அரசவல்லி சூரியன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசவல்லி சூரியநாராயணன் கோயில்
அரசவல்லி சூரியநாராயணன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
அரசவல்லி சூரியநாராயணன் கோயில் is located in ஆந்திரப் பிரதேசம்
அரசவல்லி சூரியநாராயணன் கோயில்
அரசவல்லி சூரியநாராயணன் கோயில்
ஆந்திரப் பிரதேசத்தில் அரசவல்லி சூரியனார் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:18°22′14″N 83°55′26″E / 18.3706607°N 83.9237704°E / 18.3706607; 83.9237704
பெயர்
శ్రీ సూర్యనారాయణ స్వామి దేవస్థానం:தெலுங்கு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்: ஸ்ரீகாகுளம்
அமைவு:அரசவல்லி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:ரத சப்தமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பஞ்சயாதனக் கட்டிடக் கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு
அமைத்தவர்:தேவந்திர வர்மன்
இணையதளம்:http://www.arasavallisungod.org/
அரசவல்லி சூரியக் கோயிலின் தீர்த்தக் குளம்

அரசவல்லி சூரியநாராயணன் கோயில் (Arasavalli Sun Temple) என்பது பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரியன் கோயிலாகும். இக்கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடகிழக்கில், ஒடிசா மாநிலத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அரசவல்லி கிராமத்தில் அமைந்துள்ளது.[1][2] இக்கோயில் கலிங்க மன்னர் தேவேந்திரவர்மனால் பொ.ஊ. 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3] மிகவும் சிதிலமடைந்த இக்கோயில், பொ.ஊ. 17 – 18-ஆம் நூற்றாண்டுகளில் திருப்பணி செய்யப்பட்டது.[4]

கோயில் அமைப்பு[தொகு]

இச்சூரியக் கோயில் வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். கோயில் மூலவரான சூரிய தேவனின் கருவறையின் நான்கு மூலைகளில் சிறிய கோயில்கள் அமைந்துள்ளது. மேலும் கோயில் விமானத்திற்கும், மகா மண்டத்திற்கு இடையே அந்தராளம் எனும் முற்ற வெளி அமைத்துக் கட்டப்பட்டுள்ளது.

முக்கிய விழாக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. Suryanarayana Swamy Temple
  3. "Historical Importance of the Temple". பார்க்கப்பட்ட நாள் 2017-03-16.
  4. Arasavalli, Temples of Andhra Pradesh, Abodes of Surya

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Arasavalli Sun Temple
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசவல்லி_சூரியன்_கோயில்&oldid=3844340" இலிருந்து மீள்விக்கப்பட்டது