ரோகிணி பி டீ பீ - 36 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோகிணி பி டீ பீ - 36
Rohini (PTB-36)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பிடிபி-10 x ஐஆர்-8
வகை
புதிய நெல் வகை
காலம்
75 - 110 நாட்கள்
மகசூல்
2000 கிலோ
வெளியீடு
1973
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

ரோகிணி பி டி பி - 36 (Rohini (PTB-36) என்பது; 1973 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 75 - 110 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 ( PTB-10) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 ( IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 2000 கிலோ (20 Q/ha) விளைச்சல் தரவல்ல இதன் அரிசி, வெள்ளை நிறத்தில் நீண்டு தடித்துக் காணப்படுகிறது. மேலும் இவ்வகை நெற்பயிர் கேரள மாநிலத்தில் அதிகளவில் பயிரிடப்படுகின்றது.[2]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties : Page 1 - 9 - Rohini (PTB-36)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகிணி_பி_டீ_பீ_-_36_(நெல்)&oldid=3256669" இலிருந்து மீள்விக்கப்பட்டது