ஜேம்சு சவுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் ஜேம்சு சவுத் (Sir James South) (அக்தோபர் 1785 - 19 அக்தோபர் 1867) பிரித்தானிய வானியலாளர் ஆவார்.

இவர் இலண்டன் வானியல் கழகத்தை நிறுவிட உதவினார். இவர் 1831 முதல் 1832 வரை அதன் தலைவராக இருந்தபோது 1831 இல் அரசு கட்டளைக்கு விண்ணப்பம் போடப்பட்டது. பின்னர் இது அரசு வானியல் கழகம் ஆகியது.

இவரும் ஜான் எர்ழ்செலும் இணைந்து 1824 இல் 380 மாறும் இரட்டை விண்மீன்களுக்கான அட்டவணையை எர்ழ்செல் கண்டுபிடித்த இரட்டை விண்மீன்களை மீண்டு நோக்கீடுகள் செய்து உருவாக்கினர். சவுத் அடுத்த ஆண்டே மேலும் 458 இரட்டை விண்மீன்களைத் தொடர்ந்து நோக்கீடுகள் செய்தார்.

இவர் 1826 இல் கோப்ளே பதக்கத்தையும் அதே ஆண்டில் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தையும் பெற்றார். இவர் 1831 இல் வீர இளவை பட்டம் பெற்றார். செவ்வாயிலும் நிலாவிலும் உள்ள மொத்தல் குழிப்பள்ளங்கள் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளன.இவர் 1826 இல் இருந்தே புதிய வான்காணகத்தில் புதிய பெரிய தொலைநோக்கிகளை நிலநடுவரைக்கு இணையாக நிறுவும் நிறப்பிறழ்வில்லாத எதிர்பலிப்பி அல்லது எதிர்தெறிப்பியுடன் அமைக்க திட்டமிட்டார்.[1] இவர் 1000 பவுண்டுக்குப் பாரீசின் இராபர்ட்-அகுலே சவுசாயிக்சிடம் இருந்து 12 அங்குலக் குவியப் பொருள்வில்லையை விலைக்கு வாங்கினார். இது அப்போது உலகில் உள்ள பெரிய நிறப்பிறழ்வற்ற பொருள்வில்லைகளை விட மிகப்பெரியதாக உள்ளபடி பார்த்துக் கொண்டார்.[1] இந்த வில்லைக்கான தொலைநோக்கியைகட்டி முடித்தார். ஆனால் அதை 1838 இல் பிரித்து விட்டார்.[2] அடுத்த பெரிய எதிர்தெறிப்பியை அதாவது 13.3 அங்குல எதிர்தெறிப்பியை1830 களில் தாமசு கிரௌப் மலையில் மார்க்ரீ வான்காணகத்தில் நிறுவினார் இதற்கான பொருள்வில்லையும் கவுசாயிக்சிடம் இருந்தே பெறப்பட்டது.[3] இவரது தொலைநோக்கியின் முதன்மையான சிக்கல் அதன் நிலநடுவரை நிறுவல் அமைப்பு தான்.[1]

இவர் மீது இவருக்கு நிலநடுவரை நிறுவல் அமைப்பைச் செய்து தந்த எட்வார்டு டிரப்டன், அதைச் சவுத் பிழையுடையதாக அறிவித்ததால் ஒரு வழக்கைத் தொடுத்தார்.அவ்வழக்கில் டிரப்டன் வெற்ரியுமீட்டினார். அந்த நிறுவல் அமைப்பைச் சவுத் தன் தொலைநோக்கியில் இருந்து கழற்றிவிட்டார். மாற்றாக தனியாக வாங்கிவைத்திருந்த 12 அங்குல வில்லையைப் பாதுகாத்து 1862 இல் டப்ளின் வான்காணகத்துக்குத் தந்தார்,.[1] இதை கிரப்பின் நிலநடுவரை நிறுவல் அமைப்பில் பொருத்தி அத்தொலைநோக்கி இன்னமும் அவ்வான்காணகத்தில் பயன்பாட்டில் உள்ளது.

இவர்தான் சுடீபன் குரூம்பிரிட்ஜுக்குப் பின்னர், 1806 இல் டிரப்டனால் உருவாக்கப்பட்ட குரூம்பிரிட்ஜ் கடப்பு வட்டத்துக்குச் சொந்தக்காரர் ஆனார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Title: The Observatory of the Late Sir James South Journal: Astronomical register, vol. 8, pp.196-199
  2. 2.0 2.1  Agnes Mary Clerke (1898). "South, James". Dictionary of National Biography 53. London: Smith, Elder & Co. 
  3. Refracting Telescopes of the 19th Century

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேம்சு_சவுத்&oldid=2246076" இலிருந்து மீள்விக்கப்பட்டது