பால்மன் - 579 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால்மன் - 579 (Palman-579) என்பது; 1973 - 1978 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஐஆர்ஆர்ஐ (IRRI) நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 2200 கிலோ (22 Q/ha) விளைச்சல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் பஞ்சாப் பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.[2]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 13 - Palman-579". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மன்_-_579_(நெல்)&oldid=3249610" இலிருந்து மீள்விக்கப்பட்டது