றதே என்ற பிரச்சனையில் இருக்கும்போது, இந்த உரையாடல் தேவையற்றதாகவே இருக்கின்றது. எனவே இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். --கலை 22:21, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கலை, நீங்கள் தெரிவித்த அதே கருத்தை வேறு பலரும் வெவ்வேறு விதமாக வெவ்வேறு இடங்களில் கேட்டிருந்தார்கள். அனைவருக்கும் பொதுவாகவே தெரிவித்து இருந்தேன். தங்களை நோக்கி விவாதம் செய்யும் செய்யும் தொனியில் அவை இருந்திருந்தால், அருள் கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும். நன்றி--இரவி 22:26, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

விக்கி உறவாடலில் மதிப்புறு நற்பண்பு-2[தொகு]

சுந்தர் எழுப்பிய இது மிகவும் முக்கியமான ஒன்று (விக்கிக் குழுமத்தின் அடிப்படை) என்பதால் இது பற்றிக் கூற விரும்புகின்றேன். அதிகம் பேசினால் நேரம் வீணாகுமே என்று நினைத்தாலும், சில சொல்ல வேண்டியது கடமை ஆகின்றது. அருள்கூர்ந்து நான் கூறும் சில தன்முகக் கூற்றுகளுக்குப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்,
இவை என் தனிப்பட்ட கருத்துகள்தாம். சோடாபாட்டில் மிகச்சிறந்த பங்களிப்பாளர். நானறிய அண்மையில் வந்தவர்கள் யாவரைக் காட்டிலும் அவரே அதிகம் பங்களித்துள்ளார் (இது என் தனிப்பட்ட கணிப்பு, யாரையும் புண்படுத்தும் நோக்கில் கூறப்பட்டதல்ல; பொதுவாக விக்கியில் பங்களிப்பாளர்களை இப்படி ஒப்பிட்டுப் பேசுவதும் நல்ல போக்கு அல்ல என்பதை அறிந்தும் இதனைக் கூறுகின்றேன்). துப்புரவுப் பணியிலும் அவரே முன் நிற்பவர். கேட்டவர்களுக்கெல்லாம் உடன் உதவும் பாங்கினர். வியப்பூட்டும் உழைப்பு! எப்படி அவருக்கு இவ்வளவு நேரம் கிட்டுகின்றது என்பது எனக்கு இன்னொரு வியப்பு :) அப்படியே ஒருவருக்கு நேரம் இருந்தாலும், இப்படி உழைப்பைக் கொடையாகத் தருவது மிகவும் போற்றத்தக்கது அல்லவா? நான் அவரை நெஞ்சாரப் போற்றுகின்றேன், ஆனால் ஒன்றே ஒன்றைத்தான் அவர் சற்று வேறாகப் புரிந்துகொண்டு இயங்குகின்றார் என்று எனக்குத் தோன்றுகின்றது. விக்கியின் வளர்ச்சிக்கு, அறிவாக்க வளர்ச்சிக்கு, தகுந்த பண்பான உரையாடல் மிக முக்கியம். நடுநிலைமை, அறிவை அடிப்படையாக வைத்தும், அறத்தோடும் கருத்தை முன்னிறுத்திப் பேசுதல் ஆகியவை முக்கியம் என்பதை அவர் இன்னும் போற்றி நடந்தால் நன்றாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் (பல காலும் இருக்கவே செய்யும், அது மிகவும் நல்லதும் கூட, அடிப்படையும் கூட), ஆனால் அவற்றை முறைப்படி பாங்குடன் (நட்புறவான முறையில்) முன் வைத்து கருத்தாடி, வளர்முகமாகப் பணியைத் தொடர வேண்டும். "நீ-நான்" என்று பேசுவதும், பயனர்களை இளக்காரமாகப் பேசுவதும், தனிப்பட இழித்தும் தாக்கியும் பேசுவதும், கட்டாயம் சுந்தர் இங்கு கூறும் "விக்கி உறவாடலில் மதிப்புறு நற்பண்பை" வளர்க்காது. சூன் 25, 2011 இல் சோடாபாட்டில் என்னிடம் நடந்து கொண்டதும்[1], அண்மையில் பேச்சு:நிக்கோலசு கோப்பர்னிக்கசு பக்கத்தில் நடந்து கொண்டதும் தக்க எடுத்துக்காட்டுகள். குறிப்பிட்டுக் கூற வேண்டும் எனில் கூறுகின்றேன், ஆனால் அதில் நீங்கள் எடுத்தாண்ட குரல், தனிப்பட என்னைத் தாக்கிக் கூறிய சொற்கள் "incivil". ஆனால் இதையெல்லாம் அலசி நேரம் வீணணக்குவதைவிட, இன்னும் சற்று நல்லுணர்வோடு உரையாடுவோமே என்று கொண்டால் நல்லது. நான் 2006 இல் இருந்து தமிழ் விக்கியில் கண்ட சிறப்பே வியக்கத்தக்க நல்லுறவாட்டம். கருத்து வேறுபாடுகள் இருந்த பொழுதும், பண்புடனேயே உறவாடி, கருத்தை முன் வைத்து, அறமான முறையிலுமே உறவாடினோம். ஒருமுறை கூட நான் w:en:WP:CIV,w:en:WP:NPA முதலானவற்றைச் சுட்டிக்காட்டிப் பேசத் தேவை இருந்ததில்லை. 2003 இல் தொடங்கி இந்த 2012-இல்தான் ஏறத்தாழ முதன்முதலாகச் சுட்டிப் பேசுகின்றோம் என்றால் அதுவே ஒரு சிறு வரலாற்று நற்செய்தி. விக்கியில் நான் பங்களிக்கத் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவு பெற்ற பொழுது இந்த நல்லுரையாடல் பண்பைத்தான் நினைந்து போற்றினேன். வரும் ஆண்டுகளிலும் சிறப்பாக ஆக்கங்கள் செய்வோம், கூட்டாக! --செல்வா 04:04, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கருத்துக்கு நன்றி செல்வா. -- சுந்தர் \பேச்சு 07:48, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அலகு மாற்ற வார்ப்புரு[தொகு]

அலகு மாற்ற வார்ப்புரு மீட்டரில் இருந்து அடிக்கு மாற்றியபோது தவறான பெறுமானங்களை தருகிறது.

பார்க்க: 368.03 m (1,207.45 அடி)

திருத்தி உதவவும்.--சஞ்சீவி சிவகுமார் 06:39, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மூன்று இலக்கங்களுக்கு மேல் அடியின் மதிப்பு வந்தல், இப்படி சுருங்கி (1,450 என்பது 1.45) வருகிறது. மேலும் ஆராய்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:17, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நன்றி சோடாபாட்டில். ஆங்கில விக்கியில் இந்த வழு இல்லை.--சஞ்சீவி சிவகுமார் 10:46, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
வழுவைக் களைய முடியவில்லை சஞ்சீவி, 2007க்குப் பின் ஆங்கில விக்கியின் convert வார்ப்புரு முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது போலிருக்கிறது. அதை அப்படியே மீண்டும் இறக்குமதி செய்ய வேண்டுமென நினைக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஜனவரி / சனவரி மற்றும் பிற மாதங்கள்[தொகு]

நான் Featured Feeds உருவாக்கி வருகிறேன். அதற்கு {{ CURRENT MONTH }} போன்ற மீடியாவிக்கி variables பயன்படுத்த வேண்டும்.அதன் value தற்பொழுது சனவரி என்றுள்ளது. ஆனால் தெரியுமா உங்களுக்கு பக்க உரலிகள் (உதா) ஜனவரி என இருக்கின்றன. Can we have consistent naming practices which will make this easy? ஸ்ரீகாந்த் 06:45, 27 சனவரி 2012 (UTC) PS: Its not about grantha, its about following uniform standards which will help machine reading, its also not about content pages, this affects only URL patterns, templates etc.[பதிலளி]

தமிழ் விக்கியில் உள்ள மீடியாவிக்கி மாறிலிகள் அனைத்தும் கிரந்தமற்றவையாக உள்ளன. அவற்றைப் பொதுவாக எடுத்துக் கொண்டு, பிற வடிவங்களுக்கு வழிமாற்று கொடுத்துவிடலாம். இனி உருவாகும் உ.தெ. பக்கங்களை கவனமாக அவ்வாறே செய்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:58, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கி ஊடகப்போட்டியில் 10,000 ஊடகங்கள்[தொகு]

ஊடகப்போட்டியில் 10,000 வது ஊடகம்

Madurai Mariyamman Teppakulam

--எஸ்ஸார் 14:15, 27 சனவரி 2012 (UTC)

வாழ்த்துகள்!!

