சாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகெத் - 4 (ஐ ஈ டி - 1410) (Saket-4 (IET-1410) என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 110 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி கே எம் - 6 (TKM-6) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி, நீர்ப்பாசனம் (இறவை) மற்றும் மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4500 - 5000 கிலோ (45-50 Q/ha) மகசூல் தரவல்லது. குள்ளப் பயிரான 85 - 90 சென்டிமீட்டர் (85-90 cm) உயரம் வளரும் இந்த நெற்பயிரின் அரிசி, தடித்து நீண்டு வெண்ணிறத்தில் காணப்படுகிறது. மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சம்மு காசுமீர், மற்றும் பிகார், போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 19 - Saket-4 (IET-1410)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகெத்_-_4_(ஐ_ஈ_டி_-_1410)_(நெல்)&oldid=3243420" இலிருந்து மீள்விக்கப்பட்டது