அசர்பைசானிய அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்ழ்சின் மால் ஆலன் நகைச்சுவை இசைக்கூத்தில் ஒரு காட்சி, அசர்பைசான் அரசு கல்விசார் இசைக்கூத்து, குழும நடன அரங்கு, 1929/29

அசர்பைசானிய அரங்கு (Azerbaijani theatre, அசர்பைஜான்: Azərbaycan teatrı) என்பது அசர்பைசான் நாட்டு மக்களின் அரங்கு ஆகும்.[1]

வரலாறு[தொகு]

அசர்பைசானிய அரங்குக் கலையின் வாயில்கள் பண்டைய விடுமுறைகளிலும் நடனங்களிலும் அமைகிறது.[1]

தேசிய "கோசு-கோசா" காட்சி. ஓவியர் அசீம் அசீம்சாதே, 1930

அரங்கு இயக்கக் கூறுகள் அம்மக்களின் பல்வேறு ஆக்க வகைகளான விளையாட்டு, விளையாட்டுப் பாடல்கள், திருமணப் பழக்க வழக்கங்கள், பண்டைய விடுமுறைகள் ஆகியவற்றில் மிளிர்கின்றன. விளையாட்டுகளில் “கிசுலான்பாக்” – கண்ணாமூச்சி, “'கோசால்திகாக்” – போலோ விளையாட்டு ஆகியனவும் விளையாட்டுப் பாடல்களில் “கெபெனெக்” – பட்டாம்பூச்சிப் பாடல், “பானோவிசா” – ஊதாப் பாடல் ஆகியனவும் திருமணப் பழக்க வழக்கங்களில் “நிசான்” – உறுதிப்பாடு, “துவாக்கல்மா” – மணமகள் திரைவிலக்கல், “தோய்” – திருமணம்) ஆகியனவும் விடுமுறைகளில் “நோவுரூசு” – இளவேனில் வருகை, “கேவ்-சேச்” – இளவேனில் ஆயத்தப்பாடு ஆகியனவும் அமையும்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Театральная энциклопедия. Азербайджанский театр". Archived from the original on 2011-03-09. பார்க்கப்பட்ட நாள் 2017-03-08.
  2. БСЭ. Азерб. ССР. Театр и кино. стр. 479
  3. "Азербайджанский театр". Archived from the original on 2011-03-09. பார்க்கப்பட்ட நாள் 2017-03-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைசானிய_அரங்கு&oldid=3540544" இலிருந்து மீள்விக்கப்பட்டது