சராவதி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷராவதி (ಶರಾವತಿ)
ஜோக் அருவி ஜோக் அருவில் விழும் ஷராவதி ஆறு
நாடு இந்தியா
மாநிலம் கர்நாடகா
முதன்மை
நகரங்கள்
ஹொஷநகரா, ஹொன்னாவரா
நீளம் 128 கிமீ (80 மைல்)
வடிநிலம் 2,985 கிமீ² (1,153 ச.மைல்)
வெளியேற்றம் ஹொன்னாவரா
மூலம் அம்புதீர்த்தா
 - அமைவிடம் தீர்த்தஹல்லி தாலுக்கா, ஷிமோகா மாவட்டம், கர்நாடகா
 - உயரம் 730 மீ (2,395 அடி)
கழிமுகம் அரபிக்கடல்
 - அமைவிடம் ஹொன்னாவரா, உத்திர கன்னடா, கர்நாடகா

சராவதி ஆறு (Sharavati ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது தீர்த்தஹள்ளி வட்டத்தில் (தாலூக்காவில்) அம்புதீர்த்தா என்னும் இடத்தில் உற்பத்தி ஆகிறது. பின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது. ஜோக் அருவியும் இப்பகுதியில் தான் உருவாகிறது. பின் இந்த ஆறு ஹொனேவர் என்னும் இடத்தில் அரபிக் கடலில் கலக்கிறது.[1]

லிங்கன்மக்கி அணை இவ்வாற்றின் மீது பிரித்தானியர்களால் கட்டப் பட்டது. இரு நீர்மின் நிலையங்களும் இதன் மீது கட்டப்பட்டுள்ளன.

சராவதி ஆற்றுப் படுகை பல்லுயிர் வளம் நிறைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. A brief description of Ambutheertha is provided by Padma Ramachandran (2004-07-12). "Malnad splendour". Deccan Herald. பார்க்கப்பட்ட நாள் 2007-05-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராவதி_ஆறு&oldid=3524079" இலிருந்து மீள்விக்கப்பட்டது