மன்னார் பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னார் பிரதேச சபை (Mannar Divisional Council) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். மன்னார் நகரசபைப் பகுதி தவிர்ந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 189.35 சதுர மைல்கள். இதற்குள் தலைமன்னார்த் தீவின் பெரும் பகுதியும், தலைநிலத்தில் உள்ள உயிலங்குளம் பகுதியும் அடங்கியுள்ளன. தலைமன்னார்த் தீவின் தெற்கு பகுதியில் மன்னார் நகரசபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ள ஒரு சிறு பகுதி தவிர ஏனைய பகுதிகள் கடலால் சூழப்பட்டுள்ளன. தலை நிலத்தில், இதன் வடக்கில் நீரேரியும்; கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும், மேற்கிலும் நானாட்டான் பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். மன்னார் பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்[தொகு]

மன்னார் பிரதேச சபைப் பகுதி 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 தலைமன்னார் MN48 தலைமன்னார் வடக்கு
KN49 தலைமன்னார் தெற்கு
KN52 தலைமன்னார் தொடர்வண்டி நிலையம்
3 தலைமன்னார்த்துறை MN50 தலைமன்னார்த்துறை மேற்கு
MN51 தலைமன்னார்த்துறை கிழக்கு
MN53 கட்டுக்காரன் குடியிருப்பு
3 துளுக்குடியிருப்பு MN54 துளுக்குடியிருப்பு
MN57 பேசாலை வடக்கு
4 பேசாலை MN55 பேசாலை மேற்கு
MN56 பேசாலை தெற்கு
5 சிறுத்தோப்பு MN58 சிறுத்தோப்பு
MN59 பெரியகரிசல்
MN60 ஓலைத்தொடுவாய்
6 புதுக்குடியிருப்பு MN61 புதுக்குடியிருப்பு
7 எருக்கலம்பிட்டி MN63 எருக்கலம்பிட்டி மேற்கு
MN64 எருக்கலம்பிட்டி வடக்கு
MN64 எருக்கலம்பிட்டி கிழக்கு
MN64 எருக்கலம்பிட்டி தெற்கு
MN64 எருக்கலம்பிட்டி மத்தி
8 தாழ்வுப்பாடு MN62 தோட்டவெளி
MN70 தாழ்வுப்பாடு
9 தாராபுரம் MN68 தாராபுரம் மேற்கு
MN69 தாராபுரம் கிழக்கு
10 உயிலங்குளம் MN86 திருக்கேதீஸ்வரம்
MN87 பெரியநாவற்குளம்
MN88 நாகதாழ்வு
MN89 நீலசேனை
MN90 கள்ளிகட்டைக்காடு
MN91 புதுக்கமம்
MN92 உயிலங்குளம்
MN93 மாதோட்டம்
MN94 வண்ணமோட்டை
MN95 உயிர்த்தராயன்குளம்
MN96 பரப்பாங்கண்டல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்_பிரதேச_சபை&oldid=3223854" இலிருந்து மீள்விக்கப்பட்டது