வில்லியம் அண்டர் மெக்கிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் அண்டர் மெக்கிரியா
பிறப்பு13 திசம்பர் 1904
டப்லின்
இறப்பு25 ஏப்பிரல் 1999 (அகவை 94)
லெவெஸ்
கல்லறைLewes cemetery
படித்த இடங்கள்
பணிகணிதவியலாளர், வானியல் வல்லுநர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
விருதுகள்அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர், அரசு வானியல் கழகப் பொற்பதக்கம், Knight Bachelor, Keith Medal, Rayleigh Medal and Prize

சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா (Sir William Hunter McCrea) அகஉ (FRS) (13 திசம்பர் 1904 in டப்ளின் – 25 ஏப்பிரல் 1999)[1][2] ஓர் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

இவரது குடும்பம் 1905 இல் கெண்ட் நகருக்குச் சென்றது. பிறகு டெர்பிசயருக்குச் சென்றது. இவர் அங்கு செசுட்டர்பீல்டு இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தந்தையார் டெர்பிசயரின் சுடாவ்லியில் உள்ள நெதெர்தோர்ப் இலக்கணப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். இவர் 1923 இல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இங்கு இவர் கணிதவியல் கற்றார். இவர் அங்கு 1929 இல் இரால்ப் எச். பவுலரின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பின்னர் 1929 இல் எடின்பர்கு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் விரிவுரையாளர் ஆனார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் உயர்விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் 1936 இல் பெல்பாசுட்டு அரசி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையின் தலைவரானார். போரில் பணியாற்றிய பிறகு, 1944 இல் அரசு ஆல்லோவே கல்லூரியில் கணிதவியல் துறையில் சேர்ந்தார் (அரசு ஆல்லோவே வளாக மெக்கிரியா கட்டிடம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது). இவர் 1965 இல் சூசெக்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைசார்ந்த வானியல் மையத்தை உருவாக்கினார்.

கண்டுபிடிப்புகள்[தொகு]

இவர் 1928 இல் ஆல்பிரெக்ட் அன்சோல்டுவின் கருதுகோளைப் படித்துவிட்டு சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும் எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும் 1% மட்டும் பிற தனிமங்களால் ஆனது எனவும் கண்டுபிடித்தார் . இதற்கு முன்பு அனைவரும் சூரியன் இரும்பாலானது என நம்பியிருந்தனர். இதற்குப் பின்னர், அனைத்து விண்மீன்களிலும் நீரகம் உள்ளதை உணரலாயினர்.

இவர் 1964 இல்விண்மீன்களின் நீலத் தோற்றத்துக்கு உரிய விளக்கமாக பொருண்மை பரிமாற்ற இயங்குமுறையை முன்மொழிந்தார்.[3]

விருதுகள்[தொகு]

இவர் 1961 முதல் 1963 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் 1965 முதல் 1966 வரை பிரித்தானிய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஏ பிரிவுக்குத் தலைவராக விளங்கினார். இவர்1985 இல் வீரர் பட்டம் பெற்றார். இவர் 1976 இல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். மெக்கிரியா 1999 ஏப்பிரல் 25 இல் இலெவெசுவில் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Leon Mestel; Bernard Pagel (2007). "William Hunter McCrea. 13 December 1904 -- 25 April 1999: Elected FRS 1952". Biographical Memoirs of Fellows of the Royal Society 53: 223. doi:10.1098/rsbm.2007.0005. 
  2. Mestel, Leon (30 April 1999). "Obituary: Sir William McCrea – The Independent". London. http://www.independent.co.uk/arts-entertainment/obituary-sir-william-mccrea-1090453.html. பார்த்த நாள்: 20 July 2011. 
  3. McCrea, Monthly Notices of the Royal Astronomical Society, 128:147, 1964; Carney, Latham, and Laird, The Astronomical Journal, 129:466–479, 2005; Perets, and Fabrycky, The Astrophysical Journal, 697:1048–1056, 2009