--மணியன் 15:21, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி. இதற்காக உழைத்த சோடாபாட்டில் முதலான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் படங்களைப் பதிவேற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். -- சுந்தர் \பேச்சு 15:25, 27 சனவரி 2012 (UTC)+1--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:02, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. (1) எங்கே இந்த ஊடகக்கோப்புகளைப் பார்க்கலாம்? (2) ஒவ்வொரு வகையிலும் எவ்வளவும் கோப்புகள் உள்ளன (ஓளிப்படம்/நிழற்படம், நிகழ்படம், அசைபடம், ஒலிக்கோப்பு, வரைபடம் முதலானவை)? தற்பொழுதைய நிலவரம் என்ன என்று பகிர்ந்தால் நல்லது. ஏற்கனவே மிக அண்மையில் காமன்சில் இட்ட கோப்புகள் இக் கணக்கில் வருமா, வராதா?--செல்வா 15:53, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிகவும் மகிழ வைக்கும் செய்தி. எப்போது 10000 வரும் அடிக்கடி அந்தப் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தே :) இத்திட்டம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு அருமையான வளத்தைச் சேர்ப்பதுடன், பரப்புரையிலும் பயன்பட்டிருக்கிறது. மற்ற விக்கிப்பீடியர்கள் ஒரு எடுத்துக்காட்டாகப் பார்க்கக்கூடிய திட்டம். இத்திட்டத்தை முன்மொழிந்து சிறப்பாக நடத்தி வரும் அனைத்துப் பயனர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி. குறிப்பாக, ஆயிரக்கணக்கில் ஒலிக்கோப்புகளை ஏற்றியுள்ள booradleypயின் பணி மெச்சத்தக்கது. செல்வா, பதிவேற்றியுள்ள படங்களை http://commons.wikimedia.org/wiki/Category:TamilWiki_Media_Contest பக்கத்தில் காணலாம். http://commons.wikimedia.org/w/index.php?title=Special:UploadWizard&campaign=twmc பயன்படுத்தி பதிவேற்றிய படங்கள் இக்கணக்கின் கீழ் வரும்--இரவி 17:16, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
போட்டிக்கான சிறப்பு இடைமுகம்(வழக்கமான காமன்ஸ் கேட்கும் கேள்விகளில் சிலவற்றை மட்டுமே கேட்கும்) வழியாக மட்டுமல்லாமல், பிற வழிகளில் தறவேற்றம் செய்து பகுப்பு சேர்த்தால் கூட அப்பகுப்பில் வரும். இப்போட்டிக்கு எளிதாக பல கோப்புகளை பதிவேற்ற வேண்டும் என ஒரு பயனர் தானே ஒரு கருவியை நிரலாக்கியுள்ளார். இது முற்றிலும் எதிபாராமல் நிகழ்ந்த மற்றொரு நல்ல காரியம் :) ஸ்ரீகாந்த் 03:27, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

துடுப்பாட்டக்காரர்கள் பற்றிய கட்டுரைகளின் நம்பகத்தன்மை[தொகு]

சட்டர்டே நைட் எனும் கட்டுரையை இன்று அண்மைய மாற்றங்களில் பார்த்தேன். புன்னியாமீன் இரு தடவைகளும் கனக்ஸ் இரு தடவைகளும் அக்கட்டுரையைத் தொகுத்துள்ளனர். அவரவர் ஆர்வம் அவரவர்க்கானது; மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

  1. சட்டர்டே நைட் ஒரேயொரு முதற்தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளதாக ஆ.வி.யில் உள்ளது. த.வி.யில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் என உள்ளது. இது முதலாவது தகவற் பிழை.
  2. சட்டர்டே நைட் ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியதாக த.வி.யில் உள்ளது. இதற்கான ஆதாரம் இல்லை. இது இரண்டாவது தகவற் பிழை.
  3. சட்டர்டே நைட் எனப் பெயரிட்டுக் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்பு சட்டர்டே நைட் பற்றியதல்ல. (தொடுப்பு பார்க்கப்பட்டிருந்தால் இப்பிழை ஏற்பட வாய்ப்புக்கள் குறைவே. இவ்வகையில் கடைசியாகப் பார்க்கப்பட்டதாக உள்ள பல்லாயிரக்கணக்கான இணைப்புக்கள் பார்க்கப்பட்டவைதானா என்பதுவும் கேள்விக்குரியதாகிறது)
  4. சட்டர்டே நைட் இனது முக்கியத்துவம் அவர் றக்பி தேர்வுப் போட்டிகளில் அவரது நாட்டு அணி சார்பில் விளையாடியமையே ஆகும். அது தொடர்பில் த.வி.யில் எந்தக் குறிப்பும் இல்லை. அவ்வகையில் கட்டுரை முழுமையானதுமல்ல.

இவ்வளவும் மூன்றே வரிக் கட்டுரையிலும் ஓர் இணைப்பிலும் உள்ளவை. இப்படிப் பல்லாயிரம் கட்டுரைகள் உள்ளன. இன்னமும் பல்லாயிரம் கட்டுரைகள் எழுதப்பட உள்ளதாகவும் தெரிகிறது. வாழ்க தமிழ் விக்கிப்பீடியா. அவரவர் ஆர்வம் அவரவர்க்கானது; மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

நன்றி. கோபி 15:44, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வாருங்கள் கோபி! :) --செல்வா 15:57, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
கட்டுரைகளின் நம்பகத்தன்மை எந்த ஒரு விக்கியிலும் எப்பொழுதும்(ஆங்கில விக்கி உட்பட) வாதிக்ககூடிய ஒன்று. Its by design. ஒரு கட்டுரையையை முதல் முறையே அனைத்து தகவல் சரியாக இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டமும் இல்லை. பிழையைக் கண்டால் en:WP:SOFIXIT / அதனை சரியான இடத்தில் சுட்டிக்காட்டுங்கள், அதற்கு தான் "தொகு" பொத்தான் / பேச்சுப் பக்கம் உள்ளது.(திருத்தம்,வாதத்தை விட சிறிய/எளியதாயிருப்பின், பேசாமல் திருத்துவதே எளிது). நான் நீங்கள் கூறிய சிலவற்றை திருத்தினேன். அதிலும் பிழை இருந்தது, மற்றோரு பயனர் திருத்தினார்.உங்கள் மூன்று வரி கட்டுரைகளில் கூட பிழைக்கள் உள்ளன. அவற்றில் சில, ஆறு வருடங்களுக்குப் பின் இன்று திருத்தப்பட்டுள்ளன. மிச்சமுள்ளவை பார்ப்பவரால் அவரவருக்கு தொணும் பொழுது திருத்தபடக்கூடும். இதுவே விக்கியின் இயல்பு. நான் முன்பே 'தரம்' பற்றி பேசுவதாகக் கூறினேன், இப்பொழுது சிலவற்றைக் கூறுகிறேன்.
என் கணிப்பில் தமிழ் விக்கியின் தரம் அகல பாதாளத்தில் உள்ளது. கருத்துப் பிழைக்கெல்லாம் பிறகு வருவோம். எவ்வளவு கட்டுரைகளில் உச்சாத்துணைகள் உள்ளன, எவ்வளவில் உள் இணைப்புகள் இருக்கின்றன, வெளி இணைப்புக்கள் spammy உரலிகள் உள்ள கட்டுரைகள் எவ்வளவு,இணைப்பில்லா அனாதைக் கட்டுரைகள் எவ்வளவு? 3 வரி எழுதினால் தரம் குறைவு, 20 வரி இருந்தால் தரம் உயர்வு என்ற எண்ணம் இங்கிருப்பது போல் எனக்கு தெரிகிறது(எல்லாமே மொசம் தான்).தவிர இங்கு அனைவருமே(நான் உட்பட!) 3 வரிக் கட்டுரைகள் எழுதியுள்ளோம்,பிறகு ஏன் இதை 3 வரி என அடுத்தவர் கட்டுரையில் மட்டும் சுட்டுகிறோம்.பிறருக்கு சொல்லும் அறிவுரையை முதலில் நாம் பின்பற்ற வேண்டும். பலவற்றிற்கு கொள்கை இருக்கின்றன, ஆனால் பயனர்கள் அருள்கூர்ந்து செயல்பட்டால்(கட்டுரையைத் துவக்கும் நபர் மட்டுமல்ல, அனைவரும்) இம்மாதிரியான தரம் இருக்காது. பிரச்சனை என்னவென்றால், ஆங்கில விக்கியில் பராமரிப்பு வேலைகளை செய்ய ஒரு படையே இருக்கிறது(நானும் ஒருவன், நான் 10கும் குறைந்த கட்டுரைகளை தொடங்கியிருக்ககூடும்). இங்கோ, நாம் பிறர் எழுதும் கட்டுரையையை கவனிப்பதே இல்லை. எதோ ஒரு மனக்கசப்பிற்கு பிறகு தானே துடுப்பாட்டம் கட்டுரைகள் பற்றி இங்கு உரையாடல் நடக்கிறது.உள்ளடக்கம் சார்ந்த புதிய கொள்கைகளை கொண்டு வருவது மிக எளிது, ஒரு பக்கமும், வாக்கெடுப்பபும் நடத்தினால் போதும், அதை நடைமுறைப் படுத்த நம்மிடையே பலம் உள்ளதா? விமர்சனங்கள் தேவை,உரையாடல்கள் தேவை, ஆனால் அதைத் தாண்டி, அவ்வாறு செய்பவர்கள், விமர்சனங்களுக்கு முன் செய்ததை விட கூடுதலாக வேலை செய்யவேண்டும் / முன்மாதரியாக இருக்க வேண்டும் என விக்கிப்பீடியா:இணைய எழுத்துரு விமர்சனங்கள்(கதை வேண்டுமென்றால் மின்னஞ்சல் அனுப்புங்கள்) எனக்கு கற்றுக் கொடுத்தது. ஸ்ரீகாந்த் 20:22, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மூன்றுவரி விதி என்பது ஒரு வழிகாட்டலே. தெலுங்கு, இந்தி போல் குப்பை ஒரு வரிக் கட்டுரைகளை தவிர்க்கவே அப்படிப் பரிந்துரைக்கப்பட்டது. சில வேளைகளில் ஒரு வரிச் சிக்கலான வரையறை மிகப் பெறுமதியாக அமைந்து விடும். ஆனால் தற்போது மிகவும் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது போல் உள்ளது. நம்பகத்தன்மை பற்றிய கோபியின் கருத்து நீங்கள் சுட்டியபடி பெரும்பாலான/எல்லாக் கட்டுரைகளுக்கும் பொருந்தும். அக் கட்டுரையை கோபி மேம்படுத்தலாம், அதுவே விக்கி. அதே வேளை ஒரே மாதிரிக் கட்டுரைகள் உருவாக்கப்படும் போது ஒரே மாதிரி தவறுகள் சுட்டுக்காட்டுவதும் மிகவும் தேவையான ஒன்றே. வெளியில் இருந்து பல விமர்சனங்களை நாம் பொறுமையாக விளக்கி இருக்கிறோம். எனவே இவ்வலவு பங்களித்தால் தான் உரையாடலில் கலந்து கொள்ள முடியும், இல்லாவிட்டால் முடியாது போன்று கூற முடியாது. தற்போது எல்லா உரையாடல்களும் தீவரத்தன்மையோடும் கட்சி கட்டும் மனப்பாட்டோடும் நோக்கப்படும் சூழல் உருவாக்கப்படுகிறது. --Natkeeran 20:54, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
Natkeeran, I did not mean to say there must be activity levels as a precondition for comment, rather post commenting,dont shy away, do something positive on what you are commenting. This was something exactly I was told off on WebFonts issue in India list(lazy to put archive link now) and I am hence trying to do the same. I just brought that point as analogy as to what people should do more than commenting,criticizing since the action done after that will have positive impact. ஸ்ரீகாந்த் 21:05, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]
கட்டுரை வரி எண்ணிக்கை அடிப்படையைத் தாண்டி ஒரு விக்கியின் ஒட்டுமொத்தத் தரத்தைப் பற்றிய தங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்கக் காலத்தில் இருந்தே இப்படி ஒட்டு மொத்தப் பார்வை உண்டு. இதில் இன்னும் என்னென்ன அளபுருக்களைச் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கலாம். 100 கட்டுரைகளில் 100 வெவ்வேறு வகையான பிழைகள் இருப்பது வேறு பிரச்சினை. அவற்றை ஒவ்வொன்றாகக் களையலாம். பேச்சுப் பக்கத்தில் சுட்டலாம். ஆனால், அனைத்திலும் ஒரே வகையான பிரச்சினை இருந்தால் பொதுவான இடத்தில் குறிப்பிடுவது தவறு இல்லை. இந்த வகையிலேயே துடுப்பாட்டக்காரர்கள் கட்டுரையில் இருந்த உரை திருத்தப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டேன். சோடாபாட்டிலின் தானியங்கி மூலம் அவற்றில் பல பிரச்சினைகளை சரி செய்யப்பட்டு வருகின்றன. என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை இனங்காண நானும் என்னால் இயன்ற சிறு பங்களிப்பைச் செய்தேன். எனவே, நிச்சயம் விமர்சனத்தைத் தாண்டி வளர்முகமாகச் செயற்படவும் பங்களிக்கவுமே அனைவரும் முனைகிறோம். நன்றி--இரவி 22:20, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

(edit conflicted) On a sidenote, if we / our readers really need to know what people think of the content, we could uptake Article Feedback Tool (although its not fully functionally stable yet). ஸ்ரீகாந்த் 20:59, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]


முதலில் ஒரு விளக்கம். மூன்று வரி ஒரு கட்டுரையில் இருந்தது எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஒரு மூன்று வரிகளிலேயே இத்தனை பிழைகள் உள்ளன என்பதனையே நான் சுட்டினேன்.

//உங்கள் மூன்று வரி கட்டுரைகளில் கூட பிழைக்கள் உள்ளன. அவற்றில் சில, ஆறு வருடங்களுக்குப் பின் இன்று திருத்தப்பட்டுள்ளன. //

இது நான் எதிர்பார்த்தது :) கருத்து என்ன என்பது பிரச்சினையில்லை. சொன்னவன் பிரச்சினை. கருத்துச் சொன்னதும் சோடாபாட்டில் கோபி தொடங்கிய கட்டுரைகளைத் திருத்தத் தொடங்கினார். சிறீகாந்த் அதனை முன்வைத்து உரையாடுகிறார் :) அதிலும் பிழை பிடிக்க வேண்டும் என்பதே முதன்மையாக உள்ளது. [2] பாருங்கள் :) ஒரு நாள் போட்டிகளில் ஓர் இனிங்ஸ்தான் என்பதால் அது ஒரு தகவற்பிழையாகச் சுட்டப்பட்டுள்ளது. ’’ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற’’ என்றால் ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் எனக் கொள்ளப்பட வாய்ப்புக்கள் உண்டு.

பிரச்சினை அதுவல்ல. சாயிட் அன்வர் கட்டுரை காலாவதியான தகவல்களைக் கொண்டுள்ளது. அது சோடாபாட்டிலாலும் திருத்தப்படவில்லை. இன்னும் ஆறாண்டுகள் திருத்தப்படாதிருக்கலாம். இதுதான் யதார்த்தம்.

நான் கேட்பது என்னவென்றால் ஆறு ஆண்டுகளாக இருக்கும் பிழைகளைக் கூடத் திருத்த ஆளணி இல்லாத நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை பிழைகளுடன் உருவாக்குவது சரியா?

//என் கணிப்பில் தமிழ் விக்கியின் தரம் அகல பாதாளத்தில் உள்ளது. //

இன்னுமின்னும் பாதாளத்திற்குள் தள்ள வேண்டுமா? அல்லது முன்னேற்ற வேண்டுமா? முன்னேற்றுவதாயின் தகவல்களைச் சரிபார்க்க எவ்வளவு உழைப்புத் தேவை? ஆளணி குறைவெனக் கூறப்பட்டுள்ள நிலையில் துடுப்பாட்ட வீரர்களைப் பற்றிய கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது எவ்வளவுதூரம் சரியானது?

அவரவர் ஆர்வம் அவரவர்க்கானது என்ற அளவில் பெருமளவு தகவற் பிழைகளுடன் கட்டுரைகள் உருவாக்கப்படுகையில் அவற்றைத் திருத்த ஆளணி இல்லாத நிலையில் ஒட்டுமொத்த த.வி.யும் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானா?

//ஒரு கட்டுரையையை முதல் முறையே அனைத்து தகவல் சரியாக இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டமும் இல்லை. பிழையைக் கண்டால் en:WP:SOFIXIT / அதனை சரியான இடத்தில் சுட்டிக்காட்டுங்கள், அதற்கு தான் "தொகு" பொத்தான் / பேச்சுப் பக்கம் உள்ளது.(திருத்தம்,வாதத்தை விட சிறிய/எளியதாயிருப்பின், பேசாமல் திருத்துவதே எளிது)//

பம்பரம் கட்டுரை பல உரை திருத்தங்களுக்குப் பிறகு ஒரு/ஓர் போன்ற பிழைகளுடன் குறுவட்டுக்காக இறுதிப்பட்டிருந்ததைக் கண்டேன்; திருத்தினேன். அவ்வாறு திருத்துவது பெறுமதி சேர்க்கும் (value adding) செயலென நினைக்கிறேன். ஆனால் துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது நேர விரயம் மட்டுமே.

மேலும் இத்தனை பிழைகளுடன் கட்டுரைகள் இருக்கையில் இன்னுமின்னும் அத்தகைய கட்டுரைகள் வருவது பொருத்தமும் இல்லை.

பிழைகளை விடுவோம். குறித்த துடுப்பாட்டக்காரர் பற்றிய கட்டுரைகளைப் பயன்படுத்த ஆட்கள் இருப்பர் என்றே கொள்வோம். சமகால வீரர்கள் பற்றிய கட்டுரைகள் எழுதிச் சில காலங்களிலேயே வீரர் மேலும் போட்டிகளில் ஆடியிருப்பார். ஆனால் தரவுகள் இற்றைப்படுத்தப்படுமா? இற்றைப்படுத்தாவிடின் அக்கட்டுரைகளின் பயன்பாட்டுப் பெறுமதி என்ன?

தயவுசெய்து ஆங்கில விக்கிப்பீடியா எடுத்துக்காட்டுக்களுடன் வராதீர்கள். மீடியாவிக்கி என்ற கருவிதான் ஒன்றேயொழிய விக்கிகள் முற்றிலும் வெவ்வேறானவை. ஆங்கில விக்கி வளர்ந்த வேகத்தில் த.வி. வளரவுமில்லை. அங்கு பங்களிக்கும் பயனர் போன்ற பின்னணிகளில் இங்கு பயனருமில்லை.

பல்லாயிரம் பயனர் இருந்தால் என்ன எழுதினாலும் எவரேனும் திருத்திவிட்டுப் போவார்கள். இங்கே அப்படியில்லை.

//அக் கட்டுரையை கோபி மேம்படுத்தலாம், அதுவே விக்கி.//

விக்கிப்பீடியர் சமூகப் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டுமென்றில்லை. ஆனால் ‘’மக்கள் பாணுக்குக்கூட (bread) வழியின்றி இருக்கின்றனர் என்றதுக்குக் கேக் சாப்பிடலாமே’’ என்பதான பதில் குரூரமானது.

  • தமிழில் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும் கலைக்களஞ்சியங்கள் எவையும் இல்லை.
  • தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் விரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையிலேயே உள்ளன.

அவ்வகையில் த.வி. தமிழருக்கிருக்கிற ஒரேயொரு கலைக்களஞ்சியமாகும். இக்கலைக்களஞ்சியத்தினைப் பாவிப்போரின் பின்னணியையும் பார்க்க வேண்டும். பல மாணவர் பாடசாலையிலோ நூலகங்களிலோ தான் பார்வையிடுவர். வீட்டில் கணினியோ இணையமஓ இருக்காது. அவர்கள் பார்க்கக்கூடிய ஒரெயொரு கலைக்களஞ்சியமாக த.வி.யே இருக்கும். கோபி 03:58, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இது நான் எதிர்பார்த்தது :) கருத்து என்ன என்பது பிரச்சினையில்லை. சொன்னவன் பிரச்சினை.
கோபி நான் உங்கள் பழைய கட்டுரைகளை எடுத்து நோக்கமிட்டது. நீங்கள் எவ்வாறு உங்கள் கட்டுரைகளைக் கையாண்டிருக்கிறீர்கள் என்பதை அறியவே. பிழைகள் கண்டேன் திருத்தினேன். நீங்கள் எடுத்தியம்பும் கருத்துகள் ஒட்டு மொத்த விக்கியின் கூறு ஒரு குறிப்பிட்ட ஒரு பயனரோ, துறையோ, பகுப்போ சார்ந்த சிக்கல் இல்லை என்பதைக் காட்டவே அப்பிழைகளை தொகுப்புச் சுருக்கத்துடன் செய்தேன். இவ்வாறு செய்வது “சொல்பவர் எவரெனினும், துறை எதுவெனினும் இது அனைத்து கட்டுரைகளுக்கும் உள்ளது” என்பதை எடுத்துக்காட்டவே.
சொல்ல வருவது இதுவே - இச்சிக்கல் “அனைத்து பயனர்களின் அனைத்து வகைக் கட்டுரைகளிலும் உண்டு”. ஒவ்வொன்றாக எழுதுவதைத் தடை செய்தால், அப்படியே தமிழ் விக்கியை இழுத்து மூடி விடுவது போல் தான். இப்போது நீங்கள் பரிந்துரைப்பது போல, 2006 இல் நீங்கள் எழுதிய கட்டுரைகளில் பிழை உள்ளவற்றை ஏழெட்டை அடிப்படையாகக் கொண்டு 2007 இல் கோபி எழுதுவதில் எவ்வளவு பிழைகள் உள்ளன! இவ்வாறு அவரது அனைத்துக் கட்டுரைகளிலும் எவ்வளவு இருக்குமோ! அவரை இனி எழுத வேண்டாம் என்று சொல்லுவோம், நாம் சொன்ன கட்டுரைகளை மட்டும் அவர் உருவாக்க வேண்டும் என்று யாராவது பரிந்துரை செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?. இங்கு உங்களை பெயர் சொல்லிக் காட்டுவது இது யாருக்கும் நடக்கலாம் என்பதைக் காட்டவே (இதில் ஆண்டுகளையும் பெயரையும் மாற்றி என் பெயரையும் போட்டுக் கொள்ளலாம்). இவ்வாறான இறுக்கப் பிடி “தன்னார்வத் திட்டங்களில்” என்றும் எடுபடாது. அப்படி செய்திருந்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஏற்பட்டிருக்கும் பல பல பயனர்களை இழந்திருப்போம்.
மக்கள் பாணுக்குக்கூட (bread) வழியின்றி இருக்கின்றனர் என்றதுக்குக் கேக் சாப்பிடலாமே’’ என்பதான பதில் குரூரமானது
தமிழர்களின் இந்த குற்ற உணர்வுப் போக்கு தான் எனக்குப் புரியவில்லை. பங்களிக்கும் அனைவரும் பரந்த தமிழர் சமூகத்தை தினம் நினைத்துக் கொண்டு குற்ற உணர்ச்சியுடன் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். சமூகத் தொண்டுடன் நடக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம் என்று தெரியவில்லை. குற்ற உணர்வும் சமூக அக்கறையும் பல உந்துசக்திகளில் சில மட்டுமே. வருபவர்களிடம் எல்லாம் “தமிழர் நிலை என்ன என்று அறிவீர்கள. அவர்களுக்குத் தேவையானவை என நான் சிலவற்றை முடிவு செய்துள்ளேன், அதை மட்டும் செய்யுங்கள் என்றால், தமிழ் விக்கி இறந்து தான் போகும்.” வளர்ச்ச்சியும் வேண்டும் ஆனால் அது நாங்கள் நினைத்தபடியே வேண்டும் என்றால் எப்படிக் கிடைக்கும். தமிழ் விக்கி தன்னார்வலத் திட்டம். பயனர்களின் நேர/உழைப்பு உபரியே இதை உருவாக்குகிறது. அதனை ஓரளவு ஒழுங்கு படுத்த முடியுமேயன்றி மேலிருந்து சிலர் இங்கு போ, அங்கு போ, அதைச் செய், இதைச் செய் என்று வள மேலாண்மை செய்ய இயலாது. அப்படிச் செய்ய முயன்ற விக்கிகளும் பிற தன்னார்வலத்திட்டங்களும் மூடுவிழாவைச் சந்தித்துள்ளன. அவ்வாறு செய்வதென்றால், ஊதியம் வழங்கி பங்களிப்பாளரை வேலைக்கமர்த்தி, நேர்த்தியாக செய்யும் திட்டமொன்றைச் செய்யலாம். அப்படியொரு திட்டம் பிரிட்டானிக்காவாகத் தான் இருக்கும் விக்கிப்பீடியாவாக இருக்காது.
சமகால வீரர்கள் பற்றிய கட்டுரைகள் எழுதிச் சில காலங்களிலேயே வீரர் மேலும் போட்டிகளில் ஆடியிருப்பார். ஆனால் தரவுகள் இற்றைப்படுத்தப்படுமா? இற்றைப்படுத்தாவிடின் அக்கட்டுரைகளின் பயன்பாட்டுப் பெறுமதி என்ன?
இது அனைத்து வாழும் நபர்களுக்கும், நடப்பு புள்ளிவிவரம் கொண்ட அனைத்து கட்டுரைகளுக்கும் பொருந்தும். இதற்கு தீர்வு என்ன தேதியில் இற்றைப் படுத்தப்பட்டது என்று இடுவது. நாளடைவில் இற்றை தேவைப்படும் கட்டுரைகளைத் தடுப்பதல்ல..--சோடாபாட்டில்உரையாடுக 04:28, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
  • //பம்பரம் கட்டுரை பல உரை திருத்தங்களுக்குப் பிறகு ஒரு/ஓர் போன்ற பிழைகளுடன் குறுவட்டுக்காக இறுதிப்பட்டிருந்ததைக் கண்டேன்; திருத்தினேன். அவ்வாறு திருத்துவது பெறுமதி சேர்க்கும் (value adding) செயலென நினைக்கிறேன். ஆனால் துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது நேர விரயம் மட்டுமே.//
If you feel waste of time, Someone else will edit. I feel waste of time editing any article on tawiki, which is why i try to refrain from the area.However I dont ask others to create articles without any misktakes citing 'quality'. I have a reason why there must be 10000 more articles on cricket, for the simple reason, tomorrow people on Tamil web will use துடுப்பாட்டம் instead of கிரிகெட்.That will popularise tamil terms, just as how some many other things are being popularised in tawiki.
  • //நான் கேட்பது என்னவென்றால் ஆறு ஆண்டுகளாக இருக்கும் பிழைகளைக் கூடத் திருத்த ஆளணி இல்லாத நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளை பிழைகளுடன் உருவாக்குவது சரியா?
If that article existed for 6 years without being improved and Tamil wiki continued to grow(do you agree here firstly?), I dont think tamil wiki will stop growing 6 years from now due to cricketer articles This will not be a wiki if everything is correct. No one writes with the aim of creating sloppy articles, do not extrapolate 1000 more articles will be created sloppyly. WP:AGF
  • //அதிலும் பிழை பிடிக்க வேண்டும் என்பதே முதன்மையாக உள்ளது.//
If you do, thats caring for Wikipedia quality and having discussion, if others do the same, its fault finding? Is that not called hypocracy?
  • //இன்னுமின்னும் பாதாளத்திற்குள் தள்ள வேண்டுமா? அல்லது முன்னேற்ற வேண்டுமா? முன்னேற்றுவதாயின் தகவல்களைச் சரிபார்க்க எவ்வளவு உழைப்புத் தேவை? ஆளணி குறைவெனக் கூறப்பட்டுள்ள நிலையில் துடுப்பாட்ட வீரர்களைப் பற்றிய கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது எவ்வளவுதூரம் சரியானது?//
What are the pageview stats of such pages? How would you think these articles affect quality of Tamil Wikipedia. If quality is concern, we must start from 5000-10000, remove other 35k-40k articles. I will do some analysis on article size, articles not updated since X years and come with numbers, please wait
  • //இற்றைப்படுத்தாவிடின் அக்கட்டுரைகளின் பயன்பாட்டுப் பெறுமதி என்ன?//
What is the value of Tamil Wikipedia as a whole. Does it being low stop us from working towards the goal in increasing the value?
  • //தயவுசெய்து ஆங்கில விக்கிப்பீடியா எடுத்துக்காட்டுக்களுடன் வராதீர்கள்//
People wanted me to come with it. I have never spoken on content before this, its not what am here to do as well.
  • //அவ்வகையில் த.வி. தமிழருக்கிருக்கிற ஒரேயொரு கலைக்களஞ்சியமாகும். இக்கலைக்களஞ்சியத்தினைப் பாவிப்போரின் பின்னணியையும் பார்க்க வேண்டும். பல மாணவர் பாடசாலையிலோ நூலகங்களிலோ தான் பார்வையிடுவர். வீட்டில் கணினியோ இணையமஓ இருக்காது. அவர்கள் பார்க்கக்கூடிய ஒரெயொரு கலைக்களஞ்சியமாக த.வி.யே இருக்கும்//
If the aim is to serve students, please start tamil wikiversity. This is wikipedia, bakers who know to make can only cakes,can only do cakes, they cant bake bread for the sake of students ஸ்ரீகாந்த் 06:36, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
நான் கேட்ட கேள்விக்கான பதில் நான் தொடங்கிய கட்டுரைகளில் அதே பிழைகள் உள்ளன என்பதில் தொடங்கும்போது கேள்விகளை விட ஆட்களை எதிர்கொள்வது முக்கியமாகிவிட்டது. நீ பிழை விட்டாய் மற்றோரும் விடலாம் என்பதாகிறது :) . இந்த உரையாடலில் நான் தொடங்கிய கட்டுரைகளை என்னுடன் சம்பந்தப்படுத்தியதே பொருத்தமல்ல. நிற்க.
ஒரு கட்டுரை திருத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவென்பது தெரிந்தால் தொடங்கும்போது பிழைகளைக் குறைப்பதற்கான பொறுப்புணர்வு இருக்க வேண்டும். உரையாடல் வேண்டாம் - தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருப்பேன் என்றால் பிழைகளை மற்றவர் வந்து திருத்தட்டும் என்பது தான் விக்கிப்பீடியா என்றால் வாழ்க விக்கிப்பீடியா.
பிழை இருந்தால் திருத்துவதற்கான வழிவகை வேண்டும். அல்லது பிழை இல்லாமல் தொடங்க வேண்டும். இரண்டும் முடியாது; விக்கிப்பீடியா எனும் கலைக்களஞ்சியம் இப்படித்தான் என்றால் சோடாபாட்டில் சிரித்தது போல நானும் சிரித்துக் கொள்கிறேன்.
இது விக்கிப்பீடியா என்பது தெரிகிறது :) கோட்பாடுகளை இறக்குமதி செய்வதில் எனக்கு உடன்பாடில்லை என்பதனை நான் தெரிவித்துவிட்டேன்.
தமிழ் விக்கிப்பீடியா கடந்த ஆறாண்டுகளிலும் வளர்ந்தது. அடுத்த ஆறாண்டுகளிலும் வளரும். ஒரு கலைக்களஞ்சியத்தின் வளர்ச்சி பலவிதமான உள்ளடக்கம் வந்தாலும் ஆயிரம் முக்கிய கட்டுரைகள், பத்தாயிரம் முக்கிய கட்டுரைகள் போன்றவை படிப்படியாக வளர வேண்டும். குறித்த சில விடயப்பரப்புக்களில் பெருமளவு கட்டுரைகள் வருவதல்ல பிரச்சினை. அவை பிழைகளற்று உருவாகின்றனவா என்பதே கேள்விக்குள்ளானது. அதற்கான பதில் ’’பிழை இருக்கத்தான் செய்யும்’’ என்பதானால் .. சொல்ல ஒன்றும் இல்லை :)
இந்த உரையாடலில் நான் சொல்ல வந்தவற்றைச் சொல்லி விட்டேன். ஒரே விடயங்களை வேவ்வேறு சொற்களில் கேட்பதும் வெவ்வேறு மாதிரியாகப் பதிலளிப்பதும் உருப்படியாக எப்பயனும் தராது. இதற்குமேல் இந்தத் தலைப்பில் இந்த உரையாடலைத் தொடரும் உத்தேசமில்லை. நன்றி.
ஆறாண்டுகளாகத் தமிழ் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத் தரத்தில் பெரும் குப்பைக் கூடையாகவே ‘வளர்ச்சி’யடைந்துள்ளது. ஆனால் திறந்த அணுக்கத்திலான தகவற் திரட்டு என்ற அளவில் மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தத் தகவற் திரட்டிலிருந்து உருவாகும் முழுமைப்படுத்தும் முயற்சிகளே இவ்வளர்ச்சியிலிருந்தான பயனைத் தரும்.
வணக்கம். கோபி 07:19, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், நான் கட்டுரைகளைக் கையாண்டது பற்றிச் சுருக்கமாகச் சொல்வதாயின் ’’தொடக்கிய பக்கங்களை விட நீக்கிய பக்கங்கள் அதிகம்’’.

//இவ்வாறான இறுக்கப் பிடி “தன்னார்வத் திட்டங்களில்” என்றும் எடுபடாது. அப்படி செய்திருந்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஏற்பட்டிருக்கும் பல பல பயனர்களை இழந்திருப்போம்.//

கட்டுரைகளை எழுதுவதைத் தடுக்க வேண்டும் என்று நான் கூற வரவில்லை. அதிலும் பயனர் தான் எழுதுவது விருப்பம் சார்ந்து எனக் குறிப்பிட்டபிறகு அதில் தலையிட உரிமையுமில்லை. கட்டுரைகள் எழுதுகையில் பிழைகள் வருவது இயல்பானதே.

ஆனால் இங்கே இயல்பான வளர்ச்சி இல்லை. ஆயிரம் தொடர்ச்சியான பயனர் இருக்கையில் பத்தாயிரம் துடுப்பாட்டக்காரர் பற்றிய கட்டுரைகள் எழுதப்பட்டால் திருத்தப்படும். ஆனால் இங்கே இருபத்தைந்து பயனரே உள்ளனர். இந்தக் கட்டுரைகள் திருத்தப்பட வாய்ப்புக்கள் அரிது. அவ்வாறாயின் மாற்றுத் திட்டங்கள் வேண்டும்.

நிலைப்பாடுகள் இரு துருவங்களுக்குப் போவது என்பது பொருத்தமில்லை. ’’எந்த உரையாடலும் வேண்டாம்; தொடர்ந்து எழுதுவேன்’’ என்பது ஒரு துருவம். ’’தடைசெய்வோம்’’ என்பது இன்னொரு துருவம்.

  • ஏற்கனவே இருக்கக்கூடிய பிழைகளைக் களைவது எவ்வாறு?
  • இனி பிழைகள் ஏற்படுவதைத் தடுப்பது எவ்வாறு?

கட்டுரைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் நான் அறிய விரும்புவது இவ்விரு வினாக்களுக்குமான விடைகளையே. தடுக்க வேண்டும் என்பது என் கோரிக்கையல்ல. வளமேலாண்மை செய்வது நோக்கமுமல்ல. ’’பிழையைக் கண்டால் நீ திருத்து’’ என்பதுதான் பதிலானால் சொல்வதற்கு/கேட்பதற்கு வேறொன்றுமில்லை.

ஏற்கனவேயுள்ள கட்டுரைகள் எல்லாவற்றையும் சரிபார்ப்பதாயின் அதற்கான உழைப்பு எவ்வளவு தேவைப்படும்? மாணவருக்குப் பயன்படக்கூடிய தலைப்புக்களே ஏராளம் எழுதப்படாமலும், திருத்தப்படாமலும் இருக்கையில் துடுப்பாட்டக்காரர் கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது நேர விரயம் தானே?

நாளுக்கு நாள் பிழைகள் அதிகரித்துச் செல்வது ஒரு கலைக்களஞ்சியத்துக்கு நல்லதல்ல. ஒரு கலைக்களஞ்சியம் என்றால் பரவாயில்லை. இது ஒரேயொரு கலைக்களஞ்சியம்.

//தமிழர்களின் இந்த குற்ற உணர்வுப் போக்கு தான் எனக்குப் புரியவில்லை//

நான் குற்ற உணர்வுடன் இதனைச் சொல்லவில்லை. த.வி.யினைப் பாவிப்போர் அனைவரும் அதனைத் திருத்துவ வேண்டும் என எதிர்பார்க்க முடியாது மட்டுமல்ல எதிர்பார்க்கக் கூடாது என்கிறேன். அறிவியல் களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம் போன்ற கலைக்களஞ்சியங்களை ஒவ்வொரு பாடசாலையிலும் நூலகத்திலும் வாங்கி வைப்பது பொருளாதாரச் சாத்தியமல்ல. ஆனால் முயன்றால் த.வி.யை ஓர் இணைய இணைப்பினூடாக ஒருவர் பயன்படுத்த இயலும். அவரது தேவை உள்ளடக்கமே ஒழிய பங்களிப்பு அல்ல. அப்படியான ஒருவருக்குப் பிழையான தகவல்களைக் கொடுத்து விட்டு இது விக்கி; பிழையென்றால் நீ மாற்று என்று சொல்வது குரூரமானது என்கிறேன்.

த.வி.யின் உள்ளடக்கம் கலைக்களஞ்சிய உள்ளடக்கமாக இருக்க வேண்டும் என்பதனைக் காட்டிலும் தன்னார்வத் திட்டக் கோட்பாடுகள் வெற்றி பெறவேண்டுமென்பது முக்கியமாகப் போய்விட்டதோ என ஐயுறுகிறேன்.

சமூக பொருளாதார காரணங்களால் பயன்படுத்துவோராக மட்டும் இருக்கக் கூடியோரை நிச்சயம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்கிறேன். அவர்களுக்குப் பிழையான தகவல்களைக் கொடுப்பது எதிர்காலத்தில் அவர்கள் பங்களிப்பாளராக மாறுவதனைத் தடுக்கும் என்கிறேன். பெருமளவு பிழையான கட்டுரைகளுடன் கட்டுரை எண்ணிக்கை அதிகரிப்பது பயனர் எண்ணிக்கை அதிகரிப்பதனைத் தடுக்கும் என்கிறேன்.

// பயனர்களின் நேர/உழைப்பு உபரியே இதை உருவாக்குகிறது. //

இல்லை. இங்கே பலரும் வேறு உழைப்பு/நேரத்தினை இழந்தே பங்களிக்கிறார்கள். துடுப்பாட்டக்கட்டுரைகள் கூட வேறு நூல்கள் எழுதப்படும் நேரத்தினைப் பயன்படுத்தியே உருவாகின்றன.

எல்லாத் தலைப்புக்களிலும் எழுதுவதனூடாக முழுமையடையலாம் என்பது தமிழ்ச்சூழலில் என்றைக்கும் வெற்றிபெறாது. அது ஆங்கிலச் சூழலில் வெற்றி பெற்றது என்பதற்காக இங்கே இறக்குமதி செய்து விடாப்பிடியாக இருப்பது மாட்டு வண்டி போகும் தெருவில் பனிச்சறுக்கு வண்டியை ஓட விடுவது போன்றதுதான். கோபி 05:41, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இங்கே என்னுடைய கருத்தையும் பதிவது நலம் என நினைக்கிறேன். இதுவரை மேலே சோடாபாட்டில் கூறியுள்ளவற்றுடன் உடன்படுகிறேன். ஏனெனில், எடுத்த எடுப்பிலேயே எல்லாம் சரியாக இருக்கும் ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்குவது எளிதன்று. தகவற் பிழைகள் யாராலும் நிகழலாம். அவற்றை முடிந்தளவு திருத்துவதே சரி. இதற்கு மாறாக ஒருவரின் கட்டுரைகளில் வரிக்கு வரி, வசனத்துக்கு வசனம் குற்றம் காண்பதாயின் அவ்வாறு குற்றம் காண்பவரின் ஆக்கங்களும் அதே முறையிற் கேள்விக்குள்ளாக்கப்படுவது இயல்பு. நான் என்னுடைய கட்டுரைகளைப் பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து அல்லது இந்தோனேசிய மொழியிலிருந்து மொழிபெயர்த்து எழுதியுள்ளேன். எனினும், ஆங்கிலக் கட்டுரைகளே முழுமையாகச் சரியானவை போற் சிலர் கருதுவது தவறு. அவற்றிலும் பல பிழைகள் இருக்கலாம். நூறு பேர் எழுதுமிடத்தில் நூறு பிழைகள் இருப்பின், ஆயிரம் பேர் எழுதுமிடத்தில் எத்தனை பிழைகள் இருக்கும்? என் கட்டுரைகளில் ஏற்பட்ட பிழைகளை நானே பின்னர் திருத்தியுள்ளேன். இன்னும் தவறுகள் இருக்கலாம். இது இவ்வாறிருக்க, ஒரே மாதிரியான பிழைகள் தமிழ் விக்கியெங்கும் காணப்படின், அதற்காகக் குறிப்பிட்ட ஒருவரையே தொடர்ந்து குற்றங் காண்பதாகக் கருத்துக் கூறுவது தவறு. அவ்வாறான சூழ்நிலை இங்கு உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. குறிப்பாக, புன்னியாமீன் தனக்கு ஏற்பட்ட ஏதோ ஆர்வத்தினால் தன்னுடைய நேரத்தை இதற்காகச் செலவழித்து முழு மூச்சாகச் செயற்பட்டார். இங்கும் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளிலும் அவரது கட்டுரைகளே தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவதைக் காண்கிறேன். அவர் செய்ததைத் தவறென்று கூறுவோர் ஏன் முன்னரே அதனை அவரிடம் எடுத்துரைக்கவில்லை? மாறாக, இப்போது இப்படிக் குற்றங் காண்பது ஒருவரது நேரத்தையும் முயற்சியையும் வீணடிப்பதல்லவா? ஏதேனும் கட்டுரையிற் தகவற் பிழை இருப்பதாகக் கண்டால் அதனைத் திருத்துவதை விடுத்து, இப்படி வரிக்கு வரி விமர்சனம் செய்வது விக்கியில் உள்ள ஆட்களை விரட்டியடிக்கலாமன்றோ.--பாஹிம் 07:21, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
பாஹிம், எனது நோக்கம் குற்றம் காண்பதோ விரட்டியடிப்பதோ அல்ல. அன்று அண்மைய மாற்றங்களில் கண்ட ஒரு கட்டுரையில் இத்தனை பிழைகள் இருந்தன. பிழைகளைத் திருத்துவது எவ்வாறு, இனிவருங்காலங்களில் பிழைகளைத் தவிர்ப்பது எவ்வாறு என்றே கேட்டேன். அதன் பொருள் துரத்தியடிப்பதா? எவ்வளவு இலகுவில் அடுத்த துருவத்துக்குப் போய்விட முடிகிறது?
அது ஒரு வார்ப்புருக் கட்டுரை. அதனாலேயே போட்டியிலும் என்றிருக்க வேண்டியது போட்டிகளிலும் என்றிருந்தது. ஏ-தரப் போட்டி என்பது சம்பந்தமில்லாமல் வந்திருந்தது. இணைப்புப் பார்க்கப்படாமல் இறக்குமதியாததால் பிழையாக இருந்தது. ஒரு தானியங்கி பயன்படுத்தியிருந்தால் முதலிரு பிழைகளையும் தவிர்த்திருக்கலாம். இன்னும் பத்தாயிரம் கட்டுரைகள் உருவான பின்னர் சொல்லாமல் இப்போதே சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்.
இக்கட்டுரைகள் திருத்தப்பட வாய்ப்புக்கள் குறைவு. ஆதலால் எழுதப்படும்போதே கவனத்துடன் எழுதப்பட வேண்டும். வெறும் வார்ப்புருக் கட்டுரைகளாக எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமில்லை என்கிறேன். இது இயல்பான வளர்ச்சியில்லை என்பதால் கவனம் வேண்டும் என்கிறேன். அந்தக் கவனம் இன்மையாலேயே இத்தனை பிழைகள் ஒரே பக்கத்தில் ஏற்பட்டுள்ளன என்கிறேன். கட்டுரை என்றால் பிழை வரத்தான் செய்யுமென்றால் அதனைக் குறைப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.
பிழைகளைத் திருத்துவது எவ்வாறு, இனிவருங்காலங்களில் பிழைகளைத் தவிர்ப்பது எவ்வாறு என்றே கேட்டேன். அதற்கான பதில் கட்டுரை என்றால் பிழை இருக்கத்தான் செய்யும் என்பதாக இருக்கும்போது இங்கே உரையாடுவதென்பதே பயனற்றதாக உள்ளது. கோபி 07:41, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]
விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து:
விக்கிப்பீடியாவை விமரிசிப்பவர்கள் அது ஒரு முறையான நோக்கம் கொண்டதன்று என்றும் முரண்பாடானது[11] என்றும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் ஓர் குற்றச்சாட்டு நம்பக ஆதார சான்றுகள் மீது கட்டப்படாது கருத்து ஒற்றுமை அடிப்படையில் பதிப்பிக்கப்படுகின்றது என்பதாகும்.[12] விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் சரி நுட்பம் ஒரு பிரச்சினை ஆகும்.[13] பிற விமர்சனங்கள் மையபடுத்துவது யாதெனில் காழ்ப்புணர்ச்சி ஏற்படுத்தும் இளகிய தன்மையும் அத்துடன் சரிபார்க்காத செய்திகளைச்[14] சேர்ப்பதும் ஆகும், இருந்த போதும் அப்படிப்பட்ட சீரழிவு பொதுவாக குறுகிய காலம் தான் நீடிக்கும் என்று புலமை சார்ந்த படைப்புகள் தெரிவிக்கின்றன.{[15][16]
எனவே இவை புதிதன்று.
பெரியசாமி தூரன் பக்கத்திலிருந்து:
அப்போதைய தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கம் செட்டியாரின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காகத் தொடங்கப்பட்ட தன்னாட்சி உரிமை உடைய தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட "கலைக்களஞ்சிய"த்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை வெளியிட்டார். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார்.
முறையான நோக்கம் கொண்ட கலைக்களஞ்சியத்தை வடிவமைக்க மேற்கூறிய செயற்பாடு தேவை. தன்னார்வலர்களைக் கட்டுப்படுத்தி காசும் செலவாகக்கூடாது தரமிக்க களஞ்சியமும் வேண்டுமென்பது குதிரைக்கொம்பாகவே இருக்கும்.
இந்த அரசியல் கலந்த உரையாடலில் தள்ளி நிற்க எத்தனை முயன்றும் தாங்காமல் எனது கருத்துக்களைக் கூறிவிட்டேன். இவை தவறெனில் முதலிலேயே ஒப்புக்கொள்கிறேன். மீண்டும் உரையாடலில் ஈடுபட விருப்பமில்லை.--மணியன் 08:10, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கோபியின் கருத்துகளுடன் முழுக்க உடன்படுகிறேன்.

//பம்பரம் கட்டுரை பல உரை திருத்தங்களுக்குப் பிறகு ஒரு/ஓர் போன்ற பிழைகளுடன் குறுவட்டுக்காக இறுதிப்பட்டிருந்ததைக் கண்டேன்; திருத்தினேன். அவ்வாறு திருத்துவது பெறுமதி சேர்க்கும் (value adding) செயலென நினைக்கிறேன். ஆனால் துடுப்பாட்டக்காரர்களைப் பற்றிய கட்டுரைகளைத் திருத்திக் கொண்டிருப்பது நேர விரயம் மட்டுமே.//

இது தான் யதார்த்தம். கூகுள் கட்டுரைகள் உருவான போதும் இதே போன்ற உரை திருத்தும் ஊக்கமின்மையைக் கண்டேன். கூகுள் அப்படித் தான் உருவாக்கும். மற்ற பயனர்கள் தான் சீர் செய்ய வேண்டும் என்று வாதம் அப்போது வரவில்லையே? கூகுள் பெருமளவில் கட்டுரைகளை உருவாக்குவதால், முதலில் இடும்போதே அவர்கள் இயன்ற அளவு பிழை இன்றி எழுத வேண்டும் என்று எதிர்பாத்தோமா இல்லையா? தனியொருவரின் உழைப்புக்குக் கூடுதலாக ஆள் வைத்து எழுதி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் பிழையுடன் உருவாகும் போது அவற்றைத் திருத்துவதற்கான வளம் நம்மிடம் இல்லை. எனவே தான் குறிப்பிட்ட பயனர் கட்டுரைகளுக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட பயனரோ "என்னைச் சுயமாக எழுத விடுங்கள், நான் விட்டு விடுகிறேன், நீங்கள் விட்டு விடுங்கள், வேண்டுமானால் கட்டுரையை நீக்கிக் கொள்ளுங்கள், என்னைத் தடுத்துக் கொள்ளுங்கள், நான் தொடர்ந்து ஆயிராமாயிரம் கட்டுரைகளை உருவாக்கப் போகிறேன்" என்கிறார். இது தான் பொறுப்பான விக்கி நடைமுறைகளுக்கு உகந்த செயலா?

எனக்கு விக்கியில் தொகுக்கத் தெரிந்தும் கூட, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகளில் தென்படும் பிழைகளைத் திருத்துவது இல்லை. அந்தப் பேச்சுப் பக்கங்களில் யார் என்ன உரையாடி இருக்கிறார்கள், எத்தனை பேர் கட்டுரைகளை எழுதினார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனக்குத் தேவை பிழையற்ற தகவல். இதையே தான் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வரும் வழமையான பார்வையாளர் ஒருவரும் எதிர்பார்ப்பார்?

எனவே,

  • ஏற்கனவே இருக்கக்கூடிய பிழைகளைக் களைவது எவ்வாறு?
  • இனி பிழைகள் ஏற்படுவதைத் தடுப்பது எவ்வாறு?

என்பது குறித்து உரையாடுமாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

@பாகிம், "ஏன் முன்பே சுட்டிக் காட்டவில்லை, ஏன் ஒரே பயனரின் கட்டுரைகளில் குறை காண்கிறீர்கள்" என்ற உங்கள் கேள்விகளுக்கான பதிலே முன்பே அளித்துள்ளேன். மதிப்புறு நற்பண்பு என்ற பகுதியின் இறுதியில் பாருங்கள்.

@சோடாபாட்டில்,

//தமிழர் நிலை என்ன என்று அறிவீர்கள. அவர்களுக்குத் தேவையானவை என நான் சிலவற்றை முடிவு செய்துள்ளேன், அதை மட்டும் செய்யுங்கள் என்றால், தமிழ் விக்கி இறந்து தான் போகும்.” வளர்ச்ச்சியும் வேண்டும் ஆனால் அது நாங்கள் நினைத்தபடியே வேண்டும் என்றால் எப்படிக் கிடைக்கும். தமிழ் விக்கி தன்னார்வலத் திட்டம். பயனர்களின் நேர/உழைப்பு உபரியே இதை உருவாக்குகிறது. அதனை ஓரளவு ஒழுங்கு படுத்த முடியுமேயன்றி மேலிருந்து சிலர் இங்கு போ, அங்கு போ, அதைச் செய், இதைச் செய் என்று வள மேலாண்மை செய்ய இயலாது. அப்படிச் செய்ய முயன்ற விக்கிகளும் பிற தன்னார்வலத்திட்டங்களும் மூடுவிழாவைச் சந்தித்துள்ளன. //

கிரந்தம் தொடர்பான உரையாடல் எழுந்த போது, "குறுந்தட்டுத் திட்டத்துக்குக் கூடுதல் உழைப்பு தேவை, எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள், வேறு எந்தப் பணியையும் செய்யாமல் ஏன் இந்த உரையாடலைச் செய்கிறீர்கள்" என்ற வாதத்தை நீங்கள் முன் வைத்தது இதே போன்ற வள மேலாண்மையா இல்லையா?--இரவி 08:16, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. குறுந்தகடு உருவாகும் நேரத்தில் மட்டும் முன்பே உரையாடி ஒப்புக்கொண்டபடி அட் அவ்வாறு செய்யக் கோரினேன். திட்டம் முடிந்த பின்னர் செய்ய வேண்டாம், எனக்கு பிடித்ததை மட்டும் செய்யுங்கள் என் அடுத்தவர்களை நான் என்றும் சொன்னதில்லை. யார் வளத்தையும் நான் மேலாண்மை செய்யவில்லை. ஆறு மாதங்களுக்கு முன் உரையாடி எடுக்கப்பட்ட இணக்க முடிவை (நான் கலந்து கொள்ளாது பிறரால் எடுக்கப்பட்ட முடிவை, ஆறுமாதங்களாக எவராலும் எதிர்க்கப்படாத ஒரு முடிவை) மீண்டும் கேள்விக்குட்படுத்த இது நேரமில்லை என்பதே (காலக்கெடு கொண்ட ஒரு திட்டத்தில்) அங்கு என் நிலைப்பாடு. என்னால் இயலாததை, நான் செய்யாததை, இணக்க முடிவில்லாததை பிறருக்கு மட்டும் உபதேசிக்கும் வழக்கமும் எனக்குக் கிடையாது.--சோடாபாட்டில்உரையாடுக 08:29, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]

சோடாபாட்டில், பேச்சு:நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பக்கத்தில் நீங்கள் செல்வாவுக்குத் தந்த முதல் பதில் பின்வருமாறு:

//ஆம் மறுப்பு உள்ளது. குறுந்தகடு திட்டத்தின் கட்டுரைகளில் இது ஒன்று. அருள் கூர்ந்து சீராகச் சென்று கொண்டிருக்கும் அத்திட்டத்தில் கிரந்தப் பயன்பாடு பற்றிய பழைய சர்ச்சைகளை கொண்டு வரவேண்டாம். இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்கும் போதே சர்ச்சைக்குரிய மாற்றங்கள் செய்ய வேண்டாம் என்று பேசிய பின்னரே முடிவு செய்தோம். கிரந்தம் பற்றிய மீண்டும் மீண்டும் அதே போன்ற உரையாடல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ் விக்கியில் பலரது நேரத்தையும் உழைப்பையும் வீணடித்து, தமிழ் விக்கி பற்றிய ஒரு கெட்ட பிம்பத்தை வெளியில் உருவாக்கியுள்ளது. இப்போது இந்தக் கட்டுரையிலும் இதை நுழைத்து 1001 வது தடவையாக பழைய விவாதங்களையே தொடர்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். “நிக்கொலசு கோப்பர்னிக்கசு” என்று எழுத விரும்புவோர் எழுதட்டும் “நிக்கோலஸ் காப்பர்நிக்கஸ்” என்று எழுத விரும்புவோர் எழுதட்டும். கிரந்தமற்றல் தேவையற்ற வீண் சர்ச்சைகளை வளர்த்து நமது நேரத்தை வீணடித்து விக்கியின் வளர்ச்சியினைத் தடுக்கிறதே ஒழிய ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிப்பதில்லை//

இதில்,

//ஆம் மறுப்பு உள்ளது. குறுந்தகடு திட்டத்தின் கட்டுரைகளில் இது ஒன்று. அருள் கூர்ந்து சீராகச் சென்று கொண்டிருக்கும் அத்திட்டத்தில் கிரந்தப் பயன்பாடு பற்றிய பழைய சர்ச்சைகளை கொண்டு வரவேண்டாம்.//

என்பதை மட்டும் இட்டு, ஆறு மாதங்களுக்கு முன் உரையாடி எடுக்கப்பட்ட இணக்க முடிவைச் சுட்டிக் காட்டி இருந்தாலே விசயம் முடிந்து இருக்கும். அந்தப் பக்கத்தில் அதற்குப் பிறகு யாரும் கிரந்தம் அகற்றினாலே ஆயிற்று என்று மல்லுக் கட்டவில்லையே?

//கிரந்தமற்றல் தேவையற்ற வீண் சர்ச்சைகளை வளர்த்து நமது நேரத்தை வீணடித்து விக்கியின் வளர்ச்சியினைத் தடுக்கிறதே ஒழிய ஆக்கப்பூர்வமாக எதையும் சாதிப்பதில்லை// என்று நீங்கள் சொல்வதற்கும்

ஒரே மாதிரியான பிழை மலிந்த ஆயிரமாயிரம் கட்டுரைகள் மற்றவர்களின் நேரத்தை வீணடித்து தமிழ் விக்கியின் வளர்ச்சியைத் தடுக்கிறது என்பதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஒரே கிரந்த உரையாடல் சிலருக்கு அரைத்த மாவாகவும் சிலருக்கு நேர விரயமாகவும் இருப்பது போலவே ஒரே மாதிரியான பிழைகள் உரை திருத்துவோருக்கு நேர விரயமே. நமக்கு இருக்கிற வளங்களுக்குள் கிரந்தம் போன்ற சர்ச்சைகளைத் தவிர்த்தால் தமிழ் விக்கி இன்னும் வளரும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதே போல் நமக்கு இருக்கிற வளங்களுக்குள் வேறு என்ன செய்தால் தமிழ் விக்கி வளரும் என்று பிறர் எண்ணக்கூடாதா? --இரவி 08:55, 28 சனவரி 2012 (UTC)[பதிலளி